AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Health Tips: பச்சையாக முட்டை சாப்பிடுவது ஆரோக்கியமானதா..? வேகவைத்த முட்டை சிறந்ததா..?

Raw Eggs vs Cooked Eggs: பச்சை முட்டைகளில் சால்மோனெல்லா பாக்டீரியா இருப்பதால் ஆபத்து உள்ளது. வேகவைத்த முட்டைகள் பாதுகாப்பானவை, மேலும் புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை. பச்சை முட்டையில் உள்ள அவிடின் பயோட்டின் உறிஞ்சுதலைத் தடுக்கும். சரியாக சமைக்காத முட்டைகளும் ஆபத்தானவை. வேகவைத்த முட்டைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், எடையைக் குறைக்கவும் உதவும்.

Health Tips: பச்சையாக முட்டை சாப்பிடுவது ஆரோக்கியமானதா..? வேகவைத்த முட்டை சிறந்ததா..?
பச்சை முட்டை Vs வேகவைத்த முட்டைImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 18 Jun 2025 17:52 PM IST

முட்டை  (EGG) ஆரோக்கியத்தை அள்ளி கொடுப்பதால், இது சூப்பர் ஃபுட் என்று அழைக்கப்படுகிறது. முட்டையில் புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. காலை உணவாக வேகவைத்த முட்டை, ஆம்லெட் போன்றவற்றை எடுத்துகொள்கிறார்கள். வேகவைத்த முட்டைகள் (Boiled Eggs) மட்டுமின்றி, சிலர் பச்சையாகவோ அல்லது பாதியாக சமைத்த முட்டைகளையோ சாப்பிடுகிறார்கள். இது பண்டைய காலம் முதல் இப்போது வரை தொடர்கிறது. உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் பயிற்சியின்போது, பச்சை முட்டையை அப்படியே சாப்பிடுவார்கள். இருப்பினும், இது முற்றிலும் பாதுகாப்பானதாக கருதப்படவில்லை. இந்தநிலையில், முட்டையை பச்சையாக எடுத்துக்கொள்வது நல்லதா அல்லது தீங்குவிளைக்குமா என்பதை இங்கே தெரிந்துகொள்வோம்.

பச்சையாக முட்டைகளை சாப்பிடுவது ஆரோக்கியமானதா..?

சமைக்கப்படாத பச்சை முட்டைகளில் சால்மோனெல்லா பாக்டீரியாக்கள் இருக்கலாம். இவை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். முட்டைகளை பச்சையாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. முட்டைகள் சரியாக சமைக்கப்படாதபோது, அவற்றில் உள்ள சால்மோனெல்லா எனப்படும் ஆபத்தான பாக்டீரியாக்கள் பல கடுமையான வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

இது தவிர, பச்சை முட்டைகளில் உள்ள ‘அவிடின்’ என்ற புரதம் பயோட்டின் உறிஞ்சுதலை தடுக்கும். அதாவது, பச்சை முட்டைகளை அடிக்கடி உட்கொண்டால் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு வழிவகுக்கும்.

சரியாக சமைக்கப்படாத (ஆஃப் பாயில்) முட்டைகள் ஆபத்தானவையா..?

முட்டையை முழுமையாக சமைக்கவில்லை என்றாலும், சால்மோனெல்லா போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் உயிர்வாழ முடியும். மஞ்சள் கரு பச்சையாகவோ அல்லது ஈரமாகவோ இருக்கும்போது, ஃபுட் பாய்சன் ஏற்படும் அபாயம் உள்ளது.

சால்மோனெல்லா என்றால் என்ன..?

சால்மோனெல்லா என்பது ஒரு வகை தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா ஆகும். இது பெரும்பாலும் பச்சையான அல்லது சரியாக சமைக்கப்படாத முட்டைகளில் காணப்படும். அதேநேரத்தில், இது முட்டையின் வெளிப்புற மேற்பரப்பில் அல்லது வெள்ளைக்கருவில் காணப்படலாம். இந்த பாக்டீரியா வயிற்றுக்குள் சென்று ஃபுட் பாய்சனை உண்டாக்கி, பிரச்சனையை தரும்.

பச்சை முட்டை, சமைத்த முட்டை இதில் எது சிறந்தவை..?

பச்சை முட்டை மற்றும் சமைத்த முட்டை இரண்டும் ஊட்டச்சத்து நிறைந்தவை. ஆனால், ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுதல் மற்றும் பாதுகாப்பை பொறுத்தவரை, சமைத்த முட்டைகள் சிறந்ததாக கருதப்படுகிறது.

வேகவைத்த முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

  • வேகவைத்த முட்டையில் நல்ல அளவிலான துத்தநாகம், வைட்டமின் பி6 மற்றும் பி12 உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரித்து, நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும்.
  • வேகவைத்த முட்டையில் நல்ல அளவு கொழுப்பு இருப்பதால், இது உடலை சூடாக வைத்திருக்க உதவி செய்யும். குளிர்காலத்தில் பெரும்பாலான மக்கள் வேகவைத்த முட்டையை சாப்பிடுவதற்கு இதுவே காரணம்.
  • வேகவைத்த முட்டையில் அமினோ அமிலங்கள் நல்ல அளவில் உள்ளது. அதேநேரத்தில், இதில் உள்ள குறைந்த கலோரிகள் எடையை குறைக்க உதவி செய்யும். ஒரு முழுமையான வேகவைத்த முட்டையை எடுத்துக்கொள்வது பசியை அடக்கும்.

Follow Us