Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

77 வயதில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மூதாட்டி.. 1,200-க்கு 829 மதிப்பெண்கள் பெற்று அசத்தல்!

Woman Passes Plus 2 Exam After 57 Years | கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் 77 வயது மூதாட்டி ஸ்ரீதேவி. இவர் 57 ஆண்டுகள் கழித்து தனது 77வது வயதில் பிளஸ் 2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.

77 வயதில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மூதாட்டி.. 1,200-க்கு 829 மதிப்பெண்கள் பெற்று அசத்தல்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 12 Sep 2025 07:31 AM IST

பாலக்காடு, செப்டம்பர் 12 : கேரளாவில் (Kerla) 77 வயது மூதாட்டி ஒருவர் பிளஸ் 2 தேர்வில் தேரிச்சி பெற்றுள்ளார். அவருக்கு 19 வயதிலே திருமணம் நடைபெற்ற நிலையில், பிளஸ் 2 படிக்க முடியாமல் போயுள்ளது. இந்த நிலையில், குடும்ப உறுப்பினர்களின் உதவி மற்றும் ஆதரவோடு தற்போது தேர்வை எழுதி சிறந்த மதிப்பெண்களுடம் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த நிலையில், அந்த மூதாட்டி தனது 77 வயதிலும் மிகவும் கடினமாக படித்து தேர்வில் தேர்ச்சி பெற்றது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

57 ஆண்டுகள் கழித்து பிளஸ் 2 தேர்வு எழுதிய மூதாட்டி

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் 77 வயதான ஸ்ரீதேவி என்ற மூதாட்டி. இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில், பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் 1968 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பு படித்துள்ளார். 10 ஆம் வகுப்பில் தேர்ச்சியும் பெற்றுள்ளார். இந்த நிலையில், அவருக்கு 19 வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்ட நிலையில், அவரால் தொடர்ந்து படிக்க முடியாமல் போயுள்ளது. இந்த நிலையில், தீயணைப்பு அதிகாரி ஒருவர் அளித்த உந்துதலின் அடிப்படையில் அவர் பிளஸ் 2 தேர்வு எழுத முடிவு செய்துள்ளார். அது குறித்து தனது பிள்ளைகளிடமும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : புலி கூண்டில் வனத்துறை அதிகாரிகள்.. பொதுமக்கள் கொடுத்த தண்டனை… காரணம் இதுவா?

1,200-க்கு 829 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி

பிள்ளைகளும் ஸ்ரீதேவிக்கு ஆதரவாக இருந்த நிலையில், சாக் ஷரர்கா மிஷன் என்ற அமைப்பு மூலம் அவருக்கு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி, பிளஸ் 1 தேர்வு எழுதிய அவர், பிளஸ் 2 தேர்வில் தனி தேர்வராக பங்கேற்றுள்ளார். இந்த நிலையில், 1,200 மதிப்பெண்களுக்கு 829 மதிப்பெண்கள் பெற்று அவர் தேர்ச்சி பெற்றுள்ளார். முதுமை காலத்தில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றது ஸ்ரீதேவிக்கு மிகுந்த மகிச்சியை வழங்கியுள்ளது.

இதையும் படிங்க : தோழியுடன் காணாமல் போன பெண்.. காதலன் செய்த கொடூரம்.. விசாரணையில் வெளியான பகீர் சம்பவம்!

தேர்வில் வெற்றி – மிகுந்த மகிழ்ச்சியுடன் பேசிய ஸ்ரீதேவி

இது குறித்து கூறியுள்ள ஸ்ரீதேவி, மனம் இருந்தால் எந்த இலக்கையும் அடையலாம் என்ற தன் நம்பிக்கையே இந்த வெற்றியின் பின்னால் உள்ளது. எனக்கு குடும்பத்தினரும், ஆசிரியர்களும் தந்த ஊக்கமே இந்த வெற்றிக்கு காரணம். வகுப்புகளுக்கு சென்று படித்தது போக வீட்டில் தனது மருமகள் தனக்கு பாடம் சொல்லி கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். 57 ஆண்டுகள் கழித்து தனது 77 வயதில் பிளஸ் 2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ள ஸ்ரீதேவி பலருக்கும் முன் உதாரணமாக அமைந்துள்ளார்.