Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Video Game : உங்கள் குழந்தைகள் வீடியோ கேம் அதிகம் விளையாடுகின்றனரா?.. அப்போ இவற்றை ஃபாலோ பண்ணுங்க!

Tips to Protect Kids From Video Games | தற்போதைய காலக்கட்டத்தில் சிறுவர்கள் ஓடி, ஆடி விளையாடுவதை பார்ப்பதே அரிதாக உள்ளது. பிள்ளைகள் தொலைக்காட்சி பார்ப்பது, வீடியோ கேம் விளையாடுவது, யூடியூப் வீடியோக்களை பார்ப்பது என தங்களது விடுமுறை நாட்களை கழிக்கின்றனர். ஆனால், இத்தகைய செயல்பாடுகள் அவர்களது மூளையை மிக கடுமையாக பாதிக்கும்.

Video Game : உங்கள் குழந்தைகள் வீடியோ கேம் அதிகம் விளையாடுகின்றனரா?.. அப்போ இவற்றை ஃபாலோ பண்ணுங்க!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 04 Jun 2025 11:15 AM

மாறிவரும் கால சூழலுக்கு ஏற்ப மனிதர்களின் வாழ்க்கையும் மாறிக்கொண்டே செல்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், குழந்தை வளர்ப்பு முறை மிகவும் மாற்றம் அடைந்துள்ளது. முன்பெல்லாம் குழந்தைகள் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் அல்லது விடுமுறையின் போதும் தங்களது நண்பர்களுடன் ஓடி ஆடி விளையாடுவர். ஆனால், தற்போது நிலமை அப்படியே தலைகீழாக உள்ளது. தற்போதைய சூழலில் குழந்தைகள் மொபைல் போன் மற்றும் கணினி மூலம் வீடியோ கேம்களை விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதன் காரணமாக அவர்களது மூளை வளர்ச்சி பாதிகப்படுவது மட்டுமன்றி, உடல்திறனும் குறைகிறது. இதுதவிர வேறு சில ஆபத்துக்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், குழந்தைகள் வீடியோ கேம் விளையாடும்போது பெற்றோர்கள் இந்த சில விஷயங்களை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்வது அவர்களை பாதுகாக்க உதவும்.

வீடியோ கேம் விளையாடும் குழந்தைகளின் பெற்றோர் செய்ய வேண்டியவை

நேர மேலாண்மை

உங்கள் குழந்தை நீண்ட வீடியோ கேம் விளையாடும் பழக்கம் கொண்டிருந்தால் அது அவரின் உடல் திறனை மிக கடுமையாக பாதிக்கும். எனவே உங்கள் குழந்தை எவ்வளவு நேரம் வீடியோ கேம் விளையாட வேண்டும் என்பதை செட் செய்யுங்கள்.

கேம் தேர்வு

உங்கள் குழந்தைகள் எந்த வகையான கேம்களை விளையாடுகின்றனர். அது அவர்களுக்கு எவ்வளவு பாதுகாப்பானது என்பதை ஆய்வு செய்யுங்கள்.

கேம் விளையாடும் முறை

உங்கள் குழந்தைகள் விளையாடும் கேம்களில் ஏதேனும் ஆபாச பேச்சு, வார்த்தைகள், காட்சிகள் இடம் பெற்றிருந்தால் உடனடியாக உங்கள் குழந்தை அந்த கேம் விளையாடுவதை நிறுத்துங்கள்.

கேம் தரம்

உங்கள் குழந்தைகள் விளையாடும் கேம்கள் தரமானவையா, அதில் என்ன சிக்கல்கள் உள்ளன என்பதை ஆராயுங்கள்.

சோதனை முயற்சி

உங்கள் குழந்தைக்கு வீடியோ கேம் விளையாட கொடுப்பதற்கு முன்னதாக அது எவ்வாறு செயல்படுகிறது, பாதுகாப்பானதா என்பதை நீங்கள் ஒருமுறை சோதனை செய்யுங்கள்.

குழந்தைகளை கண்காணியுங்கள்

உங்கள் குழந்தைகள் வீடியோ கேம் விளையாடும்போது சோகமாக உள்ளார்களா, குழப்பத்தில் உள்ளார்களா என்பதை அவ்வப்போது கண்காணியுங்கள்.

குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுங்கள்

வீடியோ கேம் விளையாடும்போது உங்களது குழந்தை பாதுகாப்பாக உணர்கிறதா என்பதை உறுதி செய்ய அவ்வப்போது நீங்களும் உங்கள் குழந்தைகளுடன் இணைந்து வீடியோ கேம் விளையாடுங்கள்.

மேற்குறிப்பிட்ட இந்த சில குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் வீடியோ கேம் விளையாடுவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் மூளை சார்ந்த மற்றும் உடல் சார்ந்த சிக்கல்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க முயற்சி செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கொலஸ்ட்ரால் கூடுதா? உடம்பில் காட்டும் சில அறிகுறிகள் இவைதான்!
கொலஸ்ட்ரால் கூடுதா? உடம்பில் காட்டும் சில அறிகுறிகள் இவைதான்!...
நாளை நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..
நாளை நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.....
ஹெலிகாப்டரில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த ஜீப்ரா - வைரல் வீடியோ!
ஹெலிகாப்டரில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த ஜீப்ரா - வைரல் வீடியோ!...
விமான விபத்தின் போது விடுதியில் இருந்து தப்பிய சென்னை மருத்துவர்
விமான விபத்தின் போது விடுதியில் இருந்து தப்பிய சென்னை மருத்துவர்...
சண்முகப் பாண்டியனின் படைத்தலைவன் படம் எப்படி இருக்கு?
சண்முகப் பாண்டியனின் படைத்தலைவன் படம் எப்படி இருக்கு?...
வார்த்தைகள் போதவில்லை… மனமெல்லாம் மகிழ்ச்சியும் நன்றியும்...
வார்த்தைகள் போதவில்லை… மனமெல்லாம் மகிழ்ச்சியும் நன்றியும்......
'நீங்கள் தான் போலி விவசாயி....' எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
'நீங்கள் தான் போலி விவசாயி....' எடப்பாடி பழனிசாமி விமர்சனம்...
தமிழக வரலாற்றை அழிக்க துடிக்கும் பாஜக.. முதல்வர் ஸ்டாலின் காட்டம்
தமிழக வரலாற்றை அழிக்க துடிக்கும் பாஜக.. முதல்வர் ஸ்டாலின் காட்டம்...
Air India விபத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள் - கடைசி வீடியோ வைரல்
Air India விபத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள் - கடைசி வீடியோ வைரல்...
முகம் பளபளனு மாறனுமா? வீட்டில் இருக்கும் சூப்பர் பொருட்கள்!
முகம் பளபளனு மாறனுமா? வீட்டில் இருக்கும் சூப்பர் பொருட்கள்!...
தக் லைஃப்... கர்நாடக அரசிற்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்
தக் லைஃப்... கர்நாடக அரசிற்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்...