AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கார் வாங்கப்போறீங்களா? பட்ஜெட் விலையில் 5 சிறந்த ஆட்டோமேட்டிக் கார்கள் இதோ

வீடு கட்ட வேண்டும் மற்றும் கார் வாங்க வேண்டும் என்பது நடுத்தர வர்க்கத்தினர் பலருக்கும் கனவாக இருந்து வருகிறது. நகரத்தில் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் நீண்ட டிராஃபிக் நெரிசல்கள் காரணமாக, ஆட்டோமேட்டிக் கார்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்த கட்டுரையில் பட்ஜெட் விலையில் 5 சிறந்த ஆட்டோமேட்டிக் கார்கள் குறித்து பார்க்கலாம்.

கார் வாங்கப்போறீங்களா? பட்ஜெட் விலையில் 5 சிறந்த ஆட்டோமேட்டிக் கார்கள் இதோ
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 29 Jun 2025 21:50 PM IST

கார் (Car) என்பது பெரும்பாலானோரின் கனவு.  வீடு கட்டுவதும், கார் வாங்குவதும் தான் பலரது லட்சியமாக இருந்துவருகிறது.  கார் வாங்கும்போது அதனை சரியான வற்றை தேர்ந்தெடுத்து வாங்குவது அவசியம். நகரத்தில் அதிகரித்து வரும் கூட்டம் மற்றும் நீண்ட போக்குவரத்து நெரிசல்கள் காரணமாக, ஆட்டோமேட்டிக் (Automatic) கார்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. அடிக்கடி கியர் மற்றும் கிளட்சை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்பதால், நெரிசலான போக்குவரத்து நிறைந்த சாலைகளில் ஆட்டோமேட்டிக் கார்களை ஓட்டுவது மிகவும் எளிதானது. முன்னதாக, விலையுயர்ந்த கார்களில் மட்டுமே ஆட்டோமேட்டிக் அமைப்பு காணப்பட்டது, ஆனால் இப்போது பட்ஜெட் கார்களிலும் ஆட்டோமேட்டிக் ஆப்சன் கிடைக்கிறது. இந்த கட்டுரையில் உங்களுக்கு பட்ஜெட் விலையில் 5 சிறந்த ஆட்டோமேட்டிக் கார்கள் குறித்து பார்க்கலாம்.

ஹூண்டாய் கிராண்ட் i10 NIOS

ஹூண்டாயின் கிராண்ட் i10 NIOS ஒரு சிறந்த மற்றும் மென்மையான ஆட்டோமேட்டிக் கார். இதன் ஆட்டோமேட்டிக் வகைகள் மேக்னாவிலிருந்து டாப் மாடல் ஆஸ்டா வரை உள்ளன. இது 1.2 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினைக் கொண்டுள்ளது, இது 82 bhp பவரையும் 114 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இந்த கார் டிரைவிங் செய்வதற்கு மிகவும் மென்மையான மற்றும் வசதியான காராக பார்க்கப்படுகிறது.

மாருதி சுசுகி ஸ்விஃப்ட்

ஸ்விஃப்ட் கார் புதிய 1.2 லிட்டர், 3-சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினுடன் (K12E) வருகிறது, இது 81 bhp மற்றும் 112 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. இது VXi, VXi(O), ZXi மற்றும் ZXi+ வகைகளில் 5 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் கிடைக்கிறது. பழைய மாடலை விட இது சற்று குறைவான பவரைக் கொண்டிருந்தாலும், இந்த எஞ்சின் இலகுவானது மற்றும் நகர சாலைகளுக்கு ஏற்றது. இதில் கொடுக்கப்பட்டுள்ள ஆட்டோமேட்டிக் கியர் நின்று நின்று செல்லும் டிராஃபிக்கில் காரை ஓட்டுவதை எளிதாக்குகிறது.

ரெனால்ட் க்விட்

இந்தியாவில் கிடைக்கும் விலை குறைவான ஆட்டோமேட்டிக் ஹேட்ச்பேக் கார்களில் ஒன்று க்விட். இது 1.0 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினைக் கொண்டுள்ளது, இது 68 bhp மற்றும் 92.5 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. இது டிராஃபிக்கிற்கு ஏற்ப செயல்படும் திறன் கொண்டுள்ளது. குறிப்பாக டிராஃபிக்கில் மெதுவாக நகர உதவுகிறது. இதன் விலை ரூ.6.41 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. மைலேஜ் லிட்டருக்கு 22.3 கிமீ வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இது 8-இன்ச் தொடுதிரை, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஸ்டீயரிங் கட்டுப்பாடு மற்றும் வேகமான யுஎஸ்பி சார்ஜர் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.

மாருதி எஸ்-பிரஸ்ஸோ

மாருதியின் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் ஆட்டோமேட்டிக் கார்களில் எஸ்-பிரஸ்ஸோவும் ஒன்று. இந்த காரின் விலையானது ரூ. 5.71 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இருந்து தொடங்குன்றன. இது ஆல்டோ K10 போன்ற 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினைக் கொண்டுள்ளது. இந்த கார் லிட்டருக்கு 25.30 கிமீ மைலேஜ் தருவதாகக் கூறப்படுகிறது. பாதுகாப்பிற்காக, இது இரட்டை ஏர்பேக்குகள், ABS+EBD, ஹில் ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP) போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. உயரமானவர்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டாடா டியாகோ

டாடா டியாகோவின் XTA மற்றும் XZA வகைகளில் 5-வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கிடைக்கிறது. இந்த இரண்டு மாடல்களும் 1.2 லிட்டர், 3-சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, இது 85 bhp மற்றும் 113 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. டியாகோவின் விலை ரூ. 6.89 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.

Follow Us