Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பெட்ரோல் – டீசல் காரை எலக்ட்ரிக் காராக மாற்றுவது நல்லதா? என்ன சிக்கல் ஏற்படும்?

Electric Car Update : இந்தியாவில் ஒரு சிலர் புதிய எலக்ட்ரிக் கார்கள் வாங்குவதற்கு பதிலாக பழைய பெட்ரோல், டீசல் கார்களை எலக்ட்ரிக் கார்களாக மாற்றுகின்றனர். இந்த கட்டுரையில் பழைய கார்களை எலக்ட்ரிக் கார்களாக மாற்றுவது நல்லதா? அதனால் என்ன சிக்கல்கள் ஏற்படும் என்பது குறித்து பார்க்கலாம்.

பெட்ரோல் – டீசல் காரை எலக்ட்ரிக் காராக மாற்றுவது நல்லதா? என்ன சிக்கல் ஏற்படும்?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 01 Jul 2025 19:35 PM

தற்போது, ​​இந்திய சந்தையில், பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) கார்களுக்கு போட்டியாக எலக்ட்ரிக் கார்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்போது பலர் பெட்ரோல்  மற்றும் டீசல் கார்களின் காலம் முடிந்துவிட்டது என்றும், எலக்ட்ரிக் கார்கள்தான் இனி எதிர்காலம் என்றும் நினைக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் நல்ல நிலையில் இருக்கும் கார்களை விற்று புதிய எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) வாங்குவது அனைவருக்கும் ஏற்றதாக இருக்காது. அந்த வகையில் உங்கள் பழைய பெட்ரோல் மற்றும் டீசல் காரை  எலக்ட்ரிக் காராக மாற்றுவது, அல்லது நேரடியாக ஒரு புதிய எலக்ட்ரிக் காரை வாங்குவது ஆகிய இரண்டு தேர்வுகளில் எது சரியாக இருக்கும் என்ற குழப்பம் அனைவருக்கும் இருக்கும்.  முதலில் உங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை எலக்ட்ரிக் கார்களாக மாற்றும்போது அதன் நடைமுறை என்ன?  அதில் உள்ள சிக்கல் என்ன? என்பது குறித்து முதலில் தெரிந்துகொள்வது அவசியம்.

பழைய காரை மின்சார காராக மாற்றும் முறை

உங்களிடம் ஏற்கனவே பெட்ரோல் அல்லது டீசல் கார் நல்ல நிலையில் இருந்தால், அதை விற்பதற்கு பதிலாக இன்னும் சில வருடங்களுக்குப் பயன்படுத்த விரும்பினால், எலக்ட்ரிக் காராக மாற்றுவது சிறந்த ஆப்சனாக இருக்கலாம். இப்போதெல்லாம், இந்தியாவில்  பெட்ரோல், டீசல் கார்களை எலக்ட்ரிக் கார்களாக மாற்றுவதற்கு தேவையான கருவிகளை வழங்கும் பல நிறுவனங்கள் உள்ளன. முதலில், உங்கள் கார் அரசால் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளின்படி மறுசீரமைப்புக்கு தகுதியுடையதா என்பதை நீங்கள் சரிபார்க்க வேண்டும். பொதுவாக, 10 ஆண்டுகளுக்கு மேல் பழமையான டீசல் கார்களும், 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பெட்ரோல் கார்களும் இயங்க தடைவிதிக்கப்படும் வாய்ப்பிருக்கிறது.

எலக்ட்ரிக் காராக எப்படி மாற்றுவது?

இதுபோன்ற சந்தர்ப்பங்களில், முதலில் உங்கள் பகுதிக்குட்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (RTO) காருக்கான பதிவை ரத்து செய்வது அவசியம். இதற்குப் பிறகு, எலக்ட்ரிக் கிட்டை பொறுத்த அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களைத் தொடர்பு கொள்ள வேண்டும். இதற்காக, மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆன்லைன் போர்டல்கள் அல்லது மாநில போக்குவரத்துத் துறையின் வலைதளம் மூலம் சான்றளிக்கப்பட்ட எலக்ட்ரிக் கார் நிறுவனங்கள் பற்றிய தகவலைப் பெறலாம்.

வட்டார போக்குதவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்

இந்த நிறுவனங்களைத் தொடர்புகொள்வதன் மூலம், உங்கள் காரின் மாடல் மற்றும் தற்போதைய நிலையின் அடிப்படையில் எலக்ட்ரிக் கார்களுக்கான என்ஜினைத் தேர்ந்தெடுக்கலாம். இதனுடன், பேட்டரி திறன், மோட்டார் விவரக்குறிப்புகள் மற்றும் அதற்கான செலவு பற்றிய முழுமையான தகவல்களும் உங்களுக்கு வழங்கப்படும். இன்ஜின் மாற்றப்பட்டதும், வாகனம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் எலக்ட்ரிக் காராக பதிவு செய்யப்பட வேண்டும், வாகனம் அனைத்து பாதுகாப்பு விதிகளுடன் இருக்கிறதா என்பதை உறுதி செய்வதற்காக, தகுதிச் சான்றிதழ் சமர்பிக்க வேண்டும்.  பின்னர் அதற்கான ஆய்வுகள் மற்றும் பிற தொழில்நுட்ப சோதனைகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் உங்கள் பழைய காரை எலக்ட்ரிக் காராக மாற்றலாம்.

பழைய காரை மின்சார காராக மாற்றுவதன் நன்மைகள்

பொதுவாக பெட்ரோல் மற்றும் டீசல் காரை மின்சார வாகனமாக மாற்றுவதற்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலவாகும். இது புதிய எலக்ட்ரிக் காரை வாங்குவதை விட மிகக் குறைவு. இருப்பினும், உங்கள் காரில் நீங்கள் பொருத்தும் மோட்டார், பேட்டரி, ஆகியவை அதன் தரத்துக்கு ஏற்ப விலை அதிகமாக இருக்கும்.

எலக்ட்ரிக் காராக மாற்றுவதில் உள்ள சிக்கல்கள்

எந்தவொரு அதிகாரப்பூர்வ சான்றிதழ் பெரும்பாலும் இருக்காது என்பதால் இது பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்புகிறது. சட்ட மற்றும் வட்டார போக்குவரத்து அவலுவலர் ஒப்புதல் தேவைப்படும். மேலும் இந்த செயல்முறை மிகவும் சிக்கலானதாக இருக்கலாம். மாற்றப்பட்ட எலக்ட்ரிக் கார்களில், புதிய எலக்ட்ரிக் கார்களைப் போன்ற ஸ்மார்ட் தொழில்நுட்பம், இணைப்பு அல்லது பேட்டரி மேலாண்மை அமைப்புகள் இருக்காது.