Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மது குடிப்பதை நிறுத்த சொன்ன மனைவி.. மொட்டை அடித்து சித்ரவதை செய்த கொடூர கணவன்!

Husband Shaves Wife's Head | கர்நாடகாவில் கணவன் தினமும் மது குடித்திவிட்டு வருவதால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை மனைவி கண்டித்த நிலையில், கணவன் அந்த பெண்ணின் தலையை மொட்டை அடித்து அவரை மிக கடுமையாக தாக்கியுள்ளார்.

மது குடிப்பதை நிறுத்த சொன்ன மனைவி.. மொட்டை அடித்து சித்ரவதை செய்த கொடூர கணவன்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 08 Sep 2025 07:11 AM IST

பாகல்கோட்டை, செப்டம்பர் 08 : கர்நாடகாவில் (Karnataka) கணவன் அடிக்கடி குடித்துவிட்டு சண்டை போட்டு வந்த நிலையில், அதனை கண்டித்த மனைவியை அவரது கணவர் கடுமையாக தாக்கி மொட்டை அடித்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலை செய்ய அந்த நபருக்கு, அந்த ஊரின் கிராம பஞ்சாயத்து தலைவரும் உதவி செய்துள்ளார். கணவன் மது குடிப்பதால் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக அந்த பெண் பெற்றோர் வீட்டில் வசித்து வந்த நிலையில், கணவருடன் சேர்ந்து வாழ அவர்கள் அனுப்பி வைத்த நிலையில், இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.

கணவன் மது குடிப்பதால் கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை

கர்நாடகா மாநிலம், பாகல்கோட்டை சேர்ந்தவர் பசவப்பா. இவருக்கு திருமணமாகி 22 வயதில் ஸ்ரீதேவி என்ற மனைவி உள்ளார். பசவப்பாவுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதன் காரணமாக திருமணத்திற்கு பிறகு அவர் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து ஸ்ரீதேவியுடன் சண்டைபோட்டு வந்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான ஸ்ரீதேவி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில், திருமணமான கொஞ்ச நாட்களிலேயே மகள் வீட்டிற்கு வந்துவிட்டதால், இரண்டு மாதங்களுக்கு முன்னதாக அவரை பெற்றோர் கணவன் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதையும் படிங்க : இப்படியும் நடக்குமா? மூளைச்சாவு அடைந்த இளைஞர்.. இறுதிச் சடங்கில் நடந்த அதிசயம்!

மீண்டும் முற்றிய வாக்குவாதம் – மொட்டை அடித்த கொடூர கணவன்

பெற்றோரின் அறிவுரையின்படி ஸ்ரீதேவி கணவனுடன் வாழ சென்றுள்ளார். ஆனால் பசவப்பா மீண்டும் குடித்துவிட்டு வந்து அவரை சித்ரவதை செய்துள்ளார். இதனால் பொறுமையை இழந்த ஸ்ரீதேவி மது பழக்கத்தை கைவிடும்படி அவரை கண்டித்துள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்த அவர் கிராம பஞ்சாயத்தை தலைவருடன் இணைந்து ஸ்ரீதேவியை மிக கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் அந்த பெண் நிலை தடுமாறி மயங்கி கீழே விழுந்துள்ளார். பின்னர் இருவரும் இணைந்து அந்த பெண்ணுக்கு மொட்டை அடித்துள்ளனர். அதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் மீண்டும் ஸ்ரீதேவியை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதையும் படிங்க : குலைநடுங்க வைத்த சம்பவம்.. மனைவியை 17 துண்டுகளாக வெட்டிக் கொன்ற கணவர்.. பகீர் பின்னணி!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்

அவர்கள் இருவரும் மிக கடுமையாக தாக்கிய நிலையில், பலத்த காயமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மது குடிப்பதை தட்டி கேட்டதால், கிராம நிர்வாக தலைவருடன் இணைந்து கணவன் இத்தகைய கொடூர செயலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.