தவெக கூட்டணிக்கு நோவா? பிரேமலதா சொன்ன முக்கிய பாயிண்ட்.. விஜய்க்கு அட்வைஸ்
TVK Chief Vijay : 2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய் தனித்து நின்றால் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக தவெக கூட்டணி அமைக்கும் என தகவல்கள் கசிந்த வண்ணம் இருக்கும் நிலையில், பிரேமலதா இவ்வாறு கூறியுள்ளார்.

சென்னை, ஆகஸ்ட் 29 : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் (TVK Chief Vijay) வருகை 2026 சட்டப்பேரவை தேர்தலில் (2026 Assembly Election) தாக்கத்தை ஏற்படுத்தும் என தேமுதிக பொதுச் செயலார் பிரேமலதா (Premalatha Vijayakanth) விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 2006 சட்டப்பேரவை தேர்தலில் விஜயகாந்த் யாருடனும் கூட்டணி இல்லாதமல் தனித்து போட்டியிட்டார் எனவும் அதே போல விஜய் தனித்து நின்றால் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார். 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும 8 மாதங்களே உள்ளன. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். திமுக கூட்டணி கட்சிகள், அதிமுக கூட்டணி கட்சிகள் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர். கூட்டணி அனைத்து மட்டத்திலும் வலுப்படுத்த பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர்.
மேலும், தேமுதிக, பாமக இன்னும் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்மவாக அறிவிக்கவில்லை. மேலும், நாம் தமிழர் கட்சி வழக்கம் போல் தனித்தே போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், புதிதாக களத்திற்கு வந்துள்ள விஜயின் அரசியல் நடவடிக்கை பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. அவர் தனித்து போட்டியிடுவாரா அல்லது கூட்டணி சேர்ப்பாரா என்ற பல கேள்விகள் எழுந்துள்ளது. அதே நேரத்தில் அவர் திமுக, பாஜக மேடைகளில் விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், அவர் கூட்டணியில் சேருவது என்பது கேள்விக்குறிதான்.




Also Read : ’சீமான் சொன்னது தான் உண்மை’ விஜய் குறித்து பேசிய பிரேமலதா!
“விஜயின் வருகை 2026 தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும்”
சமீபத்தில் கூட, மதுரையில் தனது கட்சி மாநாட்டை விஜய் நடத்தினார். விஜயகாந்த் தனது அரசியல் காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையே விஜய் பின்பற்றி வருகிறார். அவரது பாணியிலேயே ஒவ்வொரு நகர்வையும் எடுத்து வருகிறார். உதாரணமாக, விஜயகாந்த் தனது அரசியல் பயணத்தை மதுரையில் தொடங்கி நிலையில், தனது இரண்டாவது மாநாட்டை விஜய் மதுரையில் நடத்தினார்.
அந்த மாநாட்டை விஜயகாந்த்தை தனது அண்ணன் என குறிப்பிட்டு விஜய் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால், தேமுதிக தவெக கூட்டணி அமையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சமீபத்தில் கூட பேசிய பிரேமலதா விஜயகாந்த், விஜயால் விஜயகாந்த் ஆக முடியாது என்றும் கேப்டனுக்கு நிகர் கேப்டன் மட்டுமே என தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முக்கிய விஷயத்தை பகிர்ந்துள்ளார்.
விஜயின் வருகை 2026 தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த பிரேமலதா, “கேப்டன் 2006ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டார். அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டோம். விஜய் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தனித்து நின்றால் தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும்” எனக் கூறினார். இதன் மூலம், தவெக கூட்டணியில் தேமுதிக இடம்பெறாதது போல தெரிகிறது. இருப்பினும், கூட்டணி குறிதுது 2026 ஜனவரியில் நடக்கும் மாநாட்டில் பிரேமலதா அறிவிக்க உள்ளார்.
Also Read : த.வெ.க கட்சிக்கு எழுந்த புதிய சிக்கல்.. ஆட்டோ சின்னம் இல்லையாம்.. புதிய சின்னம் தேர்வு செய்ய முனைப்பு..
மேலும் பேசிய அவர், “தினமும் பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன். ஆனால் மக்கள் பிரச்னையை தவிர்த்துவிட்டு, போகும் இடமெல்லாம் கூட்டணி குறித்து விஜய் குறித்தும் கேள்வி எழுப்பப்படுகிறது. இனி எந்த இடத்திலும் விஜய் குறித்து பேசமாட்டேன்” என கூறினார்.