Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திருமணமான 4 மாதம்.. வரதட்சணை கொடுமையால் பெண் எடுத்த விபரீத முடிவு!

Maharashtra Dowry Harassment : மகாராஷ்டிரா மாநிலத்தில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில், கணவர் மற்றும் அவரது பெற்றோர் துன்புறுத்தி வந்துள்ளனர். இதனை அடுத்து, இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருமணமான 4 மாதம்.. வரதட்சணை கொடுமையால் பெண் எடுத்த விபரீத முடிவு!
தற்கொலை செய்து கொண்ட பெண்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 12 Sep 2025 07:40 AM IST

மகாராஷ்டிரா, செப்டம்பர் 12 : வரதட்சணை கொடுமையால் திருமணமான சில மாதங்களிலேயே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் வரதட்சணை கேட்டு, மாமியார் மற்றும் கணவர் துன்புறுத்தி வந்த நிலையில், மன உளைச்சலில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. நாட்டில் வரதட்சணை கொடுமையால் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிலர் விபரீத முடிவுகளையும் எடுத்து வருகின்றனர். இப்படியாக வரதட்சணை கொடுமை என்பத தலைவிரித்தாடுகிறது. வரதட்சணைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. வரதட்சணைக்கு எதிராக கடும் சட்டங்கள் இருந்தாலும், அதை கேட்பது தொடர் கதையாகி வருகிறது. இதனாம், இளம்பெண் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், மகாராஷ்டிராவில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது.

அதாவது, திருமணமான சில மாதங்களிலேயே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மகாராஷ்டிராவின் ஜல்கான் பகுதியைச் சேர்ந்தவர் 23 வயதான மயூரி கௌரவ் தோசர். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த நபருடன் நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணம் இருவீட்டாரின் சம்மதத்துடன் நடந்துள்ளது. அப்போது, வரதட்சணையாக நகை, பணத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு, கணவர் மற்றும் அவரது பெற்றோர் மயூரிவிடம் கூடுதலாக பணம், நகை கேட்டு தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளதாக தெரிகிறது.

Also Read : புலி கூண்டில் வனத்துறை அதிகாரிகள்.. பொதுமக்கள் கொடுத்த தண்டனை… காரணம் இதுவா?

வரதட்சணை கொடுமையால் பெண் எடுத்த விபரீத முடிவு

உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பெண் மயூரியை பணம் கேட்டு தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளனர். இதனால், அவர் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். சில நேரங்களில் கணவரின் பெற்றோர் அவர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த பெண் மயூர் தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த பெற்றோர் உடனே போலீசாருக்கு புகார் கொடுத்தனர்.

Also Read : தோழியுடன் காணாமல் போன பெண்.. காதலன் செய்த கொடூரம்.. விசாரணையில் வெளியான பகீர் சம்பவம்!

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பெண்ணின் குடும்பத்தினர் கணவர் மற்றும் அவரது பெற்றோரை உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்றும், மாமியார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்யும் வரை பிரேத பரிசோதனையைத் தொடர அனுமதிக்க அவர்கள் மறுத்துவிட்டனர்.

மேலும், கணவரின் வீட்டாரிடம் பணம் கேட்பதாக தனது மகன் கூறியதால், நாங்கள் அவரிடம் சமரச பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டாம் என்றும் அதன்பிறகு தனது மகளை அவர்கள் துன்புறுத்தியதாகவும் உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் கூறியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் இன்னும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. விசாரித்து வருவதாக கூறியுள்ளனர்.

(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)