Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மனைவியுடன் வேறுநபர்.. இருவரையும் தலை துண்டித்து கொன்ற கணவர்!

Kallakurichi Crime News: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மனைவிக்கும் வேறொருவருக்கும் உள்ள தொடர்பை அறிந்த கணவர் கொளஞ்சி, இருவரையும் தலை துண்டித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் வெளியூருக்குச் சென்றதாக நினைத்து, மனைவி லட்சுமி மற்றும் தங்கராசு தனிமையில் இருந்த போது கொலை நடந்துள்ளது.

மனைவியுடன் வேறுநபர்.. இருவரையும் தலை துண்டித்து கொன்ற கணவர்!
கள்ளக்குறிச்சி இரட்டைக்கொலை
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 11 Sep 2025 17:01 PM IST

கள்ளக்குறிச்சி, செப்டம்பர் 11: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மனைவி மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த நபர் ஆகிய இருவரை தலை துண்டித்து கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய கணவர் வெளியூர் சென்றிருப்பதாக நினைத்து இருவரும் தனிமையில் இருந்த நிலையில், இருவரையும் நேரில் பார்த்த ஆத்திரத்தில் கணவர் கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என பார்க்கலாம். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மலைக்கோட்டாலம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி. 60 வயதான இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கலியம்மாள் என்ற மனைவியும், ஐந்து குழந்தைகளும் இருந்தனர். இதில் இரண்டு குழந்தைகள் இறந்துவிட்ட நிலையில் கலியம்மாள் கொளஞ்சியைப் பிரிந்து தனது மூன்று குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

2வதாக திருமணம் செய்த கொளஞ்சி

இதனைத் தொடர்ந்து கொளஞ்சி நாட்டார்மங்கலத்தை சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. இரண்டாவது மகள் கல்லூரியிலும், மூன்றாவது மகள் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில் கொளஞ்சியின் வீட்டு மொட்டை மாடியில் இன்று காலை லட்சுமி மற்றும் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும் தலை துண்டிக்கப்பட்ட நிலையிகொலை ல் சடலமாக கிடந்தனர்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக வரஞ்சரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், காவல் ஆய்வாளர் ராபின்சன், வரஞ்சரம் காவல் உதவி ஆய்வாளர் ராஜகுமார் தலைமையிலான போலீசார் இறந்து கிடந்தவர்களின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் அவர்களின் உடல் அருகில் கிடந்த ஒரு செல்போனை வைத்து விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்யப்பட்ட ஆண் அப்பகுதியைச் சேர்ந்த தங்கராசு என்பது தெரியவந்தது இதனிடையே தலை துண்டித்து இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த தகவல் காட்டு தீயாய் அப்பகுதியில் பரவியது, இதனால் அங்கு கிராம மக்கள் திரண்டு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருமணத்தை மீறிய தொடர்பால் விபரீதம்

இப்படியான நிலையில் இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பான அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது தங்கராசுவுக்கும் லட்சுமிக்கும் இடையே ஏற்கனவே பழக்கம் இருந்துள்ளது. இது நாளடைவில் திருமணத்தை மீறிய தொடர்பாக மாறியுள்ளது. அவ்வப்போது கொளஞ்சி கூலி வேலை செய்வதால் வெளியூர் சென்றுவிடுவார். இதனை வசதியாக பயன்படுத்திக் கொண்ட இருவரும் தனிமையில் நேரம் செலவிட்டு வந்துள்ளனர்.

Also Read:  முதலிரவை வீடியோ எடுத்து இளம்பெண் மிரட்டல்.. காரைக்குடியில் சிக்கிய கும்பல்!

இந்த விவகாரம் கொளஞ்சிக்கு நாளடைவில் தெரிய வந்த நிலையில் அவர் தன் மனைவியும் தங்கராசுவையும் தனித்தனியாக சந்தித்து கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்கள் தங்கள் தொடர்பை கைவிட மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரத்தில் இருந்த கொளஞ்சி இருவர் மீதும் கொலை வெறியில் இருந்துள்ளார். இருவரையும் கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தார்.

தலைகளுடன் சிறைக்கு சென்றார்

அதன்படி நேற்று இரவு வெளியூர் செல்வதாக தனது மனைவி லட்சுமியிடம் கூறிவிட்டு கொளஞ்சி அருகிலுள்ள ஓரிடத்தில் மறைந்து கொண்டார். இதனையடுத்து உடனடியாக தங்கராசுவை செல்போனில் அழைத்த லட்சுமி கணவர் வெளியூர் சென்ற விவரத்தை கூறியுள்ளார். பின்னர் இருவரும் இரவு நேரத்தில் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று தனிமையில் இருந்துள்ளனர். இதற்கிடையில் தங்கராசு தனது வீட்டுக்கு செல்வதை அறிந்து கொண்ட கொளஞ்சி அவரை பின்தொடர்ந்து ஓரிடத்தில் ஒளிந்து கொண்டார்.

சிறிது நேரம் காத்திருந்த அவர்,  கொடுவாளை எடுத்துக்கொண்டு மாடிக்கு சென்ற நிலையில் அப்போது லட்சுமி தங்க ராசாவும் உல்லாசமாக இருந்ததை கண்டு ஆத்திரமடைந்துள்ளார். கொடுவாளால் இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார். இந்த தாக்குதலில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Also Read: என்னுடன் பேச மாட்டியா?.. பெண்ணை உயிருடன் எரித்த நபர்.. உ.பியில் பகீர் சம்பவம்!

ஆனாலும் ஆத்திரம் தீராத கொளஞ்சி இருவரின் தலைகளையும் துண்டாக வெட்டி எடுத்தார். பின்னர் அதனை ஒரு பாலிதீன் கவரில் வைத்து கட்டப்பையில் போட்டுக்கொண்டு தனது வீட்டில் இருந்த பைக்கை எடுத்துக் கொண்டு கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் வந்துள்ளார். அங்கிருந்து பேருந்து மூலம் வேலூர் மத்திய சிறைச்சாலைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்த போலீசாரிடம் நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்தார்.

இதற்கிடையில் வேலூர் போலீசார் களஞ்சியை பாகாயம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட லட்சுமி மற்றும் தங்கராசு ஆகியரின் உடல்களை போலீசார் கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் .இந்த சம்பவம் தொடர்பாக வரஞ்சுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.