மழை உள்ளிட்ட காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கும் Mausam App – அதில் என்ன ஸ்பெஷல்?
Govt Weather Alert App : இந்திய வானிலை ஆய்வு மையம் உருவாக்கிய Mausam App பயனர்களுக்கு நேரடி வானிலை தகவல்களையும், மழை, வெப்ப அலை, புயல் போன்ற கடுமையான வானிலை மாற்றங்களுக்கு முன் எச்சரிக்கைகளையும் வழங்குகிறது.மேலும் பிரத்யேகமாக நம் லொகேஷனுக்கு ஏற்ப தகவல்களை வழங்குவதால் இது மிகவும் பயனுள்ளதாக பார்க்கப்படுகிறது.

தற்போது காலநிலை மாற்றங்களைல (Climate Change) கணிக்க முடியாததாக இருந்து வருகிறது. தற்போது அக்னி நட்சத்திரம் நிலவி வரும் நிலையில் தமிழ் நாடு (Tamil Nadu), கேரளா ஆகிய மாநிலங்களில் கன மழை வெளுத்து வாங்குகிறது. திடீரென பெய்யும் மழை மக்களுக்கு சவாலானதாக மாறி வருகிறது. இதனால் வரப்போகும் கனமழை, வெப்ப அலை போன்றவற்றை பற்றி முன்பே அறிய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறோம். இந்த சூழலில், இந்திய வானிலை ஆய்வு மையம் உருவாக்கிய மௌசம் (Mausam) எனும் செயலி, மக்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த ஆப்பின் மூலம், உங்கள் பகுதியில் மழை, வெப்ப அலை, புயல், இடியுடன் கூடிய கன மழை உள்ளிட்ட பல்வேறு வானிலை மாற்றங்கள் குறித்த தகவல்களை உடனுக்குடன் பெற முடியும்.
Mausam App என்றால் என்ன?
மௌசம் ஆப் என்பது இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் மத்திய புவி அறிவியல் அமைச்சகம் இணைந்து உருவாக்கிய ஒரு அதிகாரப்பூர்வ வானிலை தகவல் செயலியாகும். இது நிகழ் நேர வானிலை தகவல்கள், முன்கூட்டிய கணிப்புகள், ரேடார் படங்கள், மற்றும் கால நிலை குறித்து எச்சரிக்கைகள் ஆகியவற்றை வழங்குகிறது. ஆண்ட்ராய்டு மொபைல் வைத்திருப்பவர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் Mausam – IMD என்று சர்ச்ச் செய்து வரும் ஆப் பை இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். பின்னர் உங்கள் விவரங்கள் மற்றும் லொகேஷன் ஆகியவற்றை அளித்து நோட்டிஃபிகேஷனை ஆன் செய்தால் மழை போன்ற அறிவிப்புகள் உங்களுக்கு உடனுக்கு உடன் கிடைக்கும்.
அதே போல ஐபோன் வைத்திருப்பவர்கள், ஆப் ஸ்டோருக்கு சென்று Mausam IMD என்று டைப் செய்து வரும் ஆப்பை தேர்ந்தெடுத்து கெட் கொடுத்தால் உங்கள் போனில் ஆப் இன்ஸ்டால் ஆகும். பின்னர் அதில் நோட்டிஃபிகேஷனை ஆன் செய்தால் உங்களுக்கு மழை போன்ற இயற்கை பேரிடர்களின் போது உங்களுக்கு சரியான நேரத்தில் தகவல்கள் கிடைக்கும்.
Mausam ஆப்பை எப்படி பயன்படுத்துவது?
- மழை, வெப்ப அலை, புயல் போன்றவைக்கு முன்னே எச்சரிக்கைகள் பெற, கீழ்க்காணும் முறையை பின்பற்றவும்.
- Mausam செயலியை திறக்கவும். உங்கள் மொபைல் இடம் மற்றும் அறிவிப்புகளுக்கான அனுமதிகளை வழங்கவும்.
- இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடும் முக்கிய வானிலை எச்சரிக்கைகள் தானாகவே அறிவிப்புகளாக வரும்.மேலும்,
- App Settings-ல் சென்று ‘Rain Alert’ என்ற ஆப்சனை தேர்வ செய்வது மிகவும் முக்கியம்
இந்த செயலி உங்கள் தேர்வு செய்த லொகேஷனுக்கு ஏற்ப, முக்கிய வானிலை மாற்றங்களைப் பற்றி நேரடி அறிவிப்புகளை வழங்கும். இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்கும் இந்த தகவல்கள் அதிகாரப்பூர்வமானது என்பதால் அதற்கு ஏற்ப நம் நாளை திட்டமிடலாம்.
Mausam App போன்ற அரசு செயலிகள், இயற்கை பேரழிவுகளுக்கு முன்கூட்டியே தயாராக இருக்க மிகவும் உதவுகின்றன. இது இலவசமாகவும், பயனுள்ளதாகவும் இருப்பதால், அனைவரும் இதனை மொபைலில் வைத்திருப்பது மிகவும் அவசியம்.