Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வாட்ஸ்அப்பில் வரும் போட்டோவை தொட்டால் உங்கள் பணம் காலி – தவிர்ப்பது எப்படி ?

Beware of WhatsApp Images : தற்போது சைபர் குற்றவாளிகள், ஸ்டெகனோகிராபி என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வாட்ஸ்அப் மூலம் மக்களின் விவரங்களை திருடி வருகின்றனர். மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தெரியாத எண்ணில் இருந்து போட்டோவை டவுன்லோடு செய்ததால் ரூ.2 லட்சத்தை இழந்துள்ளார். இந்த மோசடி எப்படி நடைபெறுகிறது? இதில் இருந்து எப்படி தப்பிப்பது ? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வாட்ஸ்அப்பில் வரும் போட்டோவை தொட்டால் உங்கள் பணம் காலி – தவிர்ப்பது எப்படி ?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 26 May 2025 16:30 PM

சென்னை, மே 26 : மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் நகரைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர் தனக்கு கடந்த வாரம் வாட்ஸ்அப்பில் (WhatsApp) வந்த ஒரு சாதாரண போட்டோவால் ரூ.2 லட்சம் இழந்திருக்கிறார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வாட்ஸ்அப் பரவலாக நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் ஒரு தொலைத்தொடர்பு செயலி. உறவினர்கள், நண்பர்களுடன் உரையாட, வீடியோ காலில் பேச, அலுவலக பணிகளை மேற்கொள்ள என அனைத்து விதமான பணிகளுக்கும் வாட்ஸ்அப் மிக அவசியம்.  இந்த நிலையில் சமீபத்தில் வாட்ஸ்அப் மூலம் போட்டோ அனுப்பி அதன் மூலம் மக்களின் பணம் திருடப்படும் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வாட்ஸ்அப் மூலம் நடைபெறும் மோசடி

இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள் மால்வேர்களைக் (Malware) கொண்ட படங்களை வாட்ஸ்அப் வழியாக அனுப்புகிறார்கள். இந்த படங்களை டவுன்லோடு செய்தவுடன், அது நம் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்யப்பட்டு நம் அனுமதி இல்லாமல் செயல்படத் தொடங்குகிறது. குறிப்பாக நமது வங்கி விபரங்கள், பாஸ்வேர்டுகள், OTP-கள் போன்றவற்றை தகவல்களை திருடி மோசடியில் ஈடுபடும் நபர்களுக்கு அனுப்புகிறது. இந்த தொழில்நுட்பம் ஸ்டெகனோகிராபி (Steganography) என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு போட்டோவின் உள்ளே மெட்டா டேட்டா பகுதியில் மோசடி குறியீடுகளை (malicious code) மறைமுகமாக பதிவேற்றி அனுப்பப்படுகிறது. சாதாரணமாக அந்த போட்டோவை பார்க்கும்போது தவறாக தோன்றாது. ஆனால் உள்ளே மால்வேர் ஒளிந்திருக்கும்.

மோசடி எப்படி செயல்படுகிறது?

எப்படி இந்த மோடியைத் தவிர்ப்பது?

  1.  வாட்ஸ்அப்பில் Auto Download-ஐ நிறுத்துங்கள். WhatsApp Settings > Storage and Data சென்று, Automatic media download-ஐ நிறுத்தி விடுங்கள்.

  2. அறிமுகமில்லாத நபர்களிடம் இருந்து வரும் படங்களைத் தவிருங்கள். தெரியாத நபரிடம் இருந்து வரும் போட்டோவை டவுன்லோடு செய்ய வேண்டாம். சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக பிளாக் அல்லது ரிப்போர்ட் செய்யவும்.

  3. குரூப்பில் சேர்ப்பதை கட்டுப்படுத்துங்கள். Settings > Privacy > Groups > My Contacts என்று மாற்றி வைத்தால், யாரும் உங்களை அனுமதி இல்லாமல் வாட்ஸ்அப் குரூப்பில் சேர்க்க முடியாது.

  4. முக்கிய தகவல்களை பகிர வேண்டாம். OTP, வங்கி விவரங்கள் போன்றவற்றை எப்போதும் வாட்ஸ்ப்பில் பகிர வேண்டாம்.

உலக அளவில் வாட்ஸ்அப்பை 3 பில்லியன் பயனாளர்கள் பயன்படுத்துகின்றனர், இந்தியாவில் மட்டும் 50 கோடி பேர் பயன்படுத்துகிறார்கள். வாட்ஸ்அப் நம் வேலைகளை எளிமையாக்கியிருக்கிறது என்றாலும், அதனை பயன்படுத்துவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் இது போன்ற பண மோசடிகளில் மாட்டிக்கொள்ள நேரிடும்.

டார்க் சாக்லேட் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
டார்க் சாக்லேட் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?...
நியாபக மறதி பிரச்னையா? இந்த ஜப்பானிய பயிற்சிகளை டிரை பண்ணுங்க!
நியாபக மறதி பிரச்னையா? இந்த ஜப்பானிய பயிற்சிகளை டிரை பண்ணுங்க!...
குழந்தைகளிடையே அதிகரிக்கும் டைப் 1 சர்க்கரை நோய்
குழந்தைகளிடையே அதிகரிக்கும் டைப் 1 சர்க்கரை நோய்...
தனுஷின் குபேரா படத்திற்கு வந்த முதல் விமர்சனம் - வைரலாகும் போஸ்ட்
தனுஷின் குபேரா படத்திற்கு வந்த முதல் விமர்சனம் - வைரலாகும் போஸ்ட்...
சோளிங்கர் அருகே வீடு புகுந்து சிறுமி கொலை - பரபரப்பு சம்பவம்
சோளிங்கர் அருகே வீடு புகுந்து சிறுமி கொலை - பரபரப்பு சம்பவம்...
பிக்பாஸ் தர்ஷன் நாயகனாக நடித்த சரண்டர் படத்தின் டீசர் இதோ!
பிக்பாஸ் தர்ஷன் நாயகனாக நடித்த சரண்டர் படத்தின் டீசர் இதோ!...
தாய்ப்பால் கொடுக்கும் போது குல்கந்து சாப்பிடலாமா?
தாய்ப்பால் கொடுக்கும் போது குல்கந்து சாப்பிடலாமா?...
2025 ஆம் ஆண்டு பக்ரீத் பண்டிகை எப்போது? - தேதி அறிவிப்பு!
2025 ஆம் ஆண்டு பக்ரீத் பண்டிகை எப்போது? - தேதி அறிவிப்பு!...
ஜூன் மாதம் ஓடிடியில் வெளியாகும் டூரிஸ்ட் ஃபேமிலி... அப்டேட் இதோ
ஜூன் மாதம் ஓடிடியில் வெளியாகும் டூரிஸ்ட் ஃபேமிலி... அப்டேட் இதோ...
அன்பு மன்னிப்பு கேட்காது - சர்ச்சைக்கு கமல் விளக்கம்
அன்பு மன்னிப்பு கேட்காது - சர்ச்சைக்கு கமல் விளக்கம்...
ரெட்ரோ படத்தின் புதிய ஓடிடி வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு!
ரெட்ரோ படத்தின் புதிய ஓடிடி வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு!...