AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Fatty Liver : நிறைய டீ குடிப்பதால் ஃபேட்டி லிவர் பிரச்னை அதிகரிக்குமா?

Fatty Liver: மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கங்களால் மது அருந்தாதவர்களுக்கும் ஃபேட்டி லிவர் பிரச்னை ஏற்படுகிறது. இப்பொழுது பலரும் அளவுக்கு அதிகமாக டீ குடிக்கின்றனர். டீ குடிப்தால் ஃபேட்டி லிவர் பிரச்னை அதிகரிக்குமா? என்பது குறித்து விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

Fatty Liver : நிறைய டீ குடிப்பதால் ஃபேட்டி லிவர் பிரச்னை அதிகரிக்குமா?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 05 Jun 2025 23:49 PM IST

ஃபேட்டி லிவர் (Fatty Liver)  என்பது கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேரும் ஒரு நிலை. இது கல்லீரல் செயல்பாட்டை பாதிக்கிறது. கொழுப்பு கல்லீரல் கல்லீரல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது.  முன்பு மது அருந்துபவர்களுக்கு மட்டும் தான் இந்த பிரச்னை இருந்து வந்தது. தற்போது மாறி வரும் உணவுப் பழக்கம், வாழ்க்கை முறையின் காரணமாக அனைவருக்கும் இந்த ஃபேட்டி லிவர் பிரச்னை பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் ஃபேட்டி லிவர் பிரச்னை ஆரம்ப கட்டத்தில் எளிதாக கண்டுபிடிக்க முடியாது. பிரச்னை தீவரமடைந்த பிறகே அதன் அறிகுறிகள் நமக்கு தெரியவரும்.  பலர் தேநீர் குடிப்பதை மிகவும் விரும்புகிறார்கள். சிலர் டீ அடிக்ட் (Tea Addict) என சொல்லும் அளவுக்கு குறைந்தது 5க்கும் மேற்பட்ட தடவை டீ குடிக்கின்றனர். டீ குடிப்பதனால் கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

டீ குடிப்பதால் ஃபேட்டி லிவர் பாதிப்பு அதிகரிக்குமா?

  • அதிகப்படியான மது அருந்துதல், மோசமான உணவுமுறை, புகைபிடித்தல், உடல் பருமன் மற்றும் உடற்பயிற்சியின்மை ஆகியவற்றால் கொழுப்பு கல்லீரல் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மேற்சொன்ன பழக்கம் இல்லாதவர்களுக்கும் ஃபேட்டி லிவர் பிரச்னை ஏற்படுகிறது. காரணம் அவர்கள் அதிகப்படியான டீ குடிப்பவர்களாக இருப்பார்கள். இதனால் கல்லீரலில் கொழுப்பு படியத் தொடங்குகிறது.
  • குறைந்த அளவில்  டீ குடிப்பதால் கல்லீரலில் நேரடியாக கொழுப்பாக மாறாது. ஆனால் ஒரு நாளைக்கு பல முறை கூடுதலாக சர்க்கரை, பால் மற்றும் கிரீம் சேர்த்து தேநீர் அருந்துவது ஆபத்தானது. இது உடலில் கொழுப்பை அதிகரிப்பதன் மூலம் கல்லீரலில் கொழுப்பு படியும் அபாயத்தை அதிகரிக்கிறது.
  • அதிகமாக தேநீர் குடிப்பதால் தூக்கமின்மை, செரிமான பிரச்சனைகள், பசியின்மை மற்றும் கல்லீரலில் அதிக அழுத்தம் ஏற்படும். கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை கல்லீரலை சுத்தப்படுத்த உதவுகின்றன.
  • ஃபேட்டி லிவர் பிரச்னை இருப்பவர்கள் தினமும் குறைந்த அளவில் கிரீன் டீ குடிப்பது நன்மை பயக்கும். ஒரு நாளைக்கு 1 முதல் 2 கப் தேநீர் லேசான பாலுடன் குடிக்கலாம். அதிக சர்க்கரை, கிரீம் அல்லது பால் ஆகியவற்றை சேர்த்துக்கொள்வதை தவிர்க்கவும். பால் டீக்கு மாற்றாரக கிரீன் டீ அல்லது மூலிகை டீ குடிக்கலாம்.
  • உங்களுக்கு ஏற்கனவே கொழுப்பு கல்லீரல் பிரச்சனை இருந்தால், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே தேநீர் குடிக்கவும். இல்லை என்றால், பாதிப்பு மேலும் மோசமடையலாம். அதனால்தான் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். டீ மட்டுமல்ல எந்த உணவையும்  அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால், பாதிப்பு ஏற்படும். அதனால்தான் உடலுக்குத் தேவையான அனைத்தையும் போதுமான அளவு எடுத்துக்கொள்வது நல்லது.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)

Follow Us