ஆட்டோமேட்டிக் கார் வாங்கலாமா? அதன் நன்மைகள் மற்றும் குறைகள் என்ன?
Benefits of Automatic Cars : ஆட்டோமேட்டிக் கார்கள் இப்போது அதிகமான மக்களால் விரும்பப்படுகின்றன. ஏனெனில் அவை ஓட்டுவதற்கு எளிதானது மற்றும் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சீராக செல்லும். ஆனால் அதில் சில குறைகளும் இருக்கின்றன. இந்த கட்டுரையில் ஆட்டோமேட்டிக் கார்களின் நன்மைகள் மற்றும் அதில் உள்ள குறைகள் குறித்து பார்க்கலாம்.

பெட்ரோல், டீசல் கார், ஆட்டோமேட்டிக் கார் (Automatic Car), எலக்ட்ரிக் கார் (Electric Car) என பல விதமான கார்கள் இந்திய சந்தைகளில் கிடைக்கின்றன. இந்த கார்கள் நம் பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் பல மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில் ஆட்டோமேட்டிக் கார்களின் வருகைக்கு பிறகு கார்களில் அடிக்கடி கியர் மாற்ற வேண்டிய டென்ஷன் இல்லை. இருப்பினும், இந்த ஆட்டோமேட்டிக் கார்களில் சில நன்மைகளையும் சில தீமைகளையும் கொண்டுள்ளன. இதனால் கார் வாங்குவதற்கு முன் அது பற்றி விவரமாக தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.
ஆட்டோமேட்டிக் கார்கள் குறித்து சரியாக தெரியாமல் கார் வாங்கும்போது, ஒரு சிறிய தவறு பெரிய சிக்கலில் சிக்க வைக்கும். ஒரு காரை வாங்கும் போது, வெறும் விருப்பத்தின் அடிப்படையில் மட்டும் முடிவெடுக்காமல், உங்கள் தேவைகளை மனதில் கொண்டு ஒரு முடிவை எடுக்க வேண்டும். முதலில் பட்ஜெட் குறித்து திட்டமிடுங்கள். பின்னர் உங்கள் குடும்பத்தின் தேவையை புரிந்துகொண்டு முடிவெடுப்பது நல்லது.
அந்த வகையில் இப்போது புதிய வாங்குபவர்களின் மனதில் வரும் மிகவும் பொதுவான கேள்வி ஆட்டோமேட்டிக் காரை வாங்கலாமா? வேண்டாமா? என்பதுதான். ஆட்டோமேட்டிக் காரின் நன்மைகள் மற்றும் தீமைகளை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொண்டால் மட்டுமே சரியான முடிவை எடுக்க முடியும். இந்த கட்டுரையில் ஆட்டோமேட்டிக் கார்களின் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து பார்க்கலாம்.
ஆட்டோமேட்டிக் காரின் நன்மைகள்
1. தானியங்கி கார்களில் கிளட்ச் இருக்காது, காரின் வேகத்துக்கு ஏற்ப கியர்கள் தானாகவே மாறும், இதனால் அதிக போக்குவரத்து நெரிசலிலும் அவற்றை எளிதாக ஓட்ட முடியும்.
2. கியர் மாற்றங்கள் தானாகவே ஸ்மூத்தாக நடைபெறும். இதனால் ஓட்டுநர் சாலையில் மட்டும் கவனம் செலுத்தலாம். நீண்ட பயணங்களில் சோர்வு குறைவாக இருக்கும்.
3. புதிதாக வாகனம் ஓட்டுபவர்களுக்கும், மேனுவல் கியர் கார்களை ஓட்டுவதில் சிரமப்படுபவர்களுக்கும், ஆட்டோமேட்டிக் கார் ஒரு சிறந்த தேர்வாகும்.
4. கியர்களையும் கிளட்சையும அடிக்கடி பயன்படுத்த வேண்டியதில்லை என்பதால் கார் பாதிப்படையாது.
ஆட்டோமேட்டிக் கார்களில் உள்ள குறைகள்
1. ஆட்டோமேட்டிக் கார்கள், மேனுவல் கார்களை விட விலை அதிகம். ஏனென்றால் அவற்றில் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அதற்கான விலை கொஞ்சம் அதிகம்.
2. ஆட்டோமேட்டிக் காரை சர்வீஸ் மற்றும் பராமரிப்பு செலவு சற்று அதிகம்.
3. கியர்களை மாற்றுவதில் ஓட்டுநருக்கு முழு கட்டுப்பாடு இருக்காது. இதனால் கியர் கார்களை மாற்றும்போது சிக்கல் ஏற்படலாம்.
ஒட்டுமொத்தமாக, ஆட்டோமேட்டிக் கார்கள் பல நன்மைகளைக் கொண்டிருந்தாலும், அவற்றில் சில தீமைகளும் உள்ளன. உங்கள் விருப்பம், மற்றும் டிராஃபிக்கில் அதிகம் பயணிக்க வேண்டியிருந்தால் ஆட்டோமேட்டிக் கார் சிறந்ததாக இருக்கலாம். ஆனால் நீங்கள் பட்ஜெட் விலையில் கார்களை வாங்க வேண்டும் என்றோ அல்லது கியர் கார்களை வாங்க வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கு மேனுவல் கார்கள் தான் சரியானதாக இருக்கும்.