Health Tips: லேப்டாப்பை யூஸ் செய்யும் பெண்களா நீங்கள்..? இந்த பிரச்சனை ஏற்படலாம்!
Laptop Radiation Fertility: மடிக்கணினி பயன்பாடு பெண்களின் கருவுறுதலில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. லேப்டாப்பிலிருந்து வெளிப்படும் வெப்பம் மற்றும் மின்காந்த கதிர்வீச்சு ஹார்மோன் சமநிலையை பாதித்து, மலட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும். மடியில் வைத்து லேப்டாப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். டேபிள் அல்லது ஸ்டாண்ட் பயன்படுத்தி, லேப்டாப்பின் வெப்பத்தை குறைக்க கூலிங் பேட் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

நவீன வாழ்க்கையில் எவ்வளவு எளிதாக வேலை பார்க்க விரும்புகிறோமோ, அதற்கு ஏற்றார்போல் நமது கேஜெட்களையும் மாற்றிக்கொள்கிறோம். அத்தகைய ஒரு கேஜெட் மடிக்கணினியும் ஒன்று. அலுவலகத்தில் கம்ப்யூட்டர் முன்பு, உட்கார்ந்து வேலை பார்த்த காலம் கடந்து, இப்போது மடிக்கணினி கொண்டு எங்கும் எளிதாக வேலை செய்து பணிச்சுமையை குறைத்து கொள்கிறோம். மடிக்கணினி என்று அழைக்கப்படும் லேப்டாப் (Laptop Radiation) கொண்டு அலுவலக வேலைகளை முடிப்பதாக இருந்தாலும் சரி, படிப்பதாக இருந்தாலும் சரி உடனுக்குடன் செய்துவிடுகிறோம். இருப்பினும், லேப்டாப்பை பயன்படுத்துவதன் மூலம் தீமைகள் ஏற்படும் என்று உங்களுக்குத் தெரியுமா? அதுவும் பெண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்றால் உங்களால் நம்பமுடியுமா..? அதன்படி, இதன் ஆபத்து என்ன, அதை எவ்வாறு தவிர்க்கலாம் (Laptop Safety Tips) என்பதை இங்கே தெரிந்துகொள்வோம்.
மின்காந்த புல கதிர்வீச்சு பாதிப்பு:
லேப்டாப்பில் இருந்து வெளிப்படும் வெப்பம் மற்றும் மின்காந்த புல கதிர்வீச்சு (EMF) உடலில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். இது ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படுத்துவது மட்டுமின்றி, உடலில் பல வகையான பிரச்சினைகள் உண்டாக்கும். இந்தப் பிரச்சினை பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் ஏற்படலாம்.
பெண்களுக்கு அதிகபடியான ஆபத்து:
பெரும்பாலும் பெண்கள் வீட்டில் லேப்டாப்பை பயன்படுத்தும் போது கவனக்குறைவாக பயன்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. படுத்துக் கொண்டிருக்கும்போதோ அல்லது மடியில் வைத்திருப்பதன் மூலமோ வைத்து பயன்படுத்துகிறார்கள். ஆனால், லேப்டாப்பை பயன்படுத்துவது பெண்களுக்கு பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். லேப்டாப் தொடர்ந்து பயன்படுத்துவதால் வெப்பம் மற்றும் மின்காந்த கதிர்வீச்சை உருவாக்குகிறது. இதன் காரணமாக பெண்களின் ஹார்மோன் சமநிலை தொந்தரவு செய்யப்படுகிறது. லேப்டாப் வெப்பத்திற்கு உடல் தொடர்ந்து வெளிப்படுவதால் மாதவிடாய் தொந்தரவு ஏற்படலாம்.
இது கருவுறுதலை எவ்வாறு பாதிக்கிறது?
லேப்டாப்பில் வெளிப்படும் வெப்பத்தை தொடர்ந்து வெளிப்படுத்துவது உடலுக்குள் மாற்றங்களை ஏற்படுத்தும். இடுப்பு உறுப்புகளில் வீக்கம் ஏற்பட்டு, இது மெலடோனின் உற்பத்தியையும் பாதிக்கலாம். மெலடோனின் குறைபாட்டின் விளைவை பெண்களின் முட்டைகளின் தரத்தில் காணலாம். இது கர்ப்பத்தில் சிக்கல்களை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், கருச்சிதைவு அபாயத்தையும் அதிகரிக்கிறது.
ஆபத்தைத் தவிர்ப்பது எப்படி?
இந்த ஆபத்துக்கான முக்கிய காரணம் லேப்டாப் பயன்படுத்தப்படும் விதத்தில் உள்ளது. அலுவலகத்தில் பெண்கள் டேபிளில் வைத்துப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் வீட்டிற்கு வந்தபிறகு, மடியில் வைத்து பயன்படுத்துகிறார்கள். ஆனால், ஆபத்து பற்றி பெண்களுக்கு தெரியாது. இது மலட்டுத்தன்மை பிரச்சனையை உண்டாக்கும்.
லேப்டாப் எப்படி பயன்படுத்துவது நல்லது..?
டேபிள் அல்லது ஸ்டாண்ட்:
லேப்டாப் பயன்படுத்தும் போது டேபிள் அல்லது ஸ்டாண்டைப் பயன்படுத்தவும். இது உடலில் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கலாம்.
கூலிங் பேட்:
லேப்டாப்பி வெப்பம் வெளியேறுவதைத் தவிர்க்க நீங்கள் கூலிங் பேட் போன்றவற்றை வாங்கி பயன்படுத்தலாம்.