Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஏசியில் செய்யும் இந்த சில தவறு அதன் ஆயுட்காலத்தை பாதிக்கும்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

Air Conditioner Damage Issue | ஏராளமான பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் ஏசியை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால், பெரும்பாலான பொதுமக்கள் ஏசியை ஆஃப் செய்வதில் சில தவறுகளை செய்கின்றனர். அதன் மூலம் ஏசியின் ஆயுட்காலம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், ஏசியின் ஆயுளை பாதுகாப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

ஏசியில் செய்யும் இந்த சில தவறு அதன் ஆயுட்காலத்தை பாதிக்கும்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 26 Jul 2025 20:34 PM

புவி வெப்பமயமாதல் காரணமாக பூமியில் வெப்பம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதன் காரணமாக ஏராளமான பொதுமக்கள் தங்களது வீடுகளில் ஏசி (AC – Air Conditioner) பயன்படுத்துகின்றனர். தற்போதைய காலக்கட்டத்தில் ஏசி இல்லாத வீடுகளையே பார்க்கவே முடியாது. அந்த அளவுக்கு ஏசி பயன்பாடு பொதுமக்களின் வாழ்வில் அதிகரித்துள்ளது. இவ்வாறு பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் ஏசியை அதிகம் பயன்படுத்தும் நிலையில், அவர்கள் செய்யும் ஒரு சில தவறுகள் காரணமாக ஏசியின் செயல் திறன், பாகங்கள் பாதிக்கப்பட்டு ஏசியின் ஆயுள் குறைய வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், ஏசியை தவறான முறையில் ஆஃப் செய்வதன் மூலம்  ஏற்படும் சேதங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஏசியை தவறான முறையில் ஆஃப் செய்வதன் மூலம் ஏற்படும் சிக்கல்கள்

ஏசியை ஏசி ரிமோட் மற்றும் பவர் சுவிட் ஆகியவற்றை பயன்படுத்தி ஆஃப் செய்யலாம். ஆனால், ஏசி ரிமோட்டில் ஆஃப் செய்யாமல் நேரடியாக பவர் சுவிட்சை ஆஃப் செய்வது ஏசியின் செயல்திறனை மிக கடுமையாக பாதிக்கும். இதன் மூலம் ஏசியில் பல பிரச்னைகள் ஏற்பட்டு அடிக்கடி செலவு வைப்பதோடு, ஏசியின் ஆயுள் காலமும் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.

கம்ப்ரசர் செயலிழக்கலாம்

ஏசியை பொருத்தவரை கம்ப்ரசர் என்பது அதன் இதயமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஏசியை ஆஃப் செய்யும்போது ரிமோட்டை பயன்படுத்தாமல் சுவிட்சை பயன்படுத்தி திடீரென ஆஃப் செய்யும் பட்சத்தில், திடீரென மின்சாரம் துண்டிக்கப்படும்போது அது கணினியில் திடீர் மின்தடையை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக கம்ப்ரசரில் கடுமையான அழுத்தம் ஏற்பட்டு செயலிழப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க : மேனுவல் ஏசியா? ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் ஏசியா? – காருக்கு எது சிறந்தது?

குளிரூட்டும் திறன் குறையலாம்

ஏசியை சுவிட் பயப்படுத்தி ஆஃப் செய்யும்போது அதன் குளிரூட்டும் திறன் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து இதே முறையை பின்பற்றி ஏசியை சுவிட்ச் ஆஃப் செய்யும் பட்சத்தில் கம்ப்ரசர் பலவீனமடைந்து இறுதியில் முழு குளிரூட்டும் அமைப்பும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

மோட்டார் சேதம் ஏற்படலாம்

ஏசியின் மோட்டார் மற்றும் உள் விசிறி சரியான ஷட் டவுன் நடைமுறைகளுடன் செயல்பட வடிவைக்கப்பட்டு இருக்கும். சுவிட்சை பயன்படுத்தி திடீரென மின்சாரம் நிறுத்துவது அவற்றின் செயல்பாட்டை பாதிக்கும். இதனால் அதன் ஆயுட்காளம் குறையவும் வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க : மழை காலங்களில் ஏசி பயன்படுத்தலாமா? கவனிக்க வேண்டிய அம்சங்கள்!

எனவே ஏசியின் ஆயுட்காலம் நீடித்து உழைக்க வேண்டும் என்றால் ஏசி சுவிட்சை முறையாக ஆஃப் செய்ய வேண்டியது கட்டாயமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.