மழையில் காரை நிறுத்தி வைத்திருக்கிறீர்களா ? இந்த பிரச்னைகள் வரலாம்!
Rainy Day Alert : தற்போது தமிழ்நாட்டில் மழை காலம் தொடங்கியிருக்கிறது. கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை கிடைத்த மகிழ்ச்சியில் மக்கள் இருக்கும் வேளையில் அதனால் மற்றொரு பிரச்னையும் இருக்கிறது. மழைகாலங்களில் நம் வாகனங்கள் பெரிதும் சேதமடையலாம். அதுகுறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

தற்போது கோடை வெப்பம் தணிந்து மழை காலம் (Monsoon) துவங்கியிருக்கிறது. தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இது ஒரு பக்கம் மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் மின்சாதன பொருட்கள் மற்றும் வாகனங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில் சென்னை வெள்ளத்தில் ஏகப்பட்ட கார்கள் மோசமான பாதிப்பை சந்தித்திருக்கின்றன. எனவே வாகனங்களை மழைகாலங்களில் மிகவும் எச்சரிக்கையாக பராமரிக்க வேண்டும். பல வீடுகளில் பார்க்கிங் வசதி இல்லை. எனவே திறந்த வெளியில் தான் பைக் (Bike) மற்றும் காரை நிறுத்தி வைக்க வேண்டியிருக்கும். இந்த கட்டுரையில் மழையில் வாகனங்களை நிறுத்தி வைப்பதால் ஏற்படும் பிரச்னைகள் அவற்றை தவிர்ப்பது எப்படி எனப் பார்க்கலாம்.
முதலில் வாகனங்களின் பெயிண்ட் சேதமடையலாம். மேலும் மழைகாலங்களில் சாலைகள் சேரும் சகதியுமாக காணப்படும். அந்த சூழ்நிலையில் வாகனங்களை ஓட்டும்போது சேருகள் நம் வாகனத்தின் பெயிண்ட்டை மோசமாக பாதிக்கலாம். மேலும் சிறிய கீரல் இருந்தாலும் மழையால் அது பெரிதாக விரிவடையலாம். மேலும் வாகனங்கள் அதிக நேரம் மழையில் இருக்கும்போது அது துருப்பிடிக்க வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக பழைய வாகனங்களில் இந்த பிரச்னை ஏற்படுகிறது. எனவே அதற்கு சரியான கவரை பயன்படுத்துவது நமக்கு நல்லது.
இதையும் படிக்க : கார் கண்ணாடியில் நீர் படிவதற்கான காரணம் என்ன? சுத்தம் செய்வது எப்படி?
மின்சார பாகங்களுக்கு சேதம்
மழையினால் மின் பாகங்கள் பாதிக்கும் பிரச்னை இருக்கிறது. திறந்தவெளியில் வாகனங்களை நிறுத்தப்படும் வாகனத்தின் வயர்கள், பேட்டரி போன்றவை பெரும் பாதிப்படையக்கூடும். சில நேரங்களில் தண்ணீர் மோட்டார் பகுதியில் செல்லும்போது பெரும் சேதத்தை ஏற்படுத்தும். அப்படி நடந்தால் அதற்காக நீங்கள் நிறைய செலவு செய்ய நேரிடும். மேலும் ஈரப்பதம் காரணமாக பேட்டரியும் விரைவில் பாதிக்கும்.
மழையில் நிறுத்தப்படும் வாகனங்களின் உட்பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் பைக் சீட் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். மேலும் டேஷ்போர்ட்டில் தண்ணீர் நுழைந்தால் அதனை சரிசெய்வது மிகவும் கடினம். மேலும் பூஞ்சை பாக்டீரியாவும் வளரக்கூடும். அவை நாளடைவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மற்றொரு பெரிய பிரச்னை டயர் மற்றும் பிரேக் சிஸ்டத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஈரமான பகுதியில் டயர் அதிக நேரம் இருக்கும்போது அதன் தரம் குறையக் கூடும். அதே நேரம் டிஸ்க் பிரேக்குகள் துருப்பிடிக்க வாய்ப்பிருக்கிறது. முக்கியமான நேரத்தில் அது செயலிழந்து விபத்து ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.
இதையும் படிக்க : போனை வயர்லெஸ் பவர் பேங்க் மூலம் சார்ஜ் செய்கிறீர்களா? அப்போ இத படிங்க!
பைக்கில் ஏற்படும் சிக்கல்
பைக்குகளைப் பற்றி குறிப்பிட்டால் அவற்றில் அதிக சிக்கல்கள் உள்ளன. மழையில், இன்டிகேட்டர்கள், செல்ஃப் ஸ்டார்ட் மற்றும் பட்டன்கள் போன்ற பைக்கின் எலக்ட்ரிக் அமைப்புகள் வேலை செய்வதை நிறுத்துகின்றன. பெட்ரோல் டேங்கிற்குள் தண்ணீர் நுழையும் போது பிரச்சனை மேலும் அதிகரிக்கிறது. மேலும் கார்களில் குறிப்பிட்டது போல அவையெல்லாம் பைக்குகளுக்கு ஏற்படும். எனவே மழைகாலங்களில் வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும்.