தோழியுடன் காணாமல் போன பெண்.. காதலன் செய்த கொடூரம்.. விசாரணையில் வெளியான பகீர் சம்பவம்!
Jharkhand Double Murder | ஜார்க்கண்டில் தனது காதலி வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பது தெரிந்த்து ஆத்திரமடைந்த இளைஞர், காதலியை தனியாக அழைத்துக் கொலை செய்த நிலையில், உடன் வந்த அவரது தோழியையும் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஞ்சி, செப்டம்பர் 10 : ஜார்க்கண்டில் (Jharkhand) இரண்டு இளம் பெண்கள் காணாமல் போன விவகாரத்தில், ஒரு இளம் பெண்ணின் காதலன் அளித்துள்ள வாக்குமூலம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த இரண்டு இளம் பெண்களையும் தான் தான் கொலை செய்தாத அந்த இளைஞர் காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இரண்டு இளம் பெண்களை அந்த இளைஞர் கொலை செய்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
காணாமல் போன இரண்டு பெண்கள் – புகார் அளித்த உறவினர்கள்
ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டத்தை சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் தீடீரென காணாமல் போயுள்ளனர். அந்த பெண்களின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை தேடி வந்துள்ளனர். அப்போது காணாமல் போன இரண்டு பெண்களில் ஒருவரின் காதலனான ஸ்ரீகாந்த சவுத்ரி என்ற இளைஞரை போலீசார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். அப்போது இந்த இளைஞர் அளித்த வாக்குமூலத்தை கேட்டு போலீசார் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதையும் படிங்க : துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்ட 5 வயது சிறுவன்.. பரிதாப பலி.. சோக சம்பவம்!




இரண்டு பெண்களையும் கொலை செய்ததாக போலீசாரிடம் கூறிய இளைஞர்
அதாவது, ஸ்ரீகாந்த்தின் காதலிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்துள்ளது. இதனை தெரிந்துக்கொண்ட அவர் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில், சம்மபத்தன்று தனது காதலியை பேசுவதற்காக அழைத்துள்ளார். அதன்படி அந்த பெண்ணும் தனது தோழியுடன் காட்டு பகுதிக்கு, காதலனை சந்திக்க சென்றுள்ளார். ஏற்கனவே காதலி மீது கடும் கோபத்தில் இருந்த அந்த இளைஞர் அவரை பார்த்ததும், ஆத்திரத்தின் உச்சிக்கு சென்று அந்த பெண்ணை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் தோழியும் உடன் இருந்துள்ளார்.
இதையும் படிங்க : என்னுடன் பேச மாட்டியா?.. பெண்ணை உயிருடன் எரித்த நபர்.. உ.பியில் பகீர் சம்பவம்!
இந்த நிலையில், தனது காதலியின் தோழியால் தனக்கு ஏதேனும் பிரச்னை வருமோ என நினைத்த ஸ்ரீகாந்த் தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தை கொண்டு அவரை கொலை செய்துள்ளார். பின்னர் இருவரது உடல்களையும் காட்டு பகுதியில் மறைத்து வைத்துவிட்டு எதுவும் தெரியாததை போல இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், போலீசாரிடம் நடந்தவற்றை வாக்குமூலமாக அளித்த அந்த இளைஞர், இளம் பெண்களின் உடல்களை மறைத்து வைத்திருந்த இடத்தையும் காட்டியுள்ளார்.
அந்த பெண்களின் உடல்களை மீட்ட போலீசார் அவற்றை பிரேத பரிசோதனைக்கா அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.