Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

’சீமான் சொன்னது தான் உண்மை’ விஜய் குறித்து பேசிய பிரேமலதா!

Premalatha On TVk Chief Vijay : விஜயகாந்த் உடல்நலம் சரியில்லாதபோது, விஜய் அவரை சந்திக்கவில்லை என சீமான் கூறியது உண்மை தான் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். இதுபற்றி நானும் விஜயிடம் கேட்பேன் எனவும் பிரேமலதா தெரிவித்துள்ளார். தவெக தலைவர் விஜய் மாநாட்டில் விஜயகாந்த்தை அண்ணன் என குறிப்பிட்டு பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

’சீமான் சொன்னது தான் உண்மை’ விஜய் குறித்து பேசிய பிரேமலதா!
பிரேமலதா விஜயகாந்த் - தவெக தலைவர் விஜய்Image Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 24 Aug 2025 11:15 AM

சென்னை, ஆகஸ்ட் 24 :  விஜயகாந்த் உடல்நலம் சரியில்லாதபோது, விஜய் (TVK Chief Vijay) அவரை சந்திக்கவில்லை என சீமான் கூறியது உண்மை தான் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா (Premalatha Vijayakanth) தெரிவித்துள்ளார். மேலும், விஜயகாந்த் இறந்தபிறகு வந்து பார்த்தார் என்றும் இதுபற்றி நானே அவரிடம் கேட்பேன் எனவும் பிரேமலதா கூறியுள்ளார்தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடந்ததுது. இந்த மாநாட்டில் பேசிய விஜய், திமுக மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்தார். தனது கொள்கை எதிரி பாஜக என்றும் அரசியல் எதிரி திமுக என்றும் மீண்டும் உறுதிப்படுத்தினார். அதோடு, பாஜகவுடன் கூட்டணி அமைத்த அதிமுகவையும் மறைமுகமாக அவர் விமர்சித்து இருந்தார். அதோடு, எம்.ஜி.ஆர், அண்ணாவின் கொள்கைகளை தான் பின்பற்றுவதாக உறுதிப்படுத்தினார்.

மேலும், விஜயகாந்த் குறித்து மாநாட்டில் அவர் பேசினார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதாவது, அண்ணன் விஜயகாந்த் என்று குறிப்பட்டு, எம்ஜிஆர் போன்று குணம் படைத்த என் அண்ணன் புரட்சித் கலைஞர் விஜயகாந்துடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்றும் அவர் இதே மதுரை மண்ணை சேர்ந்தவர் என்றும் அவர் கூறினார்இதன் மூலம் தேமுதிகவை தங்கள் கூட்டணியில் சேர்க்க விஜய் முயற்சிக்கிறாரா என்று கேள்வியும் எழுந்தது. கூட்டணியை கட்டமைக்க விரும்பும் விஜய், அதற்கான சமிக்ஞையாகவே விஜயகாந்த் பற்றி பேசியது பார்க்கப்படுகிறது.

Also Read : த.வெ.க கட்சிக்கு எழுந்த புதிய சிக்கல்.. ஆட்டோ சின்னம் இல்லையாம்.. புதிய சின்னம் தேர்வு செய்ய முனைப்பு..

’சீமான் சொன்னது தான் உண்மை’

இதற்கிடையில்,  இதற்கிடையில், தவெக தலைவர் விஜயை சீமான் கடுமையாக விமர்சித்தார். விஜயகாந்த் உயிருடன் இருக்கும்போது, அவரை நீங்கள் பார்க்கவோ, அவரது கட்சிக்கு ஆதரவாகவோ நீங்கள் பேசவில்லை என்று கூறினார். இப்போது, மேடையில் அண்ணன் என சொல்லி வருகிறார் என சீமான விமர்சித்தார். இந்த நிலையில், சீமானின்  பேச்சு  தேமுதிக பொதுச் செயலளார் விஜயகாந்த் பதிலளித்துள்ளார். 

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளம் தேடி இல்லாம் நாடி என்று பரப்புரையை மேற்கொண்ட பிறகு, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவரிடம் சீமான் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், “தலைவர் விஜயகாந்த் உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோது, விஜய் அவரை வந்து சந்திக்கவில்லை.

Also Read : திக்குமுக்காடச் செய்த மதுரை மாநாடு – த.வெ.க தலைவர் விஜய் அறிக்கை..

ஆனால், இறந்த பிறகு விஜய் அவரை சந்தித்தார். இது பற்றி நானே அவரிடம் நேரில் கேட்பேன். உலகம் அறிந்த உண்மையை சீமான் உரக்க சொல்லி இருக்கிறார். அது தான் உண்மை. அவர் அண்ணன் சொல்கிறார். எங்களை பொறுத்தவரை தம்பி அவ்வளவு தான்என கூறினார்முன்னதாக பேசிய பிரேமலதா, “மதுரை மாநாட்டில் தமிழக வெற்றி கழக தலைவர், விஜயகாந்தை அண்ணன் என குறிப்பிட்ட நிலையில், விஜய் எங்களுக்கு தம்பிதான். இது அரசியலுக்குப் பிறகு உருவான உறவல்லஎனக் கூறியிருந்தார்.