மழை வெள்ளத்தில் மூழ்கிய 300 கார்கள்.. மாருதி சுசுகி நிறுவனத்திற்கு பேரிழப்பு!
300 Maruti Suzuki Cars Submerged | ஹரியானாவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தின் பலவேறு பகுதிகள் மிகுந்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. அந்த வகையில், மாருதி சுசுகி குடோன் மழை நீரில் மூகிய நிலையில், 300 கார்கள் சேதமாகியுள்ளன.

ஹரியானா, செப்டம்பர் 08 : ஹரியானாவில் (Haryana) கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக மாருதி சுசுகியின் (Maruti Suzuki) குடோனில் சுமார் 300 கார்கள் தண்ணீரில் மூழ்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கார்கள் தண்ணீரில் மூழ்கி கிடப்பது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், குடோனில் நிறுத்தி வைகப்பட்டு இருந்த 300 புதிய கார்கள் மழை நீரில் மூழ்கியது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கொட்டித் தீர்த்த கனமழை – தண்ணீரில் மூழ்கிய 300 புதிய கார்கள்
ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக பல பகுதிகளில் சாலைகள், குடியிருப்புகள், நிறுவனங்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. அந்த வகையில் ஹரியான மாநிலம், ஜஜ்ஜர் மாவட்டத்தில் உள்ள பஹதுர்கார் பகுதியில் மாருதி சுசுகி நிறுவனத்தின் கார் குடோன் அமைந்துள்ளது. அங்கு 300 கார்களை அந்த நிறுவனம் நிறுத்தி வைத்திருந்துள்ளது. இந்த நிலையில், அந்த பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக அனைத்து கார்களும் தண்ணீரில் மூழ்கி முழுவதுமாக சேதமாகியுள்ளன. இது தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : 80 ஆயிரம் ரூபாய் திருட முயன்ற திருடர்கள்.. 2 லட்சம் ரூபாய் பைக்கை இழந்து சிக்கியது எப்படி?
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
#WATCH | Haryana: Several cars partially inundated due to severe waterlogging at a stockyard in Bahadurgarh. pic.twitter.com/9p5C68Kg1L
— ANI (@ANI) September 7, 2025
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், மாருது சுசுகி நிறுவனத்தின் அந்த குடோனில் நூற்றுக்கணக்கான கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த கார்கள் பாதி அளவு தண்ணீரில் மூழ்கியபடி உள்ளன. சில கார்கள் தண்ணீரில் மிதந்தபடி உள்ளன. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : இப்படியும் நடக்குமா? மூளைச்சாவு அடைந்த இளைஞர்.. இறுதிச் சடங்கில் நடந்த அதிசயம்!
பொதுவாக கார்கள் மழை நீரில் சென்றாலே இன்ஜின் உள்ளிட்ட பாகங்களில் தண்ணீர் புகுந்து சிக்கல்களை ஏற்படுத்தும். இந்த நிலையில், 300 கார்கள் தண்ணீரில் மூழ்கி இருக்கும் நிலையில், அது மாருதி சுசுகி நிறுவனத்திற்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கியுள்ள கார்களை மீட்கும் பணிகளை அந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.