AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எந்த வழியில் டோல் கட்டணம் குறைவாக இருக்கும்? இனி இந்த ஆப் சொல்லும்!

Save on Highway Tolls : நெடுஞ்சாலையில் பயணிக்கும் பயணிகளுக்காக, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள ராஜ்மார்க் யாத்ரா ஆப்பில், இரண்டு இடங்களுக்கு இடையில் குறைந்த டோல் கட்டணம் வசூலிக்கும் பாதையை தேர்ந்தெடுக்க புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நேரமும் குறையும்.

எந்த வழியில் டோல் கட்டணம் குறைவாக இருக்கும்? இனி இந்த ஆப் சொல்லும்!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 27 Jun 2025 21:35 PM IST

அடிக்கடி தேசிய நெடுஞ்சாலைகளில் (Highway) பயணிக்கும் மக்களுக்கு தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தியை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ளது. டோல் கட்டண செலவுகளால் பாதிக்கப்படும் வாகன ஓட்டிகளுக்காக, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது, பயணிகள் ராஜ்மார்க் யாத்ரா (Rajmarg Yatra) ஆப் மூலம் எந்த பாதையில் குறைவான டோல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதை தெரிந்து கொண்டு, அதைத் தேர்வு செய்ய முடியும். இது அடிக்கடி தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆப் எப்படி செயல்படும்?

கடந்த 2023 ஆம் ஆண்டு அறிமுகமான ராஜ்மார்ஜ் யாத்ரா ஆப்பில் தற்போது தனிப்பட்ட நகரங்களுக்கிடையே டோல் கட்டணத்தில் குறைவாக செலவாகும் பாதையை தெரிந்து கொள்ளும் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. பிடிஐயின் வெளியிட்டுள்ள செய்தியின் படி  இந்த ஆப் இரண்டு நகரங்களுக்கு இடையிலான பல்வேறு நெடுஞ்சாலை வழிகளில் எங்கே டோல் கட்டணம் குறைவாக இருக்கும் என்பதை பயனர்களுக்கு தெரிவிக்கும். இதன் மூலம் குறைவான கட்டணம் உள்ள டோல்கேட் வழியாக பயணிக்க முடியும். நமது கட்டணம் குறைவாக இருக்கும்.  இந்த ஆப்பை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம்.

ராஜ்மார்க் யாத்ரா குறித்து பதிவு

 

இது குறித்து இந்திய ஹைவே மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் அம்ரித் சிங் இதுகுறித்து தெரிவித்ததாவது, டெல்லியில் இருந்து லக்னோ செல்ல மூன்று வழிகள் இருக்கின்றன. யமுனா எக்ஸ்பிரஸ்வே வழியாக போகலாம். இரண்டாவதாக காசியாபாத் – அலிகர் – கான்பூர் வழியாக லக்னோ போகலாம். 3வது மொராதாபாத் – பரேலி – சீதாபூர் வழியாக போகலாம். இந்த மூன்றிலும் எந்த வழியில் குறைந்த டோல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என ஆப் காட்டும். பயணிகள் அதனை தேர்வு செய்து செல்லலாம் என்றார்.

ஃபாஸ்டேக் ஆண்டு பாஸ்

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வருடாந்திர பாஸ் ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பாஸை ரூ. 3,000 செலுத்தி பெர்றுக்கொள்ளலாம். ஒரு ஆண்டு முழுவதும் அல்லது 200 டோல்கேட் கட்டணங்கள் வரை கட்டணம் இன்றி பயணிக்கலாம். இந்த பாஸ் வருகிற ஆகஸ்ட் 15 முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. இந்த பாஸ் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டேல்கேட்டுகளில் மட்டுமே செல்லுபடியாகும். மாநில அரசு டோல் கேட்டுகளில் செல்லுபடியாகாது.

ராஜ்மார்க் யாத்ரா ஆப்பில் அறிமுகமான இந்த புதிய டோல் வழிகாட்டுதல் அம்சமும் ஃபாஸ்டேக் பாஸும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி பயணிப்பவர்களுக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் மூலம் நமது பயண செலவுகளும் குறையும். அது மட்டுமல்லாமல் நேரமும் மிச்சப்படும்.

Follow Us