உலகம் முழுவதும் அதிக விற்பனையான ஸ்மார்ட்போன்களில் ஐபோன் (Iphone) முதல் இடத்தில் இருக்கிறது. அதன் தரம், மற்றும் பயன்பாடுகள் தான் அதன் விற்பனை அதிகரிப்பதற்கான காரணம். பொதுவாக ஐபோன்களின் விலை அதிகம் என்றாலும் மக்கள் அதனை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். பெரும்பாலும் ஆன்லைனில் ஐபோன் போன்ற பொருட்களை வாங்குவது தற்போது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் ஆன்லைனில் வாங்கும் சில பொருட்கள் போலியானதாகவும், பிரச்னைக்குரியதாகவும் இருக்கிறது. மேலும் இந்திய சந்தையில் போலி ஐபோன்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. உங்கள் புதிய ஐபோன் உண்மையா இல்லையா என்பதை எளிதில் கண்டறியும் சில முக்கிய வழிகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
போலி ஐபோன்கள் உருவாவதற்கு காரணம் என்ன?
-
ஐபோன்கள் உலகளவில் அதிகம் விற்பனையாகும் பிராண்டு.
-
அதிக தேவை காரணமாக போலி மாடல்கள் சந்தையில் அதிகரிக்கின்றன.
-
நம்பகமற்ற விற்பனையாளர்களிடம் வாங்கும் போதும், சர்வீஸுக்கு கொடுக்கும் போதும் உண்மை ஐபோனை போலியுடன் மாற்றப்படும் சாத்தியங்கள் அதிகரிக்கின்றன.
பேக்கேஜிங் மற்றும் ஆக்செசரிகளை சரிபாருங்கள்
உண்மை ஐபோன் பாக்ஸ்கள் எப்போதும் நல்ல தரமானதாக இருக்கும். அதில் உள்ள எழுத்துகள் பிழைகள் இல்லாமல் அச்சிடப்பட்டிருக்கும். எனவே பெயர் மற்றும் விவரங்கள் சரியாக இருக்கிறதா என ஒருமுறை பரிசோதனை செய்யுங்கள். அதில் சார்ஜர் கேபிள்கள் உள்ளிட்ட பொருட்கள் எல்லாம் தரமானவையாக இருக்கும். எனவே பேக்கிங் குவாலிட்டி, குறைந்த தரமான கேபிள்கள், அல்லது பாக்ஸில் எதாவது பொருட்கள் இல்லையென்றால் கேள்வி எழுப்புங்கள். உங்கள் புகார்களை பதிவு செய்து விளக்கம் பெறுங்கள்.
சீரியல் எண் மற்றும் IMEI நம்பரை செக் செய்யுங்கள்
-
Settings > General > About சென்று சீரியல் எண்ணை கண்டறியலாம்.
-
அந்த எண்ணை Apple Check Coverage இணையதளத்தில் உள்ளிட்டு உங்கள் ஐபோன் பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
-
IMEI எண்ணை தெரிந்து கொள்ள *#06# டயல் செய்யவும்.
-
அது சிம் ட்ரேயில் உள்ள IMEI எண்ணுடன் ஒத்துப் போகிறதா என உறுதி செய்யவும்.
பில்ட் குவாலிட்டி எப்போதும் பரிசோதிக்க வேண்டும்
-
ஒரிஜினல் ஐபோன்கள் மெட்டல் மற்றும் தரமான மேம்பாட்டுடன் விற்பனை செய்யப்படும்.
-
லூசான பட்டன்கள், தவறாக ஒட்டப்பட்ட ஆப்பிள் லோகோ, எடைக்குறைவு அல்லது ஸ்கிரீனில் வேறுபாடுகள் இருந்தால் போலியாக இருக்கலாம்.
சாப்ட்வேர் மூலம் உண்மை தெரிந்துகொள்ளுங்கள்
-
உண்மையான ஐபோன்கள் எப்போதும் லேட்டஸ்ட் iOS-ல் இயங்கும்.
-
Settings > General > Software Update சென்று iOS அப்டேட் இருக்கிறதா பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
-
Siri வேலை செய்கிறதா என பரிசோதிக்கவும். “Hey Siri” என அழைக்கும்போதோ அல்லது பவர் பட்டன் லாங் கிளிக் செய்யும்போதோ Siri ரெஸ்பாண்ட் செய்யவேண்டும்.
ஆப்பிள் சர்வீஸ் சென்டரில் பரிசோதிக்கலாம்
நீங்கள் சந்தேகத்தில் இருக்கிறீர்கள் என்றால், அருகிலுள்ள ஆப்பிளின் அதிகாரப்பூர்வ சர்வீஸ் சென்டருக்கு சென்று சென்று உங்கள் ஐபோனின் உண்மைத்தன்மையை சரிபார்க்கலாம். பண்டிகை காலங்களில் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் அதிக தள்ளுபடி விற்பனைகள் நடக்கின்றன. இதனால் போலி சாதனங்கள் விற்பனை ஆவதும் அதிகம். எனவே கவனத்துடன் இருங்கள்.