தமிழகத்தின் மிக நீளமான பாலம்… திருவான்மியூர் – உத்தண்டி வரை 14.2 கி.மீ நீளமான மேம்பாலம் – தமிழக அரசு அறிவிப்பு
Traffic Relief Ahead: சென்னை திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை 14.2 கி.மீ நீளத்துக்கு ரூ.2,100 கோடி செலவில் மிக நீளமான மேம்பாலம் கட்டப்படவுள்ளது. இந்த பாலம் மூலம் மாமல்லபுரம், புதுச்சேரி செல்லும் பயணிகள் போக்குவரத்து நெரிசல் இன்றி பயணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை, ஆகஸ்ட் 27: தமிழ்நாட்டில் மிகப்பெரிய முன்னேற்றமாக சென்னை திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை 14.2 கி.மீ தொலைவில் மிக நீண்ட பாலம் கட்டப்படவுள்ளது. இந்த பாலமானது ரூ.2,100 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள இந்த மேம்பாலம், மாநில அரசால் திட்டமிடப்படும் மிக நீளமான மேம்பாலமாகும். இந்த மேம்பாலம் திருவான்மியூர் டைட்டல் பார்க்கில் இருந்து துவங்கி உத்தண்டி வரை நீள்கிறது. இதன் மூலம் பயண நேரம் 15 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மாமல்லபுரம் சுற்றுலாதளங்களுக்கு செல்பவர்கள் போக்குவரத்து நெரிசல் இன்றி செல்ல இந்த பாலம் உதவிகரமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த பாலத்தால் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள்
தமிழக சாலை வசதி மேம்பாட்டில் முக்கிய முன்னேற்றமாக திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை 14.2 கி.மீ நீளமான நான்கு வழிச்சாலை மேம்பாலம் கட்டப்படவுள்ளது. இதில் 16 முதல் 20 மீட்டர் அகலத்தில் பாதாரிகளுக்கு நடைபாதையும் உருவாக்கப்படுகிறது. இந்த பாலம் மிகவும் நெரிசலான 13 சந்திப்புகளை தாண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எல்பி ரோடு ஜங்சன், திருவான்மியூர் ஆர்டிஓ அலுவலகம், நீலாங்கரை, இஞ்சம்பாக்கம், அக்கரை போன்ற இடங்களில் வாகனம் வெளியேற வசதி உருவாக்கப்படும்.
இதையும் படிக்க : வரலாற்று சின்னம்.. அகற்றப்படும் பழைய பாம்பன் பாலம்.. டெண்டர் அறிவிப்பு!




தமிழக சாலை வசதி மேம்பாட்டில் பெரிய முன்னேற்றமாக, திருவான்மியூரிலிருந்து உதண்டி வரை 14.2 கி.மீ நீளமான நான்கு வழிச் சாலை பால் மேம்பாலம் (Elevated Corridor) கட்டப்படவுள்ளது. முன்னதாக மதுரை – நத்தம் சாலையில் 7 கி.மீ தொலைவில் கட்டப்பட்ட பாலமே தமிழகத்தின் மிக நீளமான பாலம் என்ற பெருமையை பெற்றிருந்தது. ரூ.2,100 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள இந்தத் திட்டம், மாநில அரசால் இதுவரை திட்டமிடப்பட்ட நீளமான மேம்பாலமாகும்.
சுற்றுலா பயணிகளுக்கு பலன்
தற்போது திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை பயணம் செய்ய சுமார் ஒரு மணி நேரம் ஆகிறது. இந்த மேம்பாலம் உருவான பின், இந்த பயண நேரம் 15 முதல் 20 நிமிடங்கள் குறையும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மாமல்லபுரம், புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு சுற்றுலா செல்வோர் இந்த மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசலின்றி விரைவாக செல்ல முடியும். அதே போல ஓஎம்ஆர் சாலைக்கு மாற்றுப் பாதையாகவும் இந்த மேம்பால்தை பயன்படுத்த முடியும்.
இதையும் படிக்க : ராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி.. அரசு எடுத்த நடவடிக்கை..
இந்த திட்டம் தனியார் பங்குதாரர்கள் மற்றும் வங்கி கடன் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது. இதனால் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என கூறப்படுகிறது. ஆனால் நாம் பயணிக்கும் தொலைவுக்கு ஏற்ப கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. தமிழ்நாடு நெடுஞ்சாலை ஆணையம் இந்த திட்டத்தை மேற்கொள்கிறது.
இதற்கு முன் எல்.பி.ரோடு, திருவான்மியூர் ஆர்டிஆ ஆகிய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தனித்தனி மேம்பாலம் அமைக்கும் திட்டம் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் தற்போது அதனை ஒரே நீளமான மேம்பால திட்டமாக மாற்றி நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.