கராத்தே கிளாஸ் வந்த மாணவிகளின் அம்மா டார்கெட்.. சிக்கிய மாஸ்டர்!
திருநெல்வேலியில் கராத்தே பயிற்சி அளித்த மாஸ்டர் அப்துல் வஹாப் என்பவர், வகுப்புக்கு வரும் மாணவிகளின் அம்மாக்களிடம் நைசாக பேசி தனது ஆசைக்கு பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களை பொருளாதார ரீதியாகவும் சுரண்டியுள்ளது தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

திருநெல்வேலி, செப்டம்பர் 10: திருநெல்வேலியில் தனது கராத்தே பயிற்சி வகுப்புக்கு வந்த மாணவியர்களின் அம்மாக்களிடம் ஆசை வார்த்தை கூறி தனது பாலியல் ஆசைக்கு பயன்படுத்தி வந்த கராத்தே மாஸ்டர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியை அடுத்து நரசிங்கநல்லூர் என்ற பகுதி உள்ளது. இங்குள்ள பொன்விழா நகரை சேர்ந்தவர் அப்துல் வஹாப். இவர் கராத்தேவில் டிப்ளமோ பட்டம் பெற்ற நிலையில் டவுன் கோடீஸ்வரன் நகர் பகுதியில் கராத்தே வகுப்பு மற்றும் பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதியில் துப்பாக்கி சூடும் பயிற்சி வகுப்புகளை நடத்தி வந்திருக்கிறார்.
மாணவிகளின் அம்மா இலக்கு
இவரின் பயிற்சி மையங்களில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். வெளி உலகத்திற்கு கராத்தே மாஸ்டர் மற்றும் துப்பாக்கி சூடும் பயிற்சி அளிக்கும் நபராக வலம் வந்த அப்துல் வஹாப், தனிப்பட்ட முறையில் பெண்களை ஆசை காட்டி மோசம் செய்வதில் வல்லவராகவும் இருந்துள்ளார். அதன்படி தனது பயிற்சி மையத்திற்கு வரும் மாணவிகளின் அம்மாக்களை குறி வைத்து தனது சில்மிஷ வேலைகளை காட்டத் தொடங்கியுள்ளார்.
முதலில் அவர்களை நோட்டமிட்டு சில பெண்களை தனக்கான லிஸ்டில் தேர்வு செய்துள்ளார். பின்னர் அவர்களிடம் சாமர்த்தியமாக பேச்சுக் கொடுத்து செல்போன் எண்களை பெற்றுள்ளார். அதன் பிறகு மெசேஜில் தொடங்கி போன் கால் வரை பேசி பெண்களை தனது வலையில் வீழ்த்தியுள்ளார். மேலும் அந்தப் பெண்களை பாலியல் ரீதியாகவும் பயன்படுத்தி வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் சம்பந்தப்பட்ட பெண்களுடன் தனியாக இருக்கும் நேரத்தை வீடியோவாக பதிவு செய்து தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அந்த பெண்களிடம் பணம் நகையை பறித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.




Also Read: முதலிரவை வீடியோ எடுத்து இளம்பெண் மிரட்டல்.. காரைக்குடியில் சிக்கிய கும்பல்!
பேச மறுத்த பெண் மீது தாக்குதல்
இந்த நிலையில்தான் சுத்தமல்லி பகுதியில் செயல்படும் ஒரு டீக்கடையில் வேலை செய்யும் ஊழியரின் 13 வயது மகள் அப்துல் வஹாப்பின் கராத்தே பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளார். அந்த சிறுமியின் தாய் தினமும் காலையில் சிறுமியை பயிற்சி மையத்திற்கு அழைத்துச் செல்வது வழக்கம். அப்போது அப்துல் வஹாப் அந்த பெண்ணிடம் பேசி செல்போன் எண் பெற்று பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் சுமார் நான்கு ஆண்டுகள் நீடித்து வந்துள்ளது.
இதற்கிடையில் இந்த பழக்கம் அந்தப் பெண்ணின் கணவருக்கு தெரிய வரவே அவர் மனைவியை கண்டித்துள்ளார். அதனால் அந்த பெண் அப்துல் வஹாப்புடன் சமீப காலமாக பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று அப்துல் வஹாப் நேராக அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு, நான் போன் செய்தால் ஏன் எடுக்கவில்லை எனக் கூறி அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
மேலும் தான் அழைக்கும் போது தன்னுடன் வந்து நேரம் செலவிட வேண்டும் என மிரட்டும் வகையில் பேசிவிட்டு சென்றதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் சத்தம் போட்டுள்ளார். இதனால் அக்கம் பக்கத்தில் அங்கு கூடினர். ஆனால் அதற்குள் அப்துல் வஹாப் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.
Also Read: சிறுமி கடத்தல்.. சினிமாவை மிஞ்சிய ட்விஸ்ட்.. கடைசியில் சிக்கிய இளைஞன்!
எட்டு பெண்கள் பாதிப்பு
இப்படியான நிலையில் அந்தப் பெண் உடனடியாக தன் கணவருடன் சுத்தமல்லி காவல் நிலையத்தில் அப்துல் வஹாப் மீது புகாரளித்தார். அதன் பெயரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அப்துல் வஹாப் தனது வலையில் சுமார் எட்டு பெண்களை ஏமாற்றி இருப்பது தெரியவந்தது. வெளியே தெரிந்தால் அவமானம் என்பதால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் அமைதி காத்ததும் தெரியவந்தது. இதனையடுத்து வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து இரவோடு இரவாக அப்துல் வஹாப்பை போலீசார் கைது செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக புகார் அளிக்க முன் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்துள்ளனர்.