ஆசையாக சன்ரூஃப் மூலம் வேடிக்கை பார்த்த சிறுவன்.. கம்பி மோதி காயம்.. வைரலாகும் வீடியொ..
Bengaluru Viral Video: ர்நாடகா மாநிலம் பெங்களூரில், சிகப்பு நிற சொகுசு கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த கார் சன் ரூஃப் வழியாக சிறுவன் ஒருவன் தலையை நீட்டி பயணம் செய்தான், அப்போது எதிரே இருந்த கம்பி தலையில் மோதி அந்த சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது.

பெங்களூரு, செப்டம்பர் 7, 2025: கார் சன் ரூஃப் வழியாக சிறுவன் ஒருவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது, அந்த பகுதி வழியாக வந்த ஒரு தடுப்பு கம்பி தலையில் மோதி, அந்த சிறுவன் படுகாயம் அடைந்தான். இதுகுறித்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. இந்த சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. பொதுவாக கார் பிரியர்களுக்கு சன் ரூட் உடன் இருக்கும் காரை வாங்க வேண்டும் என்பது ஒரு அலாதி விருப்பமாகும். இந்த சன் ரூஃப் மூலம் நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் போது அல்லது மலைப்பிரதேசங்களுக்கு செல்லும் போது, அதன் வழியாக குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வெளியே எட்டிப் பார்த்தவாறு செல்வார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதற்கு ஆசைப்படாதவர்கள் யாரும் இல்லை என்று சொல்லலாம். ஆனால் இந்த சன் ரூஃபில் பயணம் மேற்கொள்ளும் போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சன் ரூஃப் வழியாக வெளியே எட்டிப் பார்க்கும் போது எதிரே என்ன வருகிறது, ஏதேனும் விளம்பர பலகைகள் அல்லது கம்பிகள் உள்ளனவா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பெங்களூருவில் சன்ரூஃபால் ஏற்பட்ட விபத்து:
Next time when you leave your kids popping their heads out, think once again! pic.twitter.com/aiuHQ62XN1
— ThirdEye (@3rdEyeDude) September 7, 2025
நாம் சிறிது கவனக்குறைவாக இருந்தாலும், வழியில் வரக்கூடிய பொருட்கள் நம் தலைக்கு மோதி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். அது போன்ற ஒரு சம்பவமே தற்போது பெங்களூரில் நடந்துள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூரில், சிகப்பு நிற சொகுசு கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த கார் சன் ரூஃப் வழியாக சிறுவன் ஒருவன் தலையை நீட்டி பயணம் செய்தான். இதுகுறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.
மேலும் படிக்க: ஆயுள் தண்டனை அனுபவிக்கும் பிரஜ்வால் ரேவண்ணா.. சிறையில் நூலக எழுத்தாளராக நியமனம்..
அந்த வீடியோவில், உயரம் அதிகமான வாகனங்கள் செல்வதைத் தடுக்கும் வகையில் இரும்பு கம்பிகள் பொருத்தப்பட்டிருந்த பகுதியில், சிகப்பு நிற கார் ஒன்று சென்றது. அதன் சன் ரூஃப் வழியாக சிறுவன் தலையை நீட்டியபடி பயணம் செய்தான். அப்போது எதிரே இருந்த கம்பியில் சிறுவனின் தலை பலமாக மோதியது. இதில் சிறுவன் நிலைகுலைந்து உடனடியாக காருக்குள் சென்றான். இந்த காட்சிகள் பார்ப்பவர்களை பதைபதைக்க வைத்துள்ளன.
Also Read: 80 ஆயிரம் ரூபாய் திருட முயன்ற திருடர்கள்.. 2 லட்சம் ரூபாய் பைக்கை இழந்து சிக்கியது எப்படி?
இணையத்தில் கொந்தளிக்கும் மக்கள்:
மேலும் இதுகுறித்து பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, பெற்றோரின் கவனக்குறைவின் காரணமாக இவ்வாறான சம்பவங்கள் நிகழ்வதாக சிலர் தெரிவித்துள்ளார். இதற்குப் பொறுப்பு முழுமையாக பெற்றோர்களுக்கே உண்டு என மற்றொரு பயனர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், “உங்கள் குழந்தையை சன் ரூஃப் வழியாக வெளியே எட்டிப் பார்க்க வைக்கும் முன், ஒரு முறை அல்ல, இரண்டு முறை யோசித்துப் பார்க்க வேண்டும்” எனவும் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.