AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வாட்ஸ்அப்பில் முக்கிய அப்டேட்: இனி மெசேஜ்களை இழக்காமல் லாக் அவுட் பண்ணலாம்!

WhatsApp New Update : உலக அளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் மெசேஞ்சராக வாட்ஸ்அப் இருந்து வருகிறது. இந்த நிலையில் மெட்டாவின் மற்ற சமூக வலைதளங்களை போல வாட்ஸ்அப்பில் லாக் அவுட் செய்ய முடியாது. அப்படியே செய்தால் நம் டேட்டாக்களை இழக்க நேரிடும். இதனைக் கருத்தில் கொண்டு வாட்ஸ்அப் புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தவிருக்கிறது.

வாட்ஸ்அப்பில் முக்கிய அப்டேட்: இனி மெசேஜ்களை இழக்காமல் லாக் அவுட் பண்ணலாம்!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 31 May 2025 19:37 PM IST

உலக அளவில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் மெசேஜிங் ஆப்களில் ஒன்றான வாட்ஸ்அப் (WhatsApp), தற்போது ஒரு முக்கியமான அம்சத்தை சோதனை முறையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சம், பயனாளர்கள் தங்களது கணக்கை எந்தவொரு தகவல் இழப்பும் இல்லாமல் லாக் அவுட் செய்ய அனுமதிக்கிறது. இதன் மூலம், தற்காலிகமாக வாட்ஸ்அப்பிலிருந்து இடைவெளி தேடும் பயனாளர்களுக்கு இது மிகப் பெரிய நிம்மதியாக அமையும். இன்று நம்மில் பலர் ‘டிஜிட்டல் டிடாக்ஸ்’ எனப்படும் இணைய இடைவெளி தேடும் நிலையில் இருக்கின்றனர். ஆனால், வாட்ஸ்அப்பில் லாக் அவுட் செய்யும் வசதி இல்லாததால், அல்லது செய்திகளை இழக்கும் அச்சத்தால், அதை வாட்ஸ்அப்பில் இருந்து குறுகிய கால அளவில் முடியாமல் தவிக்கின்றனர். இந்த நிலையை மாற்றுவதற்காகவே வாட்ஸ்அப் நிறுவனம் இந்த புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

வாட்ஸ்அப்பின் புதிய லாக் அவுட் அம்சம்

இந்த புதிய அம்சம் தற்போது பீட்டா (Beta) பரிசோதனை நிலையில் உள்ளதாக ஆண்ட்ராய்டு அத்தாரிட்டி வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பயனாளர்களுக்கு இரண்டு விதமான லாக் அவுட் விருப்பங்கள் வழங்கப்படவுள்ளன:

  1. Erase All Data and Preferences : இது அக்கவுண்டை முற்றிலுமாக நீக்குவது போலவே செயல்படும். அனைத்து மெசேஜ்கள், மீடியா, பிரிபரன்ஸ்கள் அனைத்தும் நீக்கப்படும்.

  2. Keep All Data and Preferences: இந்த விருப்பத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம், பயனாளர்கள் எந்தவொரு தகவலையும் இழக்காமல் மீண்டும் தங்கள் எண்ணை உள்ளீடு செய்து வாட்ஸ்அப்பில் உடனடியாக மீண்டும் இணையலாம். மெசேஜ்கள், மீடியா, குழுக்கள் போன்ற அனைத்தும் பாதுகாக்கப்படும்.

மெட்டா தளங்களைப் போலவே வசதிகள்

ஃபேஸ்புக் போன்ற மெட்டாவின் மற்ற தளங்களில் பல ஆண்டுகளாகவே லாக் அவுட் வசதி உள்ளது. அதேபோல, WhatsApp இல் இப்போது இந்த வசதி கொண்டு வரப்படுவதால், பயனாளர்களுக்கு இன்னும் தங்கள் வாட்ஸ்அப் கணக்கை விருப்பத்துக்கு ஏற்ப பயன்படுத்த முடியும்.

வாட்ஸ்அப்பின் இணைய பதிப்பிற்கும் புதிய அம்சம்

மேலும், வாட்ஸ்அப்பின் வலைதள பதிப்பில் (WhatsApp Web) ‘மீடியா ஹப்’ என்ற புதிய அம்சமும் விரைவில் அறிமுகமாக உள்ளது. இதன் மூலம் பகிரப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள், லிங்குகள் ஆகியவற்றை ஒரே இடத்தில் பார்க்கவும், நிர்வகிக்கவும் வசதி செய்யப்படுகிறது. இது ஏற்கனவே பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்படுகிறது.

வாட்ஸ்அப்பில் லாக் அவுட் மற்றும் மீடியா ஹப் ஆகிய இந்த இரண்டு புதிய அம்சங்களும் பயனாளர்களின் தனிப்பட்ட விருப்பங்களை மதிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. பயனாளர்களுக்கு முழுமையான கட்டுப்பாட்டை வழங்கும் இந்த அப்டேட்கள், வாட்ஸ்அப்பை இன்னும் எளிதாக பயன்படுத்தக் கூடிய வகையில் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us