கள்ளக்காதலனுடன் உள்ளாசமாக இருப்பதை கண்ட 6 வயது சிறுமி.. கொலை செய்து கிணற்றில் வீசப்பட்ட கொடூரம்!
Uttar Pradesh Little Girl Murder | உத்தர பிரதேசத்தில் கள்ளக்காதலுடன் உள்ளாசமாக இருந்ததை பார்த்த 6 வயது சிறுமியை அந்த பெண் தனது கள்ளக்காதலனுடன் இணைந்து கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லக்னோ, செப்டம்பட்ர் 08 : உத்தர பிரதேசம் (Uttar Pradesh) கள்ளக்கதாலனுடன் தனிமையில் இருப்பதை பார்த்த சிறுமி அதனை வெளியில் சொல்லாமல் இருக்க கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விளையாட சென்ற சிறுமியை நீண்ட நேரம் காணாததால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அவரை தேடும்போது சிறுமியின் உடல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், கள்ளக்காதல் விவகாரத்தில் சிறுமி கொலை செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
காணாமல் போன சிறுமி சடமாக மீட்பு
உத்தர பிரதேச மாநிலம், ஹத்ரஸ் மாவட்டத்தை சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர் காலை 10 மணிக்கு காணாமல் போன நிலையில், வெகு நேரமாகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் ஊர் முழுக்க தேடியுள்ளனர். அப்போது ஒரு கிணற்றில் இருந்து சிறுமியின் சடலத்தை அவர்கள் மீட்டுள்ளனர். சாக்கு பைக்குள் வைத்து சிறுமியின் சடலம் கிணற்றில் வீசப்பட்டு இருந்த நிலையில், அது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதில் சிறுமி கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க : 80 ஆயிரம் ரூபாய் திருட முயன்ற திருடர்கள்.. 2 லட்சம் ரூபாய் பைக்கை இழந்து சிக்கியது எப்படி?




விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்
இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த 30 வயது பெண் மற்றும் 17 வயது சிறுவன் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன்பேரில் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்கள் சிறுமியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் 17 வயது சிறுவனுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இப்படியும் நடக்குமா? மூளைச்சாவு அடைந்த இளைஞர்.. இறுதிச் சடங்கில் நடந்த அதிசயம்!
சம்பவத்தன்று பெண்ணின் கனவரும், மாமியாரும் ஊருக்கு சென்றுவிட்ட நிலையில் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இருவரும் உள்ளாசமாக இருந்துள்ளனர். அப்போது அந்த வீட்டிற்கு சென்ற இந்த சிறுமி, அவர்கள் உள்ளாசமாக இருப்பதை கண்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் சிறுமியை அழைத்து அதனை யாரிடமும் கூற கூடாது என கூறியுள்ளனர். ஆனால், சிறுமியை அதனை தனது அப்பாவிடம் கூறுவேன் என கூறியதால் அவரை கொலை செய்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.