Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

WhatsApp : இந்த மாடல் ஸ்மார்ட்போன்களில் இனி வாட்ஸ்அப் செயல்படாது.. பட்டியல் இதோ!

WhatsApp Will Not Work on These Model Smartphones | பெரும்பாலான மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். தகவல் பரிமாற்றத்திற்கு வாட்ஸ்அப் மிக முக்கிய செயலியாக உள்ள நிலையில், இன்று (ஜூன் 1, 2025) முதல் சில மாடல் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp : இந்த மாடல் ஸ்மார்ட்போன்களில் இனி வாட்ஸ்அப் செயல்படாது.. பட்டியல் இதோ!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 01 Jun 2025 12:01 PM

தகவல் பரிமாற்றத்திற்காக (Communication) பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் பல செயலிகளை பயன்படுத்துகின்றனர். அத்தகைய செயலிகளில் ஒன்றுதான் மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp). இந்த செயலியை பயன்படுத்தி நொடி பொழுதில் ஒருவருடன் தகவல் பரிமாற்றம் செய்ய முடியும். இந்த செயலி மூலம் மிக விரைவாகவும், எளிதாகவும் ஒருவரை தொடர்புக்கொள்ள முடிகிறது என்பதால் பலருக்கும் இது மிகவும் விருப்பமான செயலியாக உள்ளது. பலருக்கு தங்களது நாள் தொடங்குவது முதல், முடிவது வரை வாட்ஸ்அப்பில் தான் நடக்கிறது. இந்த அளவு பொதுமக்களின் வாழ்வில் வாட்ஸ்அப் மிக முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், இன்று (ஜூன் 1, 2025) முதல் சில ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் அதிகம் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலி

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியில் குறுஞ்செய்தி பரிமாற்றம், ஆடியோ கால், வீடியோ கால், ஆவண பரிமாற்றம் ஆகியவற்றை மேற்கொள்ளலாம். அனைத்து அம்சங்களும் ஒரே இடத்தில் கிடைப்பதால் பெரும்பாலான பொதுமக்கள் வாட்ஸ்அப் செயலியை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், பயனர்களின் நலனை கருத்தில் கொண்டும், அவர்கள் மிக எளிதாக செயலியை பயன்படுத்தவும் மெட்டா நிறுவனம் பல அதிரடி அம்சங்களை மேற்கொண்டு வருகிறது. இதேபோல பயனர்களின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் அம்சங்களையும் கலைந்து வருகிறது. அந்த வகையில், சில மாடல் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயலி இயங்குவதை அந்த நிறுவனம் நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

இன்று முதல் இந்த மாடல் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் இயங்காது

  • ஐபோன் 5s
  • ஐபோன் 6
  • ஐபோன் 6 பிளஸ்
  • ஐபோன் 6s
  • ஐபோன் 6s பிளஸ்
  • ஐபோன் எஸ்இ
  • சாம்சங் கேலக்ஸி எஸ்4
  • சாம்சங் கேலக்ஸி நோட் 3
  • சோனி எக்ஸ்பீரியா இசட் 1
  • எல்ஜி ஜி2
  • ஹவாய் அசென்ட் பி6
  • மோட்டோ ஜி
  • மோட்டோரோலா ரேஸர் எச்டி
  • மோட்டோ இ 2014

மேற்குறிப்பிட்ட இந்த மாடல் ஸ்மார்ட்போன்களில் இன்று (ஜூன் 1, 2025) வாட்ஸ்அப் செயலி இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.