Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கள்ளக்காதலர்களுக்கு நகையை திருடி கொடுத்த மனைவி.. கணவன் மீது பழி கூறி புகார்.. விசாரணையில் வெளிவந்த ஷாக் தகவல்கள்!

Woman Framed Husband as a Thief | மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் வீட்டில் இருந்த நகைகளை எடுத்து தனது கள்ளக்காதலர்களுக்கு கொடுத்த நிலையில், கணவர் தான் திருடியதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கள்ளக்காதலர்களுக்கு நகையை திருடி கொடுத்த மனைவி.. கணவன் மீது பழி கூறி புகார்.. விசாரணையில் வெளிவந்த ஷாக் தகவல்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 13 Sep 2025 07:14 AM IST

மும்பை, செப்டம்பர் 13 : மும்பையில் (Mumbai) கள்ளக்காதலர்களுக்கு நகையை விற்று பணம் கொடுத்த பெண், கணவன் மீது பழி கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகாரின் அடிப்படையில் வீட்டிற்கு சென்று சோதனை நடத்திய போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில் அந்த பெண்ணின் செல்போனை சோதனை செய்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்காதலனுடன் வாழ கணவன் மீது பழிபோட்ட பெண்

மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ஊரிமிளா. இந்த தம்பதிக்கு திருமணமாகி 18 வயதில் மகள் ஒருவர் இருக்கிறார். ஊர்மிளாவுக்கு அதே பகுதியில் வசிக்கும் வேறு ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறிய நிலையில், அவருடன் தனிமையில் இருந்து வந்துள்ளார். இது ஒருபுறம் இருக்க ஊர்மிளாவின் மகளின் காதலன் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அவருடன் ஊர்மிளாவுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அவருடனும் செல்போனில் பேசுவது, தனிமையில் இருப்பது உள்ளிட்டவற்றை அவர் செய்து வந்துள்ளார்.

இதையும் படிங்க : வாஷிங் மெஷினால் தகராறு.. தலை துண்டிக்கப்பட்டு கொலை.. இந்தியருக்கு நேர்ந்த கொடூரம்!

நகைகளை விற்று காதலர்களுக்கு கொடுத்த பெண்

இந்த நிலையில், தனது காதலனுடன் சேர்ந்து வாழ நினைத்த ஊர்மிளா வீட்டில் இருந்த நகைகளை விற்று தனது காதலனுக்கு ரூ.10 லட்சம் பணம் கொடுத்துள்ளார். இதேபோல தான் தொடர்பில் இருந்த தனது மகளின் காதலனுக்கும் ஒரு நகையை அவர் எடுத்து கொடுத்துள்ளார். வீட்டில் இருந்த மொத்த நகைகளையும் காதலர்களுக்கு கொடுத்த நிலையில், கணவருக்கு தெரிந்தால் சிக்கல் ஆகும் என நினைத்த அவர், கணவர் மீதே பழி போட்டுள்ளார். ஆனால், அதனை ரமேஷ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இருப்பினும் ஊர்மிளா காவல் நிலையத்திற்கு சென்று நகை திருட்டு போய்விட்டதாக புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க : செல்போன் வேண்டும் என்றால் முத்தம் கொடு.. பேருந்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிளீனர்!

புகாரின் அடிப்படையில் வீட்டிற்கு சென்று பார்த்த போலீசார், நகைகள் திருடு போனதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாததால் சந்தேகமடைந்துள்ளனர். இந்த நிலையில்  ரமேஷ் மற்றும் ஊர்மிளா செல்போன்களை வாங்கி அவர்கள் சோதனை செய்துள்ளனர். அப்போது ஊர்மிளா இருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது. மேலும், வீட்டில் இருந்த நகைகளை திருடி தனது கள்ளக்காதாலர்களுக்கு கொடுத்ததும் அவர் தான் என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர்.