மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் மன அழுத்தம் – எப்படி தவிர்ப்பது?
Stress Impact on Heart : இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தின் காரணமாக மன அழுத்தத்தினால் அவதிப்பட்டு வருகின்றனர். இது இதயத்திற்கு நேரடியான ஆபத்தை உருவாக்குகிறது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தொடர்ந்து அதிகப்படியான மன அழுத்தம், இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தி, இதய தமனிகளில் அடைப்புகளை உருவாக்கி, மாரடைப்பு ஏற்படுத்தக்கூடிய நிலைக்கு கொண்டு செல்லும். இதனை எப்படி தவிர்ப்பது என இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

நாம் பெரும்பாலும் மன அழுத்தத்தை (Stress) லேசாக எடுத்துக்கொள்கிறோம், ஆனால் அது நம் இதயத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இன்றைய வேகமான வாழ்க்கை, மோசமான பணிச்சூழல், உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய கவலைகள் என இவை அனைத்தும் சேர்ந்து படிப்படியாக உங்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கும் முக்கிய காரணிகள். மன ஆரோக்கியத்திற்கும் இதய ஆரோக்கியத்திற்கும் இடையே ஆழமான தொடர்பு இருப்பதாக மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். மன அழுத்தம் நாளடைவில் ஹார்ட் அட்டாக் (Heart Attack) ஏற்படுவதற்கு கூட காரணமாக அமையலாம். இந்த கட்டுரையில் மன அழுத்தத்தில் இருந்து எப்படி விடுபடுவது என்று பார்க்கலாம்.
மக்கள் அதிக மன அழுத்தத்தில் இருக்கும்போது, சிகிச்சை பெற வேண்டும் என்ற விழிப்புணர்வு அவர்களுக்கு இருப்பதில்லை. மேலும் மது அருந்துதல், புகைபிடித்தல், குறைவாக சாப்பிடுதல், ஜங்க் ஃபுட் சாப்பிடுதல், குறைவான தூக்கம், உடல் செயல்பாடு இல்லாதது, சூரிய ஒளி படாமல் இருப்பது, யாருடனும் உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது போன்ற பழக்கங்கள் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இந்தப் பழக்கங்கள் அனைத்தும் படிப்படியாக உங்களை கடுமையான ஆபத்தை நோக்கி அழைத்துச் செல்கின்றன. இது இதயத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இதையும் படிக்க : மார்பு அழுத்தம், வியர்வை.. இந்த அறிகுறிகள் இருக்கா? மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு




மன அழுத்தம் இதயத்தை எவ்வாறு பாதிக்கிறது?
டெல்லி ராஜீவ் காந்தி மருத்துவமனையின் இருதயவியல் துறையின் இணைப் பேராசிரியர் டாக்டர் அஜித் ஜெயின் இதுகுறித்து தெரிவித்ததாவது, ஒருவர் மன அழுத்தத்தில் இருக்கும்போது, உடலில் அட்ரினலின் மற்றும் கார்டிசோல் போன்ற சில ஹார்மோன்களின் அளவு அதிகரிக்கிறது என்று விளக்குகிறார். இதனால் பதற்றம் அதிகரித்து இதயத்துடிப்பு அதிகரிக்கிறது, இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இந்த நிலை நீண்ட காலம் நீடித்தால், இரத்த நாளங்கள் சுருங்கத் தொடங்கி, வீக்கமடையக்கூடும். இது இதய தமனிகளில் அடைப்பை ஏற்படுத்துகிறது, இது மேலும் மாரடைப்பை ஏற்படுத்தும்.
இதையும் படிக்க :பதட்டத்தில் இருக்கும்போது அதிகரிக்கும் இதயத் துடிப்பு – நோயின் அறிகுறியா?
மன அழுத்தத்தை தவிர்ப்பது எப்படி?
தொடர்ச்சியான மன அழுத்தம் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். நவீன வாழ்க்கை முறை, வேலை அழுத்தம், குடும்ப பதற்றம், நிதி உறுதியற்ற தன்மை மபோன்ற பல காரணங்கள் நம்மை தொடர்ந்து மன அழுத்தத்தை நோக்கித் தள்ளுகின்றன. நிபுணர்களின் கூற்றுப்படி, மன ஆரோக்கியத்தை தீவிரமாக எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம். “ஒருவர் தினமும் 30 நிமிடங்கள் நடைபயிற்சி, தியானம், பிராணயாமம் போன்றவற்றை கடைபிடித்தால் மன அழுத்தத்தின் விளைவைப் பெருமளவில் குறைக்க முடியும்.” இது தவிர, ஆரோக்கியமான உணவை உட்கொள்வது, போதுமான தூக்கம் பெறுவது மற்றும் உங்கள் அன்புக்குரியவர்களுடன் தொடர்பில் இருப்பது ஆகியவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.