வாஷிங் மெஷினால் தகராறு.. தலை துண்டிக்கப்பட்டு கொலை.. இந்தியருக்கு நேர்ந்த கொடூரம்!
Indian Origin Murdered In US : அமெரிக்க வாழ் இந்தியர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். வாஷிங் மெஷினால் ஏற்பட்ட சிறிய பிரச்னையால், சக ஊழியர் அவரை கோடாரியால் தலையை துண்டித்து கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவி மற்றும் மகன் கண்முன்னே இந்த கொலை அரங்கேறியதாக கூறப்படுகிறது.

அமெரிக்கா, செப்டம்பர் 12 : அமெரிக்கா வாழ் இந்தியர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மனைவி மற்றும் மகன் கண்முன்னே கொடூரமாக அவர் கொலை செய்யப்பட்டார். வாஷிங் மெஷின் தொடர்பாக எழுந்த பிரச்னையில் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. வேலை, படிப்பு போன்றவைக்காக இந்தியர்கள் பலரும் வெளிநாடுகளுக்கு சென்று அங்கு தங்கி வருகின்றனர். குறிப்பாக, அமெரிக்காவுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் சென்று அங்கு வசித்து வருகின்றனர். இதற்கிடையில், அமெரிக்காவில் இந்தியர்கள் கொலை செய்யப்படுவதும், மர்மமான முறையில் இறந்தும் வருகின்றனர்.
அமெரிக்கா பாதுகாப்பான நாடாக இருந்தாலும், அங்கு வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. சிறிய சிறிய விஷயத்துக்கும் கொலை சம்பவங்கள் நடக்கின்றன. அப்படி தான், தற்போது அமெரிக்காவில் இந்திய வாழ் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளது. அதுவும் சிறிய வாஷிங் மிஷினுக்காக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். கர்நாடகாவைச் சேர்ந்தவர் சந்திரா நாகமல்லையா (37). இவர் அமெரிக்காவில் மனைவி, மகனுடன் வசித்து வந்தார். இவர் மோட்டல் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், 2025 செப்டம்பர் 10ஆம் தேதியான புதன்கிழமை, சக ஊழியரால் நாகமல்லையா கொலை செய்யப்பட்டுள்ளார்.




Also Read : மனைவியுடன் வேறுநபர்.. இருவரையும் தலை துண்டித்து கொன்ற கணவர்!
அதாவது, நாமகல்லையாவும், சக ஊழியர் கோபோஸ்-மார்டினெஸ் ஆகியோர் வேலை செய்து வந்துள்ளனர். அங்கிருந்து வாஷிங் மெஷின் ஒன்று பழுதாகி இருக்கிறது. உடைந்த வாஷிங் மிஷினை பயன்படுத்த வேண்டாம் என்று மேலாளர் நாகமல்லையா, சக ஊழியராக கோபோஸ்-மார்டினெஸ் இடம் கூறியிருக்கிறார். ஆனால், இவர் நேரடியாக சொல்லாமல், வேறொரு ஊழியர் மூலம் சொல்ல வைத்திருக்கிறார். இதன்பின்பு, ஆத்திரம் அடைந்த கோபோஸ்-மார்டினெஸ், நாகமல்லையாவிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார்.
அமெரிக்க வாழ் இந்தியர் கொலை
Consulate General of India, Houston, condoles the tragic death of Mr. Chandra Nagamallaiah, an Indian National, killed brutally at his workplace in Dallas, Tx.
We are in touch with the family and offering all possible assistance. The accused is in the custody of Dallas Police.…
— India in Houston (@cgihou) September 11, 2025
அதைத் தொடர்ந்து, நாகமல்லையாவை அவர் கொலை செய்துள்ளார். ஒரு கோடரியை எடுத்து நாகமல்லையாவை பலமுறை அடித்து கொலை செய்துள்ளார். நாகமல்லையா வாகன நிறுத்துமிடம் வழியாக அலுவலகத்தை நோக்கி ஓட முயன்றதாகவும், ஆனால் கோபோஸ்-மார்டினெஸ் அவரை துரத்திச் சென்று கொன்றதாகவும் கூறப்படுகிறது. நாகமல்லையாவின் மனைவியும் 18 வயது மகனும் சத்தம் கேட்டு அலுவலகத்திலிருந்து வெளியே வந்து ஊழியரைத் தடுக்க முயன்றனர். ஆனால் அவர் இருவரையும் தள்ளிவிட்டார்.
பின்னர் நாகமல்லையவை கோடரியால் பலமுறை தாக்கி தலையை துண்டித்து கொன்றார். இது தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. நாகமல்லையாவின் துண்டிக்கப்பட்ட தலையை ஊழியர் குப்பைத் தொட்டியை நோக்கி எடுத்துச் செல்வதைக் காட்டுகிறது. ரத்தம் படிந்த கோடரியுடன் கோபோஸ்-மார்டினெஸ் கைதாகினார். நாகமல்லையாவின் மரணம் குறித்து அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்து, நாகமல்லையா கொடூரமாக கொலை செய்யப்பட்டதாகக் கூறியது.
Also Read : கடலூரில் பரபரப்பு.. போலீசாரை தாக்கிய கும்பல்.. சுட்டுப்பிடித்த போலீஸ்
மேலும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருடன் நாங்கள் தொடர்பில் இருப்பதாகவும், சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாகவும் கூறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் போலீஸ் காவலில் உள்ளார். மேலும், ஒவ்வொரு வழக்கையும் நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்தது. குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஜாமீன் இல்லாத ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.