Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

எலான் மஸ்க்கின் புதிய Xchat: வாட்ஸ்அப்பிற்கும் எக்ஸ்சாட்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா?

WhatsApp vs XChat : எலான் மஸ்க் புதிதாக எக்ஸ் சாட் என்ற குறுஞ்செய்தி சேவையை அறிமுகப்படுத்தவிருக்கிறார். இதில் மெசேஜ் , ஆடியோ வீடியோ கால் பேசுவது போன்ற பல சேவைகளை பெறலாம். இந்த கட்டுரையில் எலான் மஸ்க்கின் எக்ஸ்சாட்டிற்கும் வாட்ஸ்அப்பிற்கும் உள்ள வித்தியாசம் குறித்து பார்க்கலாம்.

எலான் மஸ்க்கின் புதிய Xchat: வாட்ஸ்அப்பிற்கும் எக்ஸ்சாட்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 03 Jun 2025 20:27 PM

எலான் மஸ்க் (Elon Musk) கடந்த  2022  ஆம் ஆண்டு டிவிட்டரை வாங்கிய பிறகு அதனை எக்ஸ் (X) என பெயர் மாற்றினார். அதில் பல்வேறு மாற்றங்களை செய்தார். அதில் சில அம்சங்கள் அதன் யூசர்களின் அதிருப்தியை பெற்றது. அந்த வகையில். இப்போது புதிய அம்சமாக எக்ஸ் சாட் ( XChat )எனும் குறுஞ்செய்தி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளார். இது தற்போது பீட்டா பரிசோதனை நிலையில் இருக்கிறது. மேலும் முழுமையாக அனைத்து பயனர்களுக்கும் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வாட்ஸ்அப் போல முற்றிலும் End-to-End Encryption மூலம் செயல்படும் என கூறப்படுகிறது. மேலும் போட்டோக்கள், வீடியோக்கள், பிடிஎஃப் ஃபைல்களை அனுப்பவது போன்ற பல பணிகளை செய்ய முடியும். குறிப்பாக இதில் ஆடியோ, வீடியோ கால் செய்யலாம், நாம் அனுப்பும் மெசேஜ்கள் குறிப்பிட்ட கால அளவில் தானாக அழியும் போன்ற பல வசதிகளைக் கொண்டிருக்கிறது.

வாட்ஸஅப்பிற்கும் எக்ஸ் சாட்டிற்கும் இடையே உள்ள வித்தியாசம்

  • மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப் தனி செயலியாக செயல்படும். எக்ஸ் சாட், எக்ஸ் தளத்துடன் இணைந்து செயல்படும்.
  • எக்ஸ் கணக்கு மூலம் எக்ஸ் சாட்டில் இணையலாம். வாட்ஸ்அப்பை பொறுத்தவரை மொபைல் எண்ணை அடிப்படையாகக் கொண்டு இணைய வேண்டும்.
  • மேசேஜ், ஆடியோ, வீடியோ செய்யும் வசதி, அனைத்து வித ஃபைல்களை அனுப்பும் வசதி ஆகியவை எக்ஸ் சாட்டில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதே போல வாட்ஸ்அப்பிலும் ஆடியோ, வீடியோ செய்யும் வசதி, மேசேஜ் செய்யும் வசதி, போட்டோ, வீடியோ, டாக்குமென்ட்கள் அனுப்பும் வசதி, குரூப் கால் போன்ற பல அம்சங்கள் வாட்ஸ்அப்பில் இருக்கிறது.
  • எக்ஸ்சாட் தளத்தில் குறிப்பிட்ட காலத்தில் மேசேஜ் தானாக அழியும். வாட்ஸ்அப்பை பொறுத்தவரை நாம் விருப்பத்தை பொறுத்து அந்த ஆப்சனை தேர்வு செய்துகொள்ளலாம்.
  • தற்போது எக்ஸ்சாட் வசதியானது, பீட்டா, எக்ஸ் ப்ரீமியம் வாடிக்கையாளர்கள் மட்டும் பயன்படுத்த முடியும். வாட்ஸ்அப்பை பொறுத்தவரை உலக அளவில் 2 பில்லியன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

எக்ஸ் சாட் குறித்து எலான் மஸ்க்

 

எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில், ” புதிய எக்ஸ் சாட் செயலிலயில் நாம் அனுப்பும் செய்திகள் குறிப்பிட்ட கால இடைவேளையில்அழியும். மேலும் அனைத்து விதமான ஃபைல்களை அனுப்பலாம். ஆடியோ மற்றும் விடியோ கால் பேசலாம். இது பிட்காயின் ஸ்டைலில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்துடன் உருவாக்கப்படும் என குறிப்பிட்டிருந்தார்.  இதன் மூலம் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற  செயலிகளுக்கு ஒரு நேரடி போட்டியாக எலான் மஸ்க் இதனை உருவாக்குகிறார்.

இனி வாட்ஸ்அப்பில் ஸ்டோரேஜ் பிரச்னை இருக்காது - எப்படி?
இனி வாட்ஸ்அப்பில் ஸ்டோரேஜ் பிரச்னை இருக்காது - எப்படி?...
விஜய் தனித்து போட்டியிட வேண்டும் - திருமாவளவன்..
விஜய் தனித்து போட்டியிட வேண்டும் - திருமாவளவன்.....
 ஈரான் மீது  தாக்குதல் நடத்திய இஸ்ரேல்
 ஈரான் மீது  தாக்குதல் நடத்திய இஸ்ரேல்...
விஜய் சேதுபதி - ருக்மினி வசந்தின் 'ஏஸ்' படம் ஓடிடியில் வெளியானது!
விஜய் சேதுபதி - ருக்மினி வசந்தின் 'ஏஸ்' படம் ஓடிடியில் வெளியானது!...
மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 எப்போது தொடங்குகிறது? வைரலாகும் அப்டேட்
மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 எப்போது தொடங்குகிறது? வைரலாகும் அப்டேட்...
ஜி.வி.பிரகாஷிற்கு வீடியோ வெளியிட்டு வாழ்த்து சொன்ன சுதா கொங்கரா
ஜி.வி.பிரகாஷிற்கு வீடியோ வெளியிட்டு வாழ்த்து சொன்ன சுதா கொங்கரா...
கொலஸ்ட்ரால் கூடுதா? உடம்பில் காட்டும் சில அறிகுறிகள் இவைதான்!
கொலஸ்ட்ரால் கூடுதா? உடம்பில் காட்டும் சில அறிகுறிகள் இவைதான்!...
நாளை நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..
நாளை நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.....
ஹெலிகாப்டரில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த ஜீப்ரா - வைரல் வீடியோ!
ஹெலிகாப்டரில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த ஜீப்ரா - வைரல் வீடியோ!...
விமான விபத்தின் போது விடுதியில் இருந்து தப்பிய சென்னை மருத்துவர்
விமான விபத்தின் போது விடுதியில் இருந்து தப்பிய சென்னை மருத்துவர்...
சண்முகப் பாண்டியனின் படைத்தலைவன் படம் எப்படி இருக்கு?
சண்முகப் பாண்டியனின் படைத்தலைவன் படம் எப்படி இருக்கு?...