Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வீட்டில் ஏசி யூஸ் பண்ணுறீங்களா? பறிபோன 3 உயிர்கள்.. அதிர்ச்சி சம்பவம்!

Haryana AC Blast : ஹரியானா மாநிலத்தில் ஏசி வெடித்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஏசி வெடித்தில் அதில் வெளியேறிய புகையால், தூங்கி கொண்டிருந்த 3 பேருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் ஏசி யூஸ் பண்ணுறீங்களா? பறிபோன 3 உயிர்கள்.. அதிர்ச்சி சம்பவம்!
ஏசி வெடித்து விபத்து
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 08 Sep 2025 19:19 PM IST

ஹரியானா, செப்டம்பர் 08 : ஹரியானா மாநிலத்தில் ஏசி வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். மேலும், அவர்கள் வளர்த்து வந்து செல்ப்பிராணியும் உயிரிழந்துள்ளது.  ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள கிரீன் ஃபீல்ட் காலனியில் 2025 செப்டம்பர் 7ஆம் தேதியான நள்ளிரவு 1.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் அக்கம் பக்கத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, ஏசி வெடித்து உயிரிழந்தவர்கள் சச்சின் கபூர், அவரது மனைவி ரிங்கு மற்றும் அவர்களது மகள் சுஜன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது, வீட்டில் இருந்து ஏசி திடீரென வெடித்தது. வீட்டை அடர்ந்த புகை சூழ்ந்ததால் மூச்சுத் திணறி இறந்தனர். இதில், சச்சின் கபூர் மகன் ஆர்யன் மாடியில் இருந்து குதித்து தப்பினார். இவர் ஐசியுவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதல் மாடியில் வசித்து வந்த ராகேஷ் மாலிக்கின் வீட்டில் இருந்த ஏசி வெடித்துள்ளது. இதில் தீப்பற்றி ஏரிந்துள்ளது. இதில் வெளியேறிய புகையால், இரண்டாவது மாடியில் சச்சின் கபூரும் அவரது குடும்பத்தினரும் உயிரிழந்தனர்.

Also Read : இன்ஸ்டாவில் பிளாக் செய்த காதலன்.. பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு.. சென்னையில் சம்பவம்

ஏசி வெடித்து 3 பேர் உயிரிழப்பு


மேலும், அவர்கள் வளர்த்து வந்த நாயும் உயிரிழந்துள்ளது. இந்த விபத்து குறித்து அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்தின்போது, இரண்டாவது தளத்தில் யாரும் இல்லை என அதிகாரிகள் கூறினர். ஏசி வெடிப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஏசியில் ஏற்பட்ட பழுது காரணமாக வெடித்திருக்கலாம் என போலீசார் சந்தேகின்றனர்.

Also Read : மழை வெள்ளத்தில் மூழ்கிய 300 கார்கள்.. மாருதி சுசுகி நிறுவனத்திற்கு பேரிழப்பு!

ஏசி வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஏசியை 6 மாதத்திற்கு ஒருமுறை சர்வீஸ் செய்ய வேண்டும். மேலும், ஏசியை பொருத்தவரை கம்ப்ரசர் என்பது முக்கியம். இதனை பழுதாகாமல் பார்த்துக் கொள்வது அவசியம். எனவே, ஏசி உபயோகிக் போது கவனமாக இருக்க வேண்டும். சிறிய பிரச்னைகள் ஏற்பட்டால், உடனே அதை சரி செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.