Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்வீடியோ

40 வயதுக்கு மேற்பட்டவரா? இந்த பரிசோதனைகள் செய்வது கட்டாயம்!

Heart Health Alert : இன்றைய காலக்கட்டத்தில் ஆண்களுக்கு இதய நோய்க்கான ஆபத்துகள் அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் ஏற்படும் மாரடைப்புகளில் 25 சதவகிதிம் 40 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இதய நோயை தவிர்க்க ஆண்கள் செய்ய வேண்டிய பரிசோதனைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

40 வயதுக்கு மேற்பட்டவரா? இந்த பரிசோதனைகள் செய்வது கட்டாயம்!
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 18 Jun 2025 19:03 PM

இன்றைய காலகட்டத்தில் ஆண்களிடையே இதய நோய் (Heart Disease) ஒரு பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் முன்பை விட மோசமான பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்தியாவில் ஏற்படும் மாரடைப்புகளில் (Heart Attack) 25 சதவகிதிம் 40 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கின்றன. மேலும் 50 சதவிகிதம் மாரடைப்புகள் 50 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது. உட்கார்ந்தபடியே நீண்ட நேரம் வேலை பார்ப்பது, வாழ்க்கை முறை, நீண்ட நாள் மன அழுத்தம் மற்றும் மருத்துவ பரிசோதனைகளை புறக்கணித்தல் ஆகியவை இந்த ஆபத்தை மேலும் அதிகரிக்கின்றன. பாதிப்புகள் தீவிரமடையும் முன், நாற்பது வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

மாரடைப்பு திடீரென வருவது போல் தோன்றினாலும், சில நேரங்களில் உடல் முன்கூட்டியே சில அறிகுறிகளைக் கொடுக்கிறது. குறிப்பாக இதயம் தொடர்பான பரிசோதனைகள் மற்றும் இரத்தப் பரிசோதனைகளில் காணப்படும் மாற்றங்கள், மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயங்களை முன்கூட்டியே அடையாளம் காண உதவும்.

இதயப் பிரச்னைகளின் ஆரம்ப அறிகுறிகள்

சில உடல் அறிகுறிகளை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது. ஏனெனில் அவை இதயப் பிரச்னைகளைக் குறிக்கின்றன. இதய நோய்களுக்கான பொதுவான அறிகுறிகளை தெரிந்துகொள்ளலாம்.

  • மார்பில் அழுத்தம், இறுக்கம் அல்லது எரிச்சல், கைகள் அல்லது கழுத்துப் பகுதி வரை வலியை உணர்வது இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
  • படிக்கட்டுகளில் ஏறுவது, நடப்பது போன்ற அன்றாடப் பணிகளின் போது விவரிக்க முடியாத சோர்வு மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்பட்டால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • அசாதாரண இதயத் துடிப்புஅல்லது வேகமான இதயத் துடிப்பு அல்லது அரித்மியா போன்ற உணர்வுகள் ஏற்படக் கூடும்.
  • அஜீரணம் மற்றும் குமட்டல் போன்ற அறிகுறிகள் சில நேரங்களில் செரிமான பிரச்னைகளாக மட்டுமல்லாமல் இதயம் தொடர்பான பிரச்னைகளாகவும் இருக்கலாம்.

குடும்பத்தில் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் அல்லது இதய நோய் வரலாறு உள்ளவர்கள் இந்த அறிகுறிகள் ஏதேனும் தோன்றினால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் செய்ய வேண்டிய பரிசோதனைகள்

இதய நோய் அபாயத்தை முன்கூட்டியே கண்டறிய, 40 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு ஆணும் ஆண்டுக்கு ஒருமுறையாவது மருத்துவ பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

  • லிப்பிட் புரொஃபைல் (Lipid Profile) பரிசோதனை செய்வதன் மூலம் உடலில் கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடு அளவை தெரிந்துகொள்ள முடியும். அதிக அளவு LDL (கெட்ட கொழுப்பு)  தமனிகளில் அடைப்புகளுக்கு வழிவகுக்கும்.
  • HbA1c என்ற பரிசோதனையின் மூலம் இது மூன்று மாதங்களுக்கான சராசரி இரத்த சர்க்கரை அளவை தெரிந்து கொள்ள முடியும். இது கண்டறியப்படாத நீரிழிவு அல்லது நீரிழிவு நோய்க்கான முந்தைய நிலை ஆகியவற்றை தெரிந்துகொள்ள முடியும். இவை இதய நோய்க்கான முக்கிய காரணங்கள்.
  • இசிஜி (ECG) பரிசோதனையின் மூலம் இதயத்தில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலைகளையும் அல்லது இதயத்தில் ஏற்படும் அழுத்தத்தைக் கண்டறிகிறது.
  • டிரெட்மில் சோதனையின் மூலம் உடல் செயல்பாடுகளின் போது இதயம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை மதிப்பிடுகிறது. இது இதய தசைக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைவதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது.

மாரடைப்பு வராமல் தடுக்கும் வழிகள்

பழங்கள், காய்கறிகள், சிறு தானியங்கள் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தினமும் 30 நிமிட உடற்பயிற்சி இதயத்தை பலப்படுத்துகிறத. யோகா, தியானம் அல்லது மகிழ்ச்சிகரமான பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.  புகையிலை பயன்பாட்டை முற்றிலுமாகத் தவிர்ப்பதும், மது அருந்துவதைக் கட்டுப்படுத்துவதும் அவசியம். இவை இதய நோய்க்கான வலுவான காரணிகளாக பார்க்கப்படுகிறது.

சோலோ டிராவல் பண்ணப்போறீங்களா? அப்போ இத தெரிஞ்சுக்கோங்க!
சோலோ டிராவல் பண்ணப்போறீங்களா? அப்போ இத தெரிஞ்சுக்கோங்க!...
2026 மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான அட்டவணை வெளியீடு..!
2026 மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான அட்டவணை வெளியீடு..!...
சாகித்ய அகடாமி விருது.. விஷ்ணுபுரம் சரவணனுக்கு பால புரஸ்கார்
சாகித்ய அகடாமி விருது.. விஷ்ணுபுரம் சரவணனுக்கு பால புரஸ்கார்...
அப்போது மணிரத்னம் சாரிடம் வசமாக சிக்கிவிட்டேன்.. கார்த்தி!
அப்போது மணிரத்னம் சாரிடம் வசமாக சிக்கிவிட்டேன்.. கார்த்தி!...
வீட்டிலேயே சுவையான கோபி பிரைட் ரைஸ் செய்வது எப்படி..?
வீட்டிலேயே சுவையான கோபி பிரைட் ரைஸ் செய்வது எப்படி..?...
அந்த விஷயத்தில் ஆர்யாவைப் பார்த்து வியந்தேன் - ரவி மோகன்!
அந்த விஷயத்தில் ஆர்யாவைப் பார்த்து வியந்தேன் - ரவி மோகன்!...
அந்த படத்தில் டான்ஸ் ஆட கஷ்டப்பட்டேன் - நடிகை சிம்ரன்
அந்த படத்தில் டான்ஸ் ஆட கஷ்டப்பட்டேன் - நடிகை சிம்ரன்...
'குபேரா நிச்சயம் அருமையான படம்' - குபேரா இயக்குநர் பேச்சு!
'குபேரா நிச்சயம் அருமையான படம்' - குபேரா இயக்குநர் பேச்சு!...
திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம்.. அமைச்சர் விளக்கம்
திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம்.. அமைச்சர் விளக்கம்...
அனிருத்தின் ரசிகர்களுக்குக் காத்திருக்கும் ட்ரீட்
அனிருத்தின் ரசிகர்களுக்குக் காத்திருக்கும் ட்ரீட்...
வீக் எண்டுக்கு ஊருக்கு போற பிளானா? சிறப்பு பேருந்து இயக்கம்
வீக் எண்டுக்கு ஊருக்கு போற பிளானா? சிறப்பு பேருந்து இயக்கம்...