மழை காலங்களில் ஏசி பயன்படுத்தலாமா? கவனிக்க வேண்டிய அம்சங்கள்!
AC Use During Rain : மழைக்காலத்தில் ஏசி பயன்படுத்துவது பாதுகாப்பானதா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். அப்படி பயன்படுத்தும்போது சில முக்கியமான பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம். இந்த கட்டுரையில் மழை காலங்களில் ஏசி பயன்படுத்தும்போது கடைபிடிக்க வேண்டிய வழிகள் குறித்து பார்க்கலாம்.

பொதுவாக வெயில்காலங்களில் (Summer) வெப்பத்தை சமாளிக்க முடியாமல் ஏசியை (AC) பயன்படுத்துவது அவசியமாகிறது. காலநிலை மாற்றங்களால் தற்போது ஏசி என்பது அத்தியாவசியமான பொருளாக மாறியிருக்கிறது. ஆனால் சிலர் வெயில் காலங்கள் மட்டும் இல்லாமல் அனைத்து காலங்களிலும் ஏசியை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக மழைக் காலத்தில் (Monsoon) காற்றில் ஈரப்பதம் அதிகம் இருக்கும் என்பதால் இந்த காலக்கட்டத்தில் ஏசியை பயன்படுத்தலாமா? அது பாதுகாப்பானதா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். ஆனால் மழை காலங்களில் ஏசியைப் பயன்படுத்தலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் சில முக்கியமான பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்ற வேண்டும் என அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
மழைகாலங்களில் ஏசியைப் பயன்படுத்துவது பாதுகாப்பானதா?
சமீப காலமாக சிலிண்டர் வகை, ஸ்பிலிட் ஏசி, சென்ட்ரல் ஏசி போன்ற ஏசி வகைகள் தொழில்நுட்பங்களுடன் கிடைக்கின்றன. இவை சாதாரண மழையையும் ஈரப்பதத்தையும் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. வெளியே உள்ள யூனிட் (Condenser Unit) தண்ணீருக்கு எதிராக செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள மின் பொருட்கள் மழைக்கு பாதிக்காத வகையில் பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் தண்ணீர் வடிகால் அமைப்பும் உள்ளது. ஆனால் சில முக்கியமான பாதுகாப்பு அம்சங்களை தெரிந்து கொள்வதன் மூலம் உங்கள் ஏசி மேலும் சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் இயங்கும்.




மழைக்கால ஏசி பயன்பாட்டில் கவனிக்க வேண்டிய அம்சங்கள்
- வெளி யூனிட்டின் சுற்றிலும் நீர் தேங்கியிருந்தால், உடனே ஏசியை அணைக்கவும். ஒருவேளை தண்ணீர் தேங்கினால் ஏசி இயங்கும்போது உள் அமைப்புகளில் நீர் புகுந்து ஷார்ட் சர்கியூட் ஆக வாய்ப்பு உள்ளது. இதனை சரி செய்ய ஆயிரக்கணக்கில் செலவு செய்ய நேரலாம்.
- ஜன்னல்கள் சரியாக அடைக்கப்பட்டுள்ளதா என்று உறுதி செய்யுங்கள். ஏசி இயங்கும் போது வெளியிலிருந்து வரும் காற்றில் ஈரப்பதம் இருந்தால், உள அமைப்புகளில் பூஞ்சை வளர வாய்ப்பு அதிகம். இது ஏசியின் செயல்பாட்டை பாதிக்கும்.
- இடி, மின்னல் நேரங்களில் ஏசியை பயன்படுத்த வேண்டாம். குறிப்பாக மின்னல் தாக்கம் ஏற்படும்போது உள்மின் அழுத்தம் ஏற்பட்டு ஏசியில் பழுது ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை தவிர்க்க சர்வதேச நிபுணர்கள் பாதுகாப்பான பிளக்கை பயன்படுத்த அறிவுறுத்துகிறார்கள்.
- ஃபில்டர்களை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். மழைகாலத்தில் பூஞ்சை, தூசி, ஈரப்பதத்தால் ஏசி ஃபில்டர் எளதில் பாதிக்கப்படலாம். இதனால் ஏசியின் செயல்திறன் குறையும்.
- வயர்கள் மற்றும் யூனிட் சரிபார்க்க வேண்டும். வெளியூனிட்டில் உள்ள மின் இணைப்புகள் மற்றும் வயர்களில் ஏதேனும் சேதம் இருந்தால் மழை நீர் படும்போது பெரிய சிக்கலை ஏற்படுத்தும்.
சிக்கல்களை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
- மழைகாலத்துக்கு முன் ஒரு முறை ஏசியை சர்வீஸ் செய்ய வேண்டும்.
- வோல்டேஜ் ஸ்டெபிலைசரை பயன்படுத்துங்கள். மழை காலத்தில் மின் அழுத்தங்களில் மாற்றங்கள் ஏற்படும்.
- வெளி யூனிட்டுக்கு கவர் போடலாம். ஆனால் அதன் காற்றோட்டம் தடுக்காமல் இருக்க வேண்டும்.
- டிரை மோடை பயன்படுத்துங்கள். இது மழை காலத்துக்கு சிறந்தது.
மழைக்காலத்தில் ஏசியைப் பயன்படுத்துவது தவறு இல்லை. ஆனால் அவற்றை சரியான பராமரிப்பு மற்றும் பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும். மேலே கூறிய வழிமுறைகளை பின்பற்றினால், உங்கள் வீடு எப்போதும் குளிர்ச்சியானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும்.