Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திருப்பூரில் ஷாக்… புகார் கொடுத்தவரை கார் ஏற்றி கொன்ற பேரூராட்சி தலைவர்.. கைது செய்த போலீஸ்!

Tiruppur Crime News : திருப்பூர் மாவட்டத்தில் புகார் கொடுத்தவரை திமுக பேரூராட்சி தலைவர் கார் ஏற்றி கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பயன்பாடில்லாத தனியார் இடத்தில் சாலை போட்டதாக தொடர்பாக முதியவர் ஒருவர் ஆட்சியரிடம் மனு அளித்ததை அடுத்து, அவர் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருப்பூரில் ஷாக்… புகார் கொடுத்தவரை கார் ஏற்றி கொன்ற பேரூராட்சி தலைவர்..  கைது செய்த போலீஸ்!
திமுக பேரூராட்சி தலைவர்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 12 Sep 2025 10:08 AM IST

திருப்பூர், செப்டம்பர் 12 :  திருப்பூரில் (Tiruppur Murder) பணி முறைகேடு தொடர்பாக புகார் மனு அளித்த முதியவரை பேரூராட்சி தலைவர் காரை ஏற்றி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முன்னதாக, மதுபோதையில் ஏற்றியதாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டது. புகார் கொடுத்த ஆத்திரத்தில், முதியவர் மீது கார் ஏற்றி திமுக பேரூராட்சி தலைவர் கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் அடுத்த கருகம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விநாயகம் பழனிசாமி பழனிசாமி. இவர் பேரூராட்சி தலைவராக உள்ளார். இந்த நிலையில், இவர் 2025 செப்டம்பர் 10ஆம் தேதி அப்பகுதியில் உள்ள தேநீர் கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். தனது காரில் சென்றுக் கொண்டிருந்த விநாயகம் பழனிசாமி, சாமளபுரம் – காரணம்போட்டை சாலையில் சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது, இவருக்கு முன்பக்கம் சென்றுக் கொண்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதியுள்ளார். சாலையை கடக்க முயன்றபோது, பழனிசாமி இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றிருக்கிறார். இருசக்கர வாகனத்தில் இருந்து முதியவர் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதுகுறித்து உள்ளூர் மக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதியவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் உயிரிழந்ததாக கூறினர். உயிரிழந்தவர் பழனிசாமி (59) என்பது தெரியவந்தது.  விபத்து ஏற்படுத்தியபோது, விநாயகா பழனிசாமி மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.

Also Read : நகைக்கடையில் புர்கா அணிந்து வந்த பெண்.. கத்தியை காட்டி கொள்ளை முயற்சி.. சிக்கியது எப்படி?

புகார் கொடுத்தவரை கார் ஏற்றி கொன்ற திமுக பிரமுகர்

இதனை அடுத்து, விநாயகா பழனிசாமியை போலீசார் கைது செய்தனர். இதனை அடுத்து, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. அதாவது, பேரூராட்சி தலைவர் விநாயாகா பழனிசாமி மதுபோதையில் விபத்து நடக்கவில்லை எனவும், அது திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. விநாயகா பழனிசாமி பயன்பாடில்லாத தனியார் இடத்தில் சாலை போட்டதாக தொடர்பாக திருப்பூர் ஆட்சியரிடம் முதியவர் புகார் மனு கொடுத்துள்ளார்.

Also Read : மதுபோதையில் காரை ஓட்டியதால் விபரீதம்.. கடலுக்குள் சிக்கிய கும்பல்.. நடந்தது என்ன?

இதனால், அந்த பணியும் நிறுத்தப்பட்டது. இதனால் முதியவருக்கும் விநாயகா பழனிசாமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தொடரந்து, விநாயகா பழனிசாமியின் முறைகேடு குறித்து விசாரணை நடத்தவும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டது. இதனால், ஆத்திரம் அடைந்த விநாயகா பழனிசாமி, முதியவரை கொலை செய்ய திட்டமிட்டார். இதனை அடுத்து, முதியவர் மீது காரை ஏற்றி கொன்றுள்ளது தெரியவந்தது. இதனை அடுத்து, விபத்து வழக்கை கொலை வழக்கமாக மாற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.