AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Kidney Damage Symptoms: உடம்பில் இங்கெல்லாம் தீராத வலியா? இது சிறுநீரக செயலிழப்பின் அறிகுறியாக இருக்கலாம்!

Kidney Disease Symptoms: சிறுநீரகப் பாதிப்பு கீழ் முதுகு, மேல் வயிறு, தொடைகள், பக்கவாட்டு, மற்றும் சிறுநீர் கழிக்கும் போது வலி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். உடல் வீக்கமும் ஒரு அறிகுறி. இந்த அறிகுறிகள் தீவிரமடைந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். சிறுநீரக ஆரோக்கியம் முக்கியம் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

Kidney Damage Symptoms: உடம்பில் இங்கெல்லாம் தீராத வலியா? இது சிறுநீரக செயலிழப்பின் அறிகுறியாக இருக்கலாம்!
கிட்னி செயலிழப்புImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 19 Jun 2025 19:24 PM IST

இதயத்தை போன்று சிறுநீரகம் (Kidney) நமது உடலின் ஒரு முக்கிய பகுதியாகும். இது நமது உடலில் உள்ள இரத்தத்தை (Blood) வடிகட்டி, அதிலிருக்கும் நச்சுகளை நீக்கி வெளியேற்றுகிறது. இதன்மூலம், நமது ஆரோக்கிய சமநிலையை பராமரிக்கிறது. இந்த சிறுநீரகங்கள் நமது உடலில் மோசமடையத் தொடங்கும் போது, ​​உடல் சில அறிகுறிகளை வெளியிட தொடங்கும். அதுவும் சிறுநீரகத்துடன் நேரடி தொடர்பு இல்லாத பகுதிகளில் வலி உண்டாகும். இத்தகைய சூழ்நிலையில், சிறுநீரகம் சேதமடைந்தால் உடலின் எந்த 6 பாகங்களில் வலி ஏற்படும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

சிறுநீரகம் சேதமடைந்தால் வலி எங்கு ஏற்படும்..?

கீழ் முதுகு வலி:

சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, சிறுநீரகங்கள் செயலிழக்கும்போது, ​​கீழ் முதுகில் வலி ஏற்படும். சிறுநீரகங்கள் முதுகெலும்பின் இருபுறமும் உள்ளன. சிறுநீரகத்தில் வீக்கம், கற்கள் அல்லது ஏதேனும் தொற்று பிரச்சனை இருந்தால், ஒரு பக்கத்திலோ அல்லது இருபுறத்திலோ கீழ் முதுகில் கடுமையான வலியை தரும். இதுபோன்ற பிரச்சனைகளை நீங்கள் அடிக்கடி எதிர்கொண்டால், உடனடியாக ஒரு மருத்துவரிடம் சென்று சோதனை செய்வது நல்லது.

மேல் இரைப்பை வலி:

பெரும்பாலும் வயிற்றின் மேல் பகுதியில் கனமான உணர்வு அல்லது குத்துவது போல் தோன்றினால் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளாக இருக்கலாம். இந்த வலி பொதுவாக ஒரு பக்கத்தில் மட்டுமே ஏற்படும். மேலும் சிறுநீரகத்தில் வீக்கம் அல்லது கற்கள் இருக்கும்போதும் இது அதிக வலியை தரும்.

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வலி:

சிறுநீரகம் சேதமடைந்தால், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உணர்வு அல்லது வலி ஏற்படும். சிறுநீரகத்தில் தொற்று இருந்தால், சிறுநீர் கழிக்கும் போது எரியும் அல்லது கொட்டும் உணர்வு ஏற்படலாம். இது சிறுநீர் பாதை தொற்று (UTI) அறிகுறியாகவும் இருக்கலாம். இது நாளடைவில் சிறுநீரகத்தையும் பாதிக்க செய்யலாம். எனவே, சரியான நேரத்தில் மருத்துவரிடம் செல்வது நல்லது.

தொடைகளில் வலி:

சில நேரங்களில் சிறுநீரகப் பிரச்சனையின் வலி கீழ்நோக்கி, அதாவது தொடைகள் அல்லது இடுப்புப் பகுதி வரை ஏற்படும். இது சிறுநீரகத்தில் கல் தன் இடத்தில் இருந்து நகரும்போது இது நிகழ்கிறது.

பக்கவாட்டு வலி:

முதுகுத்தண்டுக்கும் விலா எலும்புகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் ஏற்படும் வலி, பக்கவாட்டு வலி என்று அழைக்கப்படுகிறது, இது சிறுநீரக பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். அதன்படி, இந்த வலி தொடர்ந்து அல்லது திடீரென அதிகரிக்கலாம். அதற்குமுன்பே, மருத்துவரிடம் செல்வது நல்லது.

உடலில் வீக்கம்:

சிறுநீரகம் செயலிழந்தால், உடலில் இருந்து அதிகப்படியான திரவத்தை அகற்ற முடியாது. இதன் விளைவாக முகம், கண்கள், கைகள் மற்றும் கால்களில் வீக்கம் ஏற்படும். இந்த வீக்கத்துடன், லேசான வலி அல்லது உடல் கனமாகவும் தோன்றும்.

Follow Us