AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்த 5 காரணங்களால் ஃபிரிட்ஜ் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் – தவிர்ப்பது எப்படி?

Home Appliance Fire Safety : ஏசி, ஃபிரிட்ஜ் போன்ற மின் சாதனங்கள் வெடித்து தீ விபத்து ஏற்படும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்திருக்கின்றன. குறிப்பாக சில இடங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்த நிலையில் இந்த கட்டுரையில் ஃபிரிட்ஜில் தீ விபத்து ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் தவிர்ப்பது எப்படி என பார்க்கலாம்.

இந்த 5 காரணங்களால் ஃபிரிட்ஜ் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் – தவிர்ப்பது எப்படி?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 16 Jun 2025 20:39 PM IST

இந்த வருடம் கோடையில் கடுமையான வெப்பம் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் தீ விபத்துகள் அதிகரித்துள்ளன. தற்போது கிட்டத்தட்ட கோடை காலம் முடிவுக்கு வரத் தொடங்கியுள்ளது. ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்யத் தொடங்கியிருக்கிறது.  ஆனால் நாட்டின் பிற பகுதிகளில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கிறது.  இந்த நிலையில் சில இடங்களில் ஏசி (AC), ஃபிரிட்ஜ் (Fridge) போன்ற மின் சாதனங்கள் தீப்பிடிக்கும் செய்திகளும் வெளியாகி வருகின்றன. குறிப்பாக நகரப் பகுதிகளில் ஏர் கண்டிஷனர் வெடித்து தீ பிடித்த சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன. இதனால் சில இடங்களில் உயிர் சேதங்களும் ஏற்பட்டிருக்கின்றன.  ஆனால் இந்த பிரச்னை ஏசிக்கு மட்டுமல்ல, வீட்டில் இருக்கும் ஃபிரிட்ஜ்களுக்கும் ஏற்படக்கூடும். இந்த நிலையில் இந்தியா டிவி இணையதளத்தில் வெளியான கட்டுரையின் அடிப்படையில் பிரிட்ஜ் தீப்பிடிப்பதற்கான காரணம் மற்றும் அதனை தவிர்ப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஃபிரிட்ஜில் தீ விபத்து ஏற்படுவதற்கான காரணங்கள்

1.அதிக வெப்பம்

ஏசி மற்றும், ஃபிரிட்ஜ்கள் போன்ற மின்சாதனங்கள் எல்லாவற்றிலும் தீ விபத்து ஏற்படுவதற்கான முக்கிய காரணம் பெரும்பாலும் வெப்பமாக தான் இருக்கும்.  குறிப்பாக, ஃபிரிட்ஜ் ஒரு குறுகலான இடத்தில் வைக்கப்பட்டிருந்தால், அதன் வெப்பம் வெளியே செல்வதற்கு வழியில்லாமல் ஒரு கட்டத்தில் வெடிக்கலாம்.

2. மின்சார பிரச்னை

வெயிலில் மின்சாரத்தின் தேவை அதிகமாக இருப்பதால், சில இடங்களில் லோ வோல்டேஜ் பிரச்னை இருக்கலாம் இதனால், பல மின் சாதனங்கள் பாதிக்கப்பட்டு வெடிக்கும் நிலை ஏற்படலாம்.

3. கம்பரசர் பராமரிப்பு

ஃபிரிட்ஜ்களில் கம்பரசர் என்பது முக்கிய பாகம். இது சில நேரங்களில் சரியாக வேலை செய்யவில்லை என்றால், அதில் வெப்பம் ஏற்பட்டு தீவிபத்தை ஏற்படுத்தலாம்.

4. டிஃபிராஸ்ட் செய்வது நல்லது

பல ஃபிரிட்ஜ்களில்  டிஃபிராஸ்ட் வசதி இருந்தாலும், அதை செய்ய விடுகிறோம். இதனை அடிக்கடி மேற்கொள்வது ஃபிரிட்ஜிற்கு பிரச்னை ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளும்.

5. காற்றோட்டம்

ஃபிரிட்ஜ் நிற்கும் இடத்தில் காற்றோட்டம் இல்லையெனில், வெப்பம் வெளியே உலர முடியாமல் வெப்பமாகி தீவிபத்துக்கு வழிவகுக்கும்.

தவிர்ப்பது எப்படி ?

  • ஃபிரிட்ஜ் சுற்றிலும் நல்ல காற்றோட்டம் இருக்கும்படி வைக்க வேண்டும். வெப்பம் வெளியே செல்வதற்கான இடம் இருக்க வேண்டும்.

  • ஒரு நல்ல குவாலிட்டி வோல்டேஜ் ஸ்டெபிளைசரை ஃபிரிட்ஜுடன் பயன்படுத்த வேண்டும், இது மின் அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, சாதனங்களை பாதுகாக்க உதவும்.

  • ஃபிரிட்ஜை குறைந்தது 6 மாதத்திற்கு முறை சர்வீஸ் செய்ய வேண்டும். குறிப்பாக அதில் உள்ள ஃபில்டர்கள், கம்ப்ரெசரை சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும்.

  • அவ்வப்போது டிஃபிராஸ்ட் செய்து ஃபிரிட்ஜ் உள்ளே உருவாகும் பனி படிவதைக் குறைக்க வேண்டும். இது ஃபிரிட்ஜின் ஆயுளை நீட்டிக்கும்.

  • பிரிட்ஜையை வீட்டில் காற்று செல்லும் இடத்தில் வைக்க வேண்டும். தேவையான பொழுது ஃபேன் வைத்து அதன் வெப்பத்தை குறைக்கலாம். கம்ப்ரெசர் பகுதி எப்போதும் வெப்பம் வெளியேறும்படி இருக்க வேண்டும்.

முக்கிய கவனிக்க வேண்டியவை:

ஃபிரிட்ஜ் உள்ளே இருக்கும் வாயுக்கள் சிலவற்றுக்கு தீ பிடிக்கும் இயல்பு இருக்கும். அதனால் மிகவும் அவதானத்துடன் பயன்படுத்த வேண்டும். பழைய ஃபிரிட்ஜ்கள் இருப்பின் அவற்றை சர்வீஸ் செய்து பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த கோடையில் உங்களின் வீடுகளில் வெப்பம் காரணமாக ஏற்படும் மின்சாதன தீ விபத்துகளைத் தவிர்க்க, மேலே கூறிய பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்கவும்.

Follow Us