Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மதுபோதையில் காரை ஓட்டியதால் விபரீதம்.. கடலுக்குள் சிக்கிய கும்பல்.. நடந்தது என்ன?

Cuddalore Beach : கடலூரில் மதுபோதையில் இளைஞர் காரை கடலில் இறக்கி விஷப்பரீட்சையில் ஈடுபட்டுள்ளார். இதனால், காருக்குள் இருந்த இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் சிக்கி கொண்டனர். இதனை அடுத்து மீனவர்களின் உதவியுடன் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும், காரையும் டிராக்டர் மூலம் கயிறு கட்டி கரைக்கு கொண்டு வந்தனர்.

மதுபோதையில் காரை ஓட்டியதால் விபரீதம்..  கடலுக்குள் சிக்கிய கும்பல்.. நடந்தது என்ன?
கடலுக்குள் சிக்கிய கார்
Umabarkavi K
Umabarkavi K | Published: 12 Sep 2025 06:15 AM IST

கடலூர், செப்டம்பர் 12 :  கடலூரில் மதுபோதையில் இருந்த இளைஞர், காரை கூகுள் மேப் பார்த்துக் கொண்டே கடலில் ஓட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலில் காருக்குள் சிக்கிய 5 பேரை மீனவர்கள் உயிருடன் மீட்டனர். மேலும், காரையும் வெளியே கொண்டு வந்துள்ளனர். நவீன காலத்திற்கு ஏற்ப கூகுள் மேப்பை அனைவரும் பயன்படுத்தி சென்று வருகின்றனர். கூகுள் மேப் காட்டும் வழியை நம்பியை பலரும் பயணித்து வருகின்றனர். இதனால், அவ்வப்போது விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் தான், கடலூர் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது, மதுபோதையில் கூகுள் மேம் காட்டிய வழியில் சென்ற நிலையில், கடைசியில் கடலில் காரை ஒட்டியுள்ளார். சென்னையை நேர்ந்த இரண்டு பெண்கள் உள்பட ஐந்து பேர் மஹிந்திர சைலோ காரில் 2025 செப்டம்பர் 10ஆம் தேதி கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடலூர் வந்துள்ளனர்.

அப்போது, காரில் இருந்து மூன்று பேர மதுபோதையில் இருந்துள்ளனர். கடலூர் துறைமுகத்திலிருந்து பரங்கிப்பேட்டைக்கு விளையாட்டு பயன்பாட்டு வாகனத்தில் கார் சென்றுக் கொண்டிருந்தது. கூகுள் மேம் வழிகாட்டுதலின் படி தான், இவர்கள் காரில் சென்றுக் கொண்டிருந்தனர். தொடர்ந்து, கடற்கரை ஓரம் உள்ள சாலையை பயன்படுத்தி கூகுள் மேம் மூலமாக பயணம் செய்தனர். அப்போது, காரை கடற்கரை மணலில் இறக்கினர். கடற்கரை மணலில் ஓட்டிய அந்த இளைஞர், மதுபோதையில் காரை கடலில் இறங்கி விஷப்பரீட்சையில் ஈடுபட்டார்.

Also Read : பிச்சு உதறபோகும் கனமழை.. 2 நாட்களுக்கு அலர்ட்.. சென்னையில் வானிலை எப்படி?

மதுபோதையில் காரை ஓட்டியதால் விபரீதம்

கார் கடலில் சில அடி தூரம் சென்றது இன்ஜின் ஆப் ஆனது. அலையின் வேகத்திலும் கார் இழுத்து செல்லப்பட்டது. அதிகாலை நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததால் நல்வாய்ப்பாக அவர்கள் உயிர்தப்பினர். அதாவது, அதிகாலையில் கடலுக்குள் செல்ல மீனவர்கள் மீன் வலைகளை தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போது, கடலில் கார் இருப்பதை பார்த்த மீனவர்கள், உடனே சிக்கியவர்களை உடனே வெளியே கொண்டு வந்தனர்.  ஆனால், காரை வெளியே எடுக்க முடியவில்லை.

Also Read : வாகன ஓட்டிகளுக்கு புது ரூல்ஸ்.. இனி இது கட்டாயமாம்.. சென்னை காவல்துறை அறிவிப்பு

தொடர்ந்து, டிராக்டலிரல் கயிறு கட்டி இழுத்து காரை கரை சேர்த்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த தேவனாம்பாட்டினம் போலீசார், மதுபோதையில் இருந்தவர்களை எச்சரித்து அனுப்பினர். சமீபத்தில் கூட, ராஜஸ்தானில் கூகுள் மேப் வழிகாட்டுதலின்படி, வேனை இயக்கியபோது எதிர்பாராத விதமாக வேன் ஆற்றுக்குள் பாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் குழந்தை உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.