Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஸ்டேட்டஸை ஸ்பெஷலா…. கிரியேட்டிவா மாத்தலாம் – வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்

Creative WhatsApp Status Features : வாட்ஸ் அப் தனது ஸ்டேட்டஸ் பகுதியை மேலும் ஸ்பெஷலாக்கும் வகையில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த பகுதியில் பிடித்த இசையை ஸ்டேட்டஸில் பகிரும் பகுதிகளை அறிமுகப்படுத்திய நிலையில் கூடுதலாக Add Yours என்ற பகுதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்டேட்டஸை ஸ்பெஷலா…. கிரியேட்டிவா மாத்தலாம் – வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 02 Jun 2025 19:55 PM

இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில், மனிதர்கள் தங்கள் வாழ்க்கையின் சிறந்த தருணங்களை சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்து கொண்டு வருகிறார்கள். அதே போல், வாட்ஸ்அப்பின் (WhatsApp) ஸ்டேட்டஸ் எனும் சிறப்பு வசதி, நம் முக்கியமான தருணங்களை நெருங்கிய நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் பகிர்வதற்கான தனிப்பட்ட வாய்ப்பை வழங்குகிறது. இதனை மேலும் சிறப்பாக்கும் வகையில் வாட்ஸ் அப் தனது ஸ்டேட்டஸ் பகுதியில் புதிய சில சிறப்பம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. இவை பயனர்களுக்கு தங்கள் உணர்வுகளை, படைப்பாற்றலை மற்றும் தனித்துவத்தை மேலும் நன்கு வெளிப்படுத்த உதவுகின்றன. புதிய லேஅவுட் மூலம் ஒரே காட்சியில் அதிகபட்சம் ஆறு புகைப்படங்களை ஒன்றாகக் கொடுத்து அழகான கொலாஜ் உருவாக்கலாம். திருணம், பிறந்த நாள் போன்ற நிகழ்வுகளின் போது எடுக்கும் புகைப்படங்களை தனித்தனி ஸ்டேட்டஸாக வைக்காமல் ஒரே இடத்தில் வைக்கலாம்.

விருப்பமான பாடல்களை ஸ்டேட்டஸாக வைக்கலாம்

மேலும், “Music Posts” மூலம் பயனர்கள் தங்களின் மனநிலையை பிரதிபலிக்கும் பாடல்களை ஸ்டேட்டஸாக பகிர முடியும். பாடல் பாட்டுக்கான ஸ்டிக்கர் மூலம் அந்த புதுப்பிப்புக்கு மேலும் வண்ணம் சேர்க்க முடியும். இதோடு, போட்டோ ஸ்டிக்கர்ஸ் வசதியால் எந்த ஒரு புகைப்படத்தையும் ஸ்டிக்கராக மாற்றி, விருப்பமான அளவு மற்றும் வடிவில் ஸ்டேட்டஸில் சேர்க்கலாம்.

Add Yours மூலம் நண்பர்களுடன் பேசலாம்

 

“Add Yours” என்ற புதிய பகுதி மூலம், நண்பர்களிடையே ஒரு கலந்துரையாடலை துவக்கலாம். உங்கள் கேள்விக்கான பதில்களை நண்பர்களும் தங்கள் ஸ்டேட்டஸ் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். இதனால் ஸ்டேட்டஸ் என்பது வெறும் போட்டோ, வீடியோ பதிவிடும் இடமாக மட்டுமல்லாமல்  கலந்துரையாடலுக்கான இடமாக மாறுகிறது. இந்த புதிய அம்சங்கள் தங்களது தனிப்பட்ட அனுபவங்களை அதிகமாக வெளிப்படுத்தி, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை மேலும் அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது.

இந்த மாற்றங்கள் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்பட உள்ளன. குறிப்பாக, இந்தியா போன்ற உலகின் மிகப்பெரிய வாட்ஸ்அப் பயனர்களைக் கொண்டுள்ள இடம் என்பதால் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  வாட்ஸ்அப்பின் புதிய ஸ்டேட்டஸ் அம்சங்கள் நம் தினசரி வாழ்க்கையின் சிறந்த தருணங்களை, இசை மற்றும் படைப்பாற்றலுடன் பகிருவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாகவும், ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலை வளர்க்கும் இடமாக அமைந்துள்ளன.  இது வாட்ஸ்ப்பை நம் வாழ்க்கையின் ஒரு அவசியமான பகுதியான சுவாரஸ்யமான மற்றும் புதுமையான தகவல் தொடர்பு மேடையாக மேம்படுத்துகிறது.