AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஏஐ வசதிகளுடன் அடோபியின் Firefly செயலி – இனி ஈஸியா எடிட் பண்ணலாம் – வேற என்ன ஸ்பெஷல்?

Firefly Goes Mobile : அடோபி நிறுவனம் தனது ஃபயர்ஃபிளை அம்சங்களை ஏஐ வசதியுடன் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஏற்ற வகையில் செயலியாக வெளியிட்டுள்ளது. இதில் உள்ள ஏஐ கருவிகள் போட்டோ மற்றும் வீடியோக்களை எடிட் செய்வதை மிக எளிதாக மாற்றியிருக்கிறது. இந்த செயலியில் வேறு என்ன ஸ்பெஷல் என்பது குறித்து பார்க்கலாம்.

ஏஐ வசதிகளுடன் அடோபியின் Firefly செயலி – இனி ஈஸியா எடிட் பண்ணலாம் – வேற என்ன ஸ்பெஷல்?
ஃபயர்ஃபிளை ஆப்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 18 Jun 2025 18:07 PM IST

அடோபி (Adobe) நிறுவனம் தனது புகழ்பெற்ற ஃபயர்ஃபிளை (Firefly) செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) கருவிகளை ஸ்மார்ட்போன் பயனர்களுக்கும் எளிதாக அணுகக்கூடிய வகையில், புதிய மொபைல் செயலியாக Android மற்றும் iOS பயனர்களுக்கு ஏற்ற வகையில் வெளியிட்டுள்ளது. இந்த புதிய செயலி, படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்குவதற்கான ஏஐ அடிப்படையிலான பல அம்சங்களை வழங்குகிறது. Photoshop, Lightroom போன்ற டெஸ்க்டாப் பயன்பாடுகளில் ஏற்கனவே உள்ள ஃபயர்ஃபிளை அம்சங்களை, இப்போது ஒரு தனி செயலியாக வெளியிட்டிருக்கிறது. இனி போனில் இருந்த படியே ஃபயர்ஃபிளையின் முக்கிய அம்சங்களை பயன்படுத்த முடியும். மேலும் ஏஐ வசிகளும் இதில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால் எடிட்டிங் பணிகளை விரைவாக செய்ய முடியும்.

முக்கிய அம்சங்கள் என்ன?

1. ஜெனரேட்டிவ் ஃபில் (Generative Fill):

போட்டோவில் உள்ள தேவையற்ற பகுதிகளை அழிக்கலாம். படத்தில் இல்லாத புதிய பொருட்களை எளிதாக சேர்க்கலாம்.

2. ஜெனரேட்டிவ் எக்ஸ்பாண்ட் (Generative Expand):

ஒரு போட்டோவின் சைஸை (Size) நீங்கள் விரும்பும் அளவில் மாற்ற முடியும். குறிப்பாக சமூக ஊடகங்களுக்கு ஏற்ற வகையில் அதன் அளவை மாற்ற முடியும்.

3. தகவலுக்கு ஏற்ப போட்டோ, வீடியோ உருவாக்கலாம் (Text-to-Image / Text-to-Video):

பயனர் அளிக்கும் தகவலுக்கு ஏற்ப அடிப்படையாகக் கொண்டு போட்டோ மற்றும் வீடியோக்களை உருவாக்கலாம். தற்போது வரை 5 விநாடி வரை வீடியோக்கள் உருவாக்க முடிகிறது.

4. இமேஜ் டூ வீடியோ (Image-to-Video)

நீங்கள் அளிக்கும் புகைப்படத்தைக் கொண்டு வீடியோ உருவாக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

அடோபியின் ஏஐ நிபுணர் உருவாக்கிய வீடியோ

 

இந்த செயலி மூலமாக, ஓபன்ஏஐ, கூகுள், மற்றும் மெட்டா போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக அடோபி தனது சொந்த ஏஐ மாதிரிகளை வழங்குகிறது. மேலும், பயனர்கள் தங்களது படைப்புகளை Creative Cloud கணக்கில் சேமிக்கும் வசதியும் அளிக்கிறது. பின்னர் அவற்றை டெஸ்க்டாப் இயங்குதளங்களில் திருத்தும் வசதியும் கிடைக்கிறது.

ஃபயர்ஃபிளை செயலி பயன்படுத்த கட்டணம்?

இந்த செயலியை பயன்படுத்த மாத சந்தா செலுத்த வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக மாதம் ரூ .400 செலுத்தி இந்த சேவையை பயன்படுத்தலாம். மேலும் கூடுதலாக ப்ரீமியம் அம்சங்களும் உங்களுக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. விரைவில் மக்களின் பயன்பாட்டைப் பொறுத்து இதன் கட்டணம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us