Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கடலூர் பள்ளி வேன் விபத்து.. கேட் கீப்பர் பொய்யான தகவலை கூறியது விசாரணையில் அம்பலம்!

School Van and Train Collide in Cuddalore | கடலூரில் ஜூலை 08, 2025 அன்று பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் கேட் கீப்பர் பொய்யான தகவலை கூறியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. வேன் ஓட்டுநரின் அறிவுறுத்தலின்படி கேட்டை திறந்ததாக கேட் கீப்பர் கூறிய நிலையில், உண்மை தெரிய வந்துள்ளது.

கடலூர் பள்ளி வேன் விபத்து.. கேட் கீப்பர் பொய்யான தகவலை கூறியது விசாரணையில் அம்பலம்!
கடலூர் பள்ளி வேன் விபத்து
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 12 Jul 2025 10:29 AM

சென்னை, ஜூலை 12 : கடலூரில் (Cuddalore)ள்ளி வேன் மீது ரயில் மோதிய (Train Hit School Van) விபத்தில் கேட் கீப்பர் பொய்யான தகவல் கூறியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. வேன் ஓட்டுநர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலே தான் ரயில்வே கேட்டை திறந்து வைத்திருந்ததாக கூறிய நிலையில், ரயில்வே கேட் திறந்தே வைத்திருந்தது உறுதியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் வேன் ஓட்டுநர், பொதுமக்கள் மற்றும் கேட் கீப்பர் என பலரும் மாறுபட்ட தகவல்களை கூறிய நிலையில், ஆதாரங்களின் அடிப்படையில் கேட் திறந்தே வைக்கப்பட்டு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து வெளியாகியுள்ள இந்த புதிய தகவல் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து – 2 மாணவர்கள் பலி

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் ஜூலை 08, 2025 அன்று ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி கடும் விபத்துக்கு உள்ளானது. வேனில் மொத்தம் 4 மாணவர்கள், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உள்ளிட்ட 6 பேர் பயணம் செய்த நிலையில், வேன் மீது ரயில் மோதியதில் இரண்டு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த கொடூர விபத்தில் இதுவரை மொத்தம் மூன்று மாணவர்கள் பலியாகியுள்ளனர்.

இதையும் படிங்க : ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு நடந்த கொடூரம்.. ஹேமராஜ் குற்றவாளி.. நீதிமன்றம் அதிரடி!

சம்பவம் நடந்த அன்று விபத்து நடந்ததற்கு ரயில்வே கேட்டை மூடாமல், கேட் கீப்பர் தூங்கியதுதான் காரணம் என குற்றம்சாட்டிய பொதுமக்கள் அவரை தாக்க முயற்சி செய்தனர். இந்த நிலையில், வேன் ஓட்டுநர் தான் கேட்டை திறந்து வைக்குமாறு தன்னிடம் கூறியதாக கேட் கீப்பர் தெரிவித்தார். இந்த நிலையில், உண்மையை கண்டறிய புலனாய்வு குழு களத்தில் இறங்கிய நிலையில், தற்போது ஆதாரத்துடன் உண்மை கண்டறியப்பட்டுள்ளது.

வேன் ஓட்டுநர் மீது பழியை போட்ட கேட் கீப்பர் – விசாரணையில் தெரிய வந்த உண்மை

கடலூர் பள்ளி வேன் விபத்தில் யார் மீது தவறு உள்ளது என்பதை கண்டறிவதற்கான விசாரணையை புலனாய்வு குழு நடத்திய நிலையில், கேட் கீப்பர் பொய்யான தகவலை கூறியது அம்பலமாகியுள்ளது. பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானபோது, ரயில்வே கேட் திறந்திருந்ததற்கான ஆதாரங்களை புலனாய்வு குழு கண்டறிந்துள்ளது. இதன் மூலம் கேட் கீப்பர் பங்கஜ், கேட்டை திறந்தே வைத்திருந்தது உறுதியாகியுள்ளது. முன்னதாக கேட்டை மூடும்போது பள்ளி வேன் ஓட்டுநர் கேட் கீப்பரிடம் கேட்டை திறந்தே வைக்கும்படி கூறியதாக கூறப்பட்ட நிலையில், தற்போது உண்மை கண்டறியப்பட்டுள்ளது.