டயரில் எலுமிச்சை வைத்து சடங்கு… கீழே விழுந்து நொறுங்கிய புத்தம் புது மஹிந்திரா தார் கார்! – வைரல் வீடியோ
Mahindra Thar Crash : டெல்லியில் இளம் பெண் ஒருவர் புதிதாக வாங்கிய மஹிந்திரா தார் காரின் டயரில் எலுமிச்சை வைத்து சடங்கு செய்திருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக ஆக்ஸிலேட்டரை வேகமாக அழுத்த கார் ஷோரூமின் முதல் மாடியில் இருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

டெல்லி, செப்டம்பர் 10 : புதிய கார் வாங்கிய மகிழ்ச்சியை கொண்டாடும்போது, செய்த சிறிய தவறால் கார் மொத்தமாக கீழே விழுந்த நொறுங்கிய சம்பவம் டெல்லியில் (Delhi) நடைபெற்றுள்ளது. கடந்த செப்டம்பர் 8, 2025 அன்று டெல்லியில் உள்ள நிர்மன் விஹார் பகுதியில் புதியதாக மகிந்திரா தார் (Mahindra Thar) காரை வாங்கிய பெண், ஷோரூமீல் காரின் டயரில் எலுமிச்சை வைத்து நசுக்கும் சடங்கில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது தவறுதலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால் கார் நேராக ஷோரூமின் முதல் மாடியில் இறுந்து கீழே விழுந்து நொறுங்கியது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
என்ன நடந்தது?
டெல்லியைச் சேர்ந்த மாணி பவார் என்ற இளம் பெண் கடந்த செப்டம்பர் 8, 2025 அன்று ரூ.27 மதிப்புள்ள மஹிந்திரா தார் காரை நிர்மான் விஹாரில் உள்ள ஒரு ஷோரூமில் வாங்க சென்றார். வழக்கம்போல காரை சாலையில் ஓட்டும் பூஜை செய்ய முடிவு செய்தார். அதன் ஒரு பகுதியாக எலுமிச்சை பழத்தை காரின் டயரில் வைத்து நசுக்கும் சடங்கை மேற்கொண்டார். காரின் டயரில் எலுமிச்சை வைத்த பிறகு, மெதுவாக காரை நகர்த்த வேண்டிய நிலையில், தவறுதலாக அதிகமாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால், கார் வேகமாக ஷோரூமின் கண்ணாடியை உடைத்து முதல் மாடியில் இருந்து கீழே சாலையில் விழுந்து நொறுங்கியது.




இதையும் படிக்க : வீட்டில் ஏசி யூஸ் பண்ணுறீங்களா? பறிபோன 3 உயிர்கள்.. அதிர்ச்சி சம்பவம்!
வைரல் வீடியோ
Drama at Mahindra showroom in Delhi’s Laxmi Nagar!
A woman insisted on taking a Thar for a test drive, created chaos, broke the glass on the first floor & sent the SUV crashing straight down.
— Divya Gandotra Tandon (@divya_gandotra) September 9, 2025
ஏர் பேக் காரணமாக அசம்பாவிதம் தவிர்ப்பு
அப்போது காரில் மாணி பவாரும் அவருடன் ஷோரூம் ஊழியர் விகாஸ் என்பவரும்இருந்துள்ளனர். கார் சாலையில் தலைகீழாக விழுந்த்போதிலும் ஏர்பேக் உடனே திறந்ததால், இருவரும் பெரிய காயமின்றி உயிர் தப்பினர். இருவரும் அருகிலுள்ள மருத்துவமைக்கு உடனடியாக அழைத்து செல்லப்பட்டு, முதலுதவி செய்யப்பட்ட பின் உடனடியாக இருவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இதையும் படிக்க : 80 ஆயிரம் ரூபாய் திருட முயன்ற திருடர்கள்.. 2 லட்சம் ரூபாய் பைக்கை இழந்து சிக்கியது எப்படி?
இந்த நிலையில் விபத்து குறித்து டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து கருத்து தெரிவித்த, டெல்லி கிழக்கு மாவட்ட துணை ஆணையர் அபிஷேக் தனியா, கடந்க செப்டம்பர் 8, 2025 அன்று மாலை 6 மணியளவில் மாணி பவார் மற்றும் அவரது கணவர் பிரதீப் ஆகியோர் மஹிந்திரா ஷோரூமில் இருந்து புதிய தார் கார் வாங்கியுள்ளனர். விபத்தில் காயமடைந்த மாணி பவார் தற்போது அருகில் உள்ள மாலிக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்றார்.
விபத்துக்கு பிறகு சாலையில் தலைகீழாக கவிழ்ந்த காரின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. தற்போது புதிய கார் வாங்கும் போது மேற்கொள்ளும் சடங்குகள் குறித்து மக்களிடையே மிகப்பெரும் விவாதங்கள் எழுந்துள்ளன.