Cuddalore Train Accident: ரயில் பள்ளி வேன் மீது மோதியது எப்படி..? யார் காரணம்..? காயமடைந்த வேன் டிரைவர் விளக்கம்!
Cuddalore Train-School Van Crash: கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் ரயில்-பள்ளி வேன் மோதலில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். இரண்டு மாணவர்கள் படுகாயமடைந்தனர். லெவல் கிராசிங்கை நிர்வகித்த கேட் கீப்பர் கைது செய்யப்பட்டார். டிரைவர், கேட் திறந்திருந்ததாகவும், கேட் கீப்பர் இல்லாததாகவும் கூறினார். காயமடைந்த மாணவரும் இதே கருத்தை தெரிவித்தார். முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடலூர், ஜூலை 08: கடலூர் (Cuddalore) சிப்காட் அருகே செம்மங்குப்பத்தில் இன்று அதாவது 2025 ஜூலை 8ம் தேதி பயணிகள் ரயில் ஒன்று, பள்ளி வேனை (Cuddalore Train Accident) பயங்கரமாக மோதியதில் 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்ததாகவும், மேலும் இருவர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு காரணமாக இருந்த லெவல் கிராசிங்கை நிர்வகித்த கேட் கீப்பர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, கவனக்குறைவாக செயல்பட்டதற்காக நேற்று முன்தினம் (2025 ஜூலை 8ம் தேதி) இடைநீக்கம் செய்யப்பட்டார். உயிரிழந்த மாணவர்கள் 12 வயதான நிமிலேஷ், 16 வயதான சாருமதி, 15 வயதான செழியன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 5 லட்சம் நிதி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்தநிலையில், விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து பள்ளி வாகனத்தை ஓட்டிய வேன் டிரைவர் பேட்டியளித்துள்ளார்.
நடந்தது என்ன..? வேன் டிரைவர் விளக்கம்:
நான் கேட் கீப்பரிடம் பேசவே இல்லை, கேட் கீப்பர் அந்த இடத்தில் இல்லை என பள்ளி வேன் டிரைவர் சங்கர் பேட்டியளித்துள்ளார். அதில், “ ரயில்வே கேட்டை மூட வேண்டாமென நான் சொல்லவில்லை, கேட் திறந்துதான் இருந்தது. கேட் கீப்பர் அந்த இடத்தில் இல்லவே இல்லை. நான் செல்லும்போது கேட் திறந்திருந்ததால்தான் பள்ளி வாகனத்தை இயக்கினேன்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, பள்ளி வாகனத்தில் பயணித்து காயமடைந்த மாணவர் விஸ்கேஷ் அளித்த பேட்டியில், ”நாங்கள் செல்லும்போது கேட் முழுவதுமாக திறந்துதான் இருந்தது. அது மூடப்படவே இல்லை. அதேபோல், ரயில் வருவதற்கான எச்சரிக்கை சிக்னல் எதுவும் போடவில்லை. ரயில் வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லாததால், ரயில் சென்றுவிட்டது என்ற எண்ணத்தில் சாதாரணமாக செல்வதுபோல் பள்ளி வாகனம் சென்றது. அப்போது, எதிர்பாராதவிதமாக வேகமாக வந்த ரயில் எங்கள் மீது மோதியது.
ரயில் விபத்து புகைப்படம்:
#Schoolbusaccident : #Tamilnadu
A School Bus Crossing a Railway Track was Hit by a #Train at #Semmankuppam near #Cuddalore, 2 Children Dead and 4 injured (#TrainAccident).
Horrific, at least 2 #Students were killed and 3 others sustained serious injuries after a #SchoolBus… pic.twitter.com/pvi0NUejhO
— Surya Reddy (@jsuryareddy) July 8, 2025
பள்ளி வாகனத்தில் என்னுடன் என் கூட படிக்கும் மாணவன் ஒருவருனும், அவங்க அக்கா, என் தம்பி ஆகியோர் இருந்தோம்.” என்றார்.
டிரைவர்தான் கேட்டை திறக்க சொன்னதாக செய்திகள் வெளியாகிறது என்று செய்தியாளர்கள் அந்த மாணவரிடம் கேட்டபோது, “அப்படி எதுவும் டிரைவர் கேட் கீப்பரிடம் கேட்கவில்லை. அவர் உட்கார்ந்து தூங்கிகொண்டு இருந்தார். விபத்து நடந்த பிறகு கூட கீப்பர் எழுந்து வரவில்லை” என்று தெரிவித்தார்.
முன்னதாக, பள்ளிக்கு சீக்கிரம் செல்ல வேண்டும் என வேன் டிரைவர் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டதால் ரயில்வே கேட்டை, கேட் கீப்பர் திறந்துள்ளார். பாதுகாப்பு விதிகளுக்கு புறம்பாக கேட்டை திறந்ததால் இந்த விபத்து நடந்துள்ளது என்று செய்திகள் வெளியானது. ஆனால், தற்போது அப்படி எதுவும் நடக்கவில்லை என்றும், கேட் தான் திறந்துள்ளது என்றும் பள்ளி மாணவர்கள் தெரிவித்தனர்.