கேரளாவை அச்சுறுத்தும் மூளையை தின்னும் அமீபா.. அதிகரிக்கும் உயிரிழப்புகள்.. உஷார் மக்களே!
Kerala Brain Eating Amoeba Cases : கேரளாவில் மூளையை தின்னும் அமீபா தொற்றால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த தொற்றால் 10க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கேரளா, செப்டம்பர் 08 : அண்டை மாநிலமான கேரளாவில் மூளையை தின்னும் அமீபா (Brain Eating Amoeba) தொற்றால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 11 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவில் மூளையை தின்னும் அமீபா தொற்றால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கேரளாவில் முதல்முறையாக 9 வயது சிறுமி மூளையை தின்னும் அமீபா நோயால் உயிரிழந்தார். 2025 ஆகஸ்ட் 13ஆம் தேதி காய்ச்சல் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மாதிரிகளை சோதனையிட்ட மருத்துவர்கள், மூளையை தின்னும் அமீபா தொற்றால் உயிரிழந்ததாக கூறினர்.
அரைத் தொடர்ந்து மூளையை தின்னும் அமீபா தொற்றால் பலரும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, வயநாடு, கோழிக்கோடு, கொல்லம், திருவனந்தபுரம், மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூளையை தின்னும் அமீபா தொற்றல் 10க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், மூளையை தின்னும் அமீபா தொற்றால் மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
Also Read : வீட்டில் ஏசி யூஸ் பண்ணுறீங்களா? பறிபோன 3 உயிர்கள்.. அதிர்ச்சி சம்பவம்!




மூளையை தின்னும் அமீபாவால் மேலும் ஒருவர் பலி
மலப்புரம் மாவட்டம் வந்தூரைச் சேர்ந்த 56 வயது பெண் ஷோபனா, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அவரது உடல் தற்போது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.. சுல்தான் பத்தேரியைச் சேர்ந்த 45 வயதான ரதீஷ் என்ற மற்றொரு நோயாளி அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது அதே நோயால் பாதிக்கப்பட்டு இறந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு அவரது மரணம் நிகழ்ந்துள்ளது.
அவருக்கு இதயப் பிரச்சினைகளும் இருந்ததாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் தற்போது வரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். கோழிக்கோடு மருத்துவமனையில் தற்போது 11 பேர் இந்த நோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் குறைந்தது ஒருவரின் நிலை மோசமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2025ஆம் ஆண்டு மட்டும் மொத்தம் 42 பேர் மூளைய தின்னும் அமீபா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Also Read : மழை வெள்ளத்தில் மூழ்கிய 300 கார்கள்.. மாருதி சுசுகி நிறுவனத்திற்கு பேரிழப்பு!
மூளையை தின்னும் அமீபா தொற்று அறிகுறி
காய்ச்சல், தலைவலி, வாந்தி, மூக்கிலிருந்து சளி வெளியேறுதல், கழுத்து வலி, வலிப்பு, மயக்கம், கோமா, வெளிச்சத்தை ஏற்க முடியாதது போன்றவை இந்த மூளையை தின்னும் அமீபாவின் அறிகுறிகளாகும். இந்த தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவாது. தேங்கி நிற்கும் அல்லது அசுத்தமான நீரில் உள்ள இந்த அமீபா, மூக்கின் வழியாக சென்று மூளையில் கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது உயிர்வாழும் தன்மை கொண்டது என்பதால், மூளையைச் சிறுகச் சிறுக உணவாக உட்கொள்ளும். இதனால், குளங்கள், ஏரிகள், ஆறுகளில் குளிப்பதை தவிர்க்கவும். சுத்திகரிக்கப்பட்ட அல்லது குளோரினேட்டட் செய்யப்பட்ட தண்ணீரை குடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.