Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஏசியை பயன்படுத்தும்போது காரின் மைலேஜ் எவ்வளவு குறையும்?

Car Mileage Alert: கோடைகாலத்தில் காரில் ஏசியை அதிகம் பயன்படுத்துவதன் காரணமாக மைலேஜ் குறையும் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் எவ்வளவு குறையும் என்பது பலருக்கும் தெரியாது. ஏசி சரியாக இயங்க இன்ஜினில் இருந்து பவரை எடுத்துக்கொள்ளும். இது எரிபொளுள் பயன்பாட்டை அதிகரிக்கும். இந்த கட்டுரையில் காரில் ஏசி பயன்படுத்துவதால் எவ்வளவு மைலேஜ் குறையும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஏசியை பயன்படுத்தும்போது காரின் மைலேஜ் எவ்வளவு குறையும்?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 29 Jun 2025 21:50 PM

கோடைக்காலத்தில் (Summer) ஏசியை பயன்படுத்துவதை தவிர்க்க முடியாது. குறிப்பாக நீண்ட தூர பயணங்களின் போது கார்களில் ஏசி இல்லாமல் பயணிக்க முடியாது. கார்களில் ஏசியை (AC) பயன்படுத்தும்போது, அதன் மைலேஜ் (Mileage) குறையும் என்பது நம் அனைவருக்கும் தெரியும், ஆனால் எவ்வளவு குறையும் என்பது நம்மில் பெரும்பாலானோருக்கு தெரியாது. நீங்கள் காரின் ஏசியை ஆன் செய்யும்போது, ​​ஏசி இயங்க எஞ்சினிலிருந்து பவர் தேவைப்படுகிறது. மேலும் இந்த பவரை பூர்த்தி செய்ய, காரின் என்ஜின் அதிக எரிபொருளை பயன்படுத்தும். இதனால் எரிபொருள் நுகர்வு அதிகரிப்பதுடன் மைலேஜ் குறைகிறது. மைலேஜ் எவ்வளவு குறையும் என்பதை தெரிந்துகொண்டால், எதிர்காலத்தில் காரில் பயணிக்கும்போது அதற்கு ஏற்ப திட்டமிட முடியும். இந்த  கட்டுரையில் ஏசி பயன்படுத்துவதால் எவ்வளவு மைலேஜ் குறையும் என்பதை விவரமாக பார்க்கலாம்.

ஏசியை பயன்படுத்தும்போது காரின் மைலேஜ் எவ்வளவு குறையும்?

காரின் ஏசி தொடர்ந்து அதிகபட்ச அளவில் பயன்படுத்தினால், சராசரி மைலேஜ் 30 சதவீதம் வரை குறையக்கூடும். உதாரணமாக கோ டிஜிட் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, உங்கள் காரில் எரிபொருளை டேங்க் மூழுவதும் நிரப்பியிருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அந்த எரிபொருளை முழுமையாக பயன்படுத்தினால் சராசரியா 600 முதல் 625 கிமீ வரை பயணிக்க முடியும். அதே நேரம் கோடையில், நீங்கள் ஏசியை பயன்படுத்தும்போது, கார் முழு டேங்கில் 500 கிமீ வரை மட்டுமே பயணிக்க முடியும்.

மேலும் காரைப் பொறுத்து இந்தக் கணக்கீடு மாறுபடலாம் என்பதை நினைவில் கொள்ளவும். இதன் பொருள் ஏசியை பயன்படுத்துவதன் மூலம் 100 முதல் 125 கிலோமீட்டர் வரை குறைவான மைலேஜ் கிடைக்கும். காரின் ஏசியை பயன்படுத்துவதன் காரணமாக ஒவ்வொரு 10 கி.மீ.க்கும்,  200 மில்லி முதல் 1 லிட்டர் பெட்ரோல் வீணாகிறது என்றும் கோ டிஜிட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏசி மட்டுமல்ல, காரை சரியான முறையில் இயக்காமல் இருப்பது மற்றும் காரின் என்ஜின் குறைபாடு போன்ற பல காரணங்களால் காரின் மைலேஜ் குறைகிறது.

ஏசியை பயன்படுத்துவதற்கு முன் செய்ய வேண்டியவை

கார் நீண்ட நேரம் வெயிலில் நிறுத்தப்பட்டிருந்தால், சூடான காற்றை வெளியேற்ற முதலில் ஜன்னல்களை சிறிது நேரம் திறந்து வைக்கவும். பின்னர் ஏசி பயன்படுத்துவதால், அதற்கு அதிக பவர் தேவைப்படாது. மைலேஜ் குறைவுதும் கட்டுப்படுத்தப்படும். காரில் உள்ள ஏசியை அவ்வப்போது சர்வீஸ் செய்ய வேண்டும். மேலும் இன்ஜின் உள்ளிட்ட பாகங்கள் சரிாக வேலை செய்கிறதா என ஒரு முறைக்கு இரு முறை பரிசோதிப்பது நல்லது. இதனால் அதிகமாக மைலேஜ் குறையாமல் தவிர்க்க முடியும், மேலும் அடிக்கடி எரிபொருள் நிரப்ப வேண்டிய தேவையும் குறையும்.