AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தூங்கும் போது ஏற்படும் மாரடைப்பு – தவிர்க்க கடைபிடிக்க வேண்டிய எளிய பழக்கங்கள்

Heart Health Tips : உலகளவில் மரணத்திற்கு இதய நோய் முக்கிய காரணமாகும். இதய நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கிறது. பலர் தூங்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடையும் செய்திகளை கேள்விப்பட்டிருப்போம். அவற்றை தவிர்ப்பது எப்படி என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

தூங்கும் போது ஏற்படும் மாரடைப்பு – தவிர்க்க கடைபிடிக்க வேண்டிய எளிய பழக்கங்கள்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 13 Jun 2025 23:32 PM IST

உலகளவில் மரணத்திற்கு இதய நோய் (Heart Disease) முக்கிய காரணமாகும். சமீப காலமாக இளைஞர்கள் அதிக அளவில் மாரடைப்பினால் (Heart Attack) மரணமடையும் செய்திகளை நாம் அடிக்கடி கேள்விப்பட்டு வருகிறோம். சிலர் விளையாடும்போது, டான்ஸ் ஆடும்போது திடீரென மயங்கி விழுந்து மரணமடையும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மாரடைப்பு என்பது எந்த நேரத்திலும் ஏற்படலாம். இதய நோய்கள் உள்ளவர்களுக்கு இது மிகவும் அபாயகரமான சூழ்நிலையை ஏற்படுத்தும். சிலர் தூங்கும்போது கூட மாரடைப்பு ஏற்படும் சம்பவங்களை கேள்விப்பட்டிருப்போம். இதய நோய் மற்றும் பக்கவாதத்தைத் தடுக்க வழக்கமான பரிசோதனைகள் முக்கியம் என்றாலும், தூங்கும் போது மாரடைப்பைத் தடுக்க இரண்டு விஷயங்களைச் செய்யலாம். அவை என்னவென்று இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

நீங்கள் தூங்கும்போது, ​​உங்கள் இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு பொதுவாகக் குறையும். ஆனால், சில நேரங்களில் இதயம் சீரற்ற முறையில் இயங்கலாம். குறிப்பாக தூக்கத்தின் போது தமனிகளில் ஏற்படும் அடைப்பு, உயர் இரத்த அழுத்தம் அல்லது ஒழுங்கற்ற இதயத் துடிப்பு ஆகியவை மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும். கூடுதலாக, சிலர் தூக்கத்தில் மூச்சுத்திணறல் போன்ற தூக்கப் பிரச்னைகளை அனுபவிக்கின்றனர். இது தூக்கத்தின் போது சுவாசத்தை சீர்குலைத்து, இதயத்தின் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, இது மாரடைப்புக்கு வழிவகுக்கும்.

தூங்கும் போது ஏற்படும் மாரடைப்பை தவிர்க்க எளிய பழக்கங்கள்

சுகாதார நிபுணர் டாக்டர். மிக்கி மேத்தாவின் கூற்றுப்படி, தூங்குவதற்கு முன் ஆழமாக அதே நேரம் மெதுவாக சுவாசிப்பது உங்கள் மனதையும், உடலையும் அமைதிப்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும், உங்கள் இதயத் துடிப்பை சீராக்கவும் உதவும். இந்த எளிய பயிற்சி உடலின் தளர்வை மேலும் மேம்படுத்துகிறது. இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதயத்திற்கு ஆக்ஸிஜன் ஓட்டத்தை மேம்படுத்தவும், நல்ல இரவு தூக்கத்தை வழங்கவும் உதவும்.

இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். இதயப் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு ஆரோக்கியமான உணவுமுறை சிறந்த வழிகளில் ஒன்றாகும். கொழுப்பு மற்றும் உப்பு குறைவாக உள்ள உணவு உங்கள் தமனிகளை சுத்தமாகவும், உங்கள் இரத்த அழுத்தத்தை சாதாரணமாகவும் வைத்திருக்க உதவும். ஒவ்வொரு நாளும் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள். மைதா அல்லது அரிசி/பாஸ்தாவிற்கு பதிலாக பிரவுன் ரைஸ் எனப்படும் பழுப்பு அரிசி மற்றும் ஓட்ஸ் போன்ற உணவுகளைத் தேர்ந்தெடுக்கவும். பாதாம், வால்நட் போன்ற நட்ஸ் வகைகள, பூசணி விதைகள் மற்றும் சால்மன் போன்ற மீன்களில் காணப்படும் நல்ல கொழுப்புகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள குளிர்பானங்களை முடிந்த அளவு தவிருங்கள்.

வாக்கிங் போன்ற எளிமையான உடற்பயிற்சிகள் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. வாரத்தின் பெரும்பாலான நாட்களில், நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் அல்லது நீச்சல் போன்ற எளிமையான உடற்பயிற்சியை குறைந்தது 30 நிமிடங்கள் வரை செய்யுங்கள். புகைபிடித்தல், மது அருந்ததுதல் அதிகமாக சாப்பிடுவது போன்ற ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள் இரத்த அழுத்தத்தை  அதிகரிக்கும். தூக்கம் மற்றொரு முக்கிய காரணம். மோசமான தூக்கம் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. தினமும் 7 முதல் 8 மணி நேரம் இடைவேளையின்றி நன்றாக தூங்க வேண்டும். இந்த பழக்கவழக்கங்களை மேற்கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம்.

Follow Us