Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

WhatsApp : தெளிவான வீடியோ கால் பேச உதவும் வாட்ஸ்அப்பின் Low Light Mode.. பயன்படுத்துவது எப்படி?

WhatsApp Low Light Mode | உலகம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் முதன்மையான செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. வாட்ஸ்அப்பில் உள்ள பல அம்சங்கள் மிகவும் பயனுள்ளவையாக உள்ளன. அந்த வகையில், தெளிவான வீடியோ கால் பேச பயன்படுத்தப்படும் லோ லைட் மோட் அம்சம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

WhatsApp : தெளிவான வீடியோ கால் பேச உதவும் வாட்ஸ்அப்பின் Low Light Mode.. பயன்படுத்துவது எப்படி?
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 06 Jun 2025 21:07 PM

மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) செயலியை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் பயன்படுத்துகின்றனர். காரணம், வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. அவை தகவல் தொலைத்தொடர்பை மிக எளிதானதாக மாற்றி விட்டன. அந்த வகையில், வாட்ஸ்அப் செயலில் இருக்கும் ஒரு அட்டகாசமான அம்சம் தான் லோ லைட் மோட் (Low Light Mode). இந்த அம்சத்தை பயன்படுத்தி மிக தெளிவான வீடியோ கால்களை பேச முடியும். அதனை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பல்வேறு அசத்தல் அம்சங்களை வழங்கும் வாட்ஸ்அப் செயலி

மெட்டா நிறுவனத்தில் வாட்ஸ்அப் செயலி தகவல் தொலைத்தொடர்பை மிக எளிதாக மாற்றியுள்ளது. அதாவது, வாட்ஸ்அப் செயலி மூலம் பல வகையான தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ள முடியும். அதாவது வாட்ஸ்அப் ஆடியோ கால்ம் வீடியோ கால், குறுஞ்செய்தி பரிமாற்றம் என பல அம்சங்களை வழங்குகிறது. வாட்ஸ்அப்பின் ஆடியோ கால் அம்சம் மூலம் குரல் உரையாடல்களை மேற்கொள்ள முடியும். இதுவே வீடியோ கால் அம்சத்தை பயன்படுத்தி முகம் பார்த்து உரையாட முடியும்.

வாட்ஸ்அப்பின் இந்த வீடியோ கால் அம்சம் பலருக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. காரணம், முன்பெல்லாம் உரவுகள் நம்மை விட தொலைவில் இருந்தால் அவர்களை நேரில் சந்திக்கும்போது மட்டும்தான் பார்க்க முடியும். ஆனால், வீடியோ கால் அம்சம் மூலம் ஒருவர் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அவருடன் முகம் பார்த்து உரையாட வாட்ஸ்அப் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அவ்வாறு வீடியோ கால் பேசும்போது பலரும் சந்திக்கும் ஒரு சிக்கல் உள்ளது. அதுதான் தரமற்ற வீடியோ கால். ஆனால், அதற்கு தீர்வு காணும் வகையில் வாட்ஸ்அப்  லோ லைட் மோட் அம்சத்தை பயன்பாட்டில் வைத்துள்ளது. அதனை பயன்படுத்தி தரமான வீடியோ கால்களை பேச முடியும்.

வாட்ஸ்அப் வீடியோ காலில் லோ லைட் மோடை பயன்படுத்துவது எப்படி?

  1. அதற்கு முதலில் வாட்ஸ்அப் செயலிக்கு செல்ல வேண்டும்.
  2. பிறகு வீடியோ கால் செய்ய வேண்டும்.
  3. வீடியோ கால் பக்கத்தில் இருக்கும் Bulb ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.
  4. அதில் இருக்கும் Low Light Mode என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

மேற்குறிப்பிட்ட இந்த நடைமுறைகளை பின்பற்றி மிக எளிதாக லோ லைட் மோட் அம்சத்தை பயன்படுத்தி மிக தெளிவான வீடியோ கால்களை பேச முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கொலஸ்ட்ரால் கூடுதா? உடம்பில் காட்டும் சில அறிகுறிகள் இவைதான்!
கொலஸ்ட்ரால் கூடுதா? உடம்பில் காட்டும் சில அறிகுறிகள் இவைதான்!...
நாளை நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..
நாளை நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.....
ஹெலிகாப்டரில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த ஜீப்ரா - வைரல் வீடியோ!
ஹெலிகாப்டரில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த ஜீப்ரா - வைரல் வீடியோ!...
விமான விபத்தின் போது விடுதியில் இருந்து தப்பிய சென்னை மருத்துவர்
விமான விபத்தின் போது விடுதியில் இருந்து தப்பிய சென்னை மருத்துவர்...
சண்முகப் பாண்டியனின் படைத்தலைவன் படம் எப்படி இருக்கு?
சண்முகப் பாண்டியனின் படைத்தலைவன் படம் எப்படி இருக்கு?...
வார்த்தைகள் போதவில்லை… மனமெல்லாம் மகிழ்ச்சியும் நன்றியும்...
வார்த்தைகள் போதவில்லை… மனமெல்லாம் மகிழ்ச்சியும் நன்றியும்......
'நீங்கள் தான் போலி விவசாயி....' எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
'நீங்கள் தான் போலி விவசாயி....' எடப்பாடி பழனிசாமி விமர்சனம்...
தமிழக வரலாற்றை அழிக்க துடிக்கும் பாஜக.. முதல்வர் ஸ்டாலின் காட்டம்
தமிழக வரலாற்றை அழிக்க துடிக்கும் பாஜக.. முதல்வர் ஸ்டாலின் காட்டம்...
Air India விபத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள் - கடைசி வீடியோ வைரல்
Air India விபத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள் - கடைசி வீடியோ வைரல்...
முகம் பளபளனு மாறனுமா? வீட்டில் இருக்கும் சூப்பர் பொருட்கள்!
முகம் பளபளனு மாறனுமா? வீட்டில் இருக்கும் சூப்பர் பொருட்கள்!...
தக் லைஃப்... கர்நாடக அரசிற்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்
தக் லைஃப்... கர்நாடக அரசிற்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்...