Telangana Crime : மகள் திருமணத்தன்று தாய்க்கு நேர்ந்த சோகம்.. கண்ணீரில் மூழ்கிய கிராமம்
Sudden Cardiac Arrest : மகளின் திருமண நாளில், தாய் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சோக சம்பவம் தெலங்கானாவில் நிகழ்ந்துள்ளது. மகிழ்ச்சியான சூழலில் ஏற்பட்ட இந்த திடீர் மரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதிக உணர்ச்சிவசப்பாடு மாரடைப்புக்கு காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வயதான காலத்தில் நோய்வாய்ப்பட்டு இறப்பது என்பது தான் இறப்பு என்ற காலம் தற்போது கரையேறிவிட்டது. யாருக்கு எந்த நேரத்தில் இறப்பு தேடி வருகிறது புரியாத புதிராகவே உள்ளது குறிப்பாக வயதானவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு வரும் என்ற கதை எல்லாம் மாறி இப்பொழுது பள்ளி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினர்களையும் மாரடைப்பு தாக்கி வருகிறது. இதய செயல் இழப்பு காரணமாக சமீபத்தில் ஒரு பள்ளி மாணவன் உயிரிழந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியதை யாரும் மறக்க மாட்டோம். மாறி வரும் வாழ்க்கைத்தரம், உணவு ஆரோக்கியமின்மை ஆகியவை இப்படியான நோய்களுக்கு காரணமாக அமைகின்றன. இந்நிலையில் ஆந்திராவில் தாய் ஒருவர் தன்னுடைய மகள் திருமணத்தன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தில் உள்ள காமேபள்ளி வட்டாரத்தில் உள்ள அப்பாஸ்புரம் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்தது. திருமணம் நடந்த வீட்டில் திடீரென இந்த சோகம் ஏற்பட்டது. அனைவரும் மகிழ்ச்சியிலும் கொண்டாட்டத்திலும் மூழ்கியிருந்த வீடு, திடீரென கண்ணீரில் மூழ்கியது. தனது மகளை திருமணம் செய்து மணமகனிடம் ஒப்படைக்கும் போது, மணமகளின் தாய் திடீரென மாரடைப்பால் சரிந்து விழுந்தார். இது திடீர் சம்பவத்தால் அந்த கிராமம் முழுவதும் சோகத்தின் பிடியில் சிக்கியது
Also Read : காதலனுடன் வாழ கணவனை தீர்த்துக்கட்ட முடிவு செய்த மனைவி.. உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்த கொடூரம்!




நடந்தது என்ன?
காமேபள்ளி மண்டலத்தில் உள்ள அப்பாய் புரம் கிராமத்தைச் சேர்ந்த பனோத்து மொஹிலால் மற்றும் கல்யாணி தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அவர்கள் தங்கள் மூத்த மகள் சிந்துவை தெகுலப்பள்ளி மண்டலத்தைச் சேர்ந்த பாலாஜி என்ற இளைஞருக்கு திருமணம் செய்து வைத்தனர். அவர்களது வீட்டிற்கு அருகில் நடந்த இந்த திருமணம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை காலை திருமணம் நடந்தது. மாலையில், தனது மகள் சிந்துவை கணவரிடம் ஒப்படைக்கும் போது, சிந்துவின் தாய் கல்யாணி திடீரென மயங்கி விழுந்து இதய செயலிழப்பு ஏற்பட்டு உயிரிழந்தா. தனது மகள் தன்னைவிட்டு பிரிவதை தாங்க முடியாமல் உணர்ச்சிவசப்பட்டு இருந்த அவர் திடீரென சரிந்து விழுந்தார்.
Also Read : கணவனின் ஆண் உறுப்பை அறுத்த இரண்டாவது மனைவி.. அதிர்ச்சி சம்பவம்!
உடனடியாக, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். கல்யாணியை பரிசோதித்த மருத்துவர்கள் அவள் மாரடைப்பால் இறந்துவிட்டதாக உறுதி செய்தனர். இந்த திடீர் சம்பவத்தால் முழு குடும்பமும் அதிர்ச்சியடைந்தனர். தன்னுடைய திருமண நாளில் தாயை பறிகொடுத்த மகளை கண்டு அக்கிராமத்தில் சோகத்தில் ஆழ்ந்தனர். அதிகமாக உணர்ச்சிவசப்பட்டதே அவருக்கு மாரடைப்பு ஏற்பட காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கல் தெரிவித்துள்ளனர்