AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Health Tips: இளைஞர்களையும் ஆக்கிரமிக்கும் முதுகுவலி.. வராமல் தடுக்க என்ன செய்யலாம்..?

Back Pain Relief: இன்றைய நவீன வாழ்க்கை முறையில், பலர் முதுகுவலியால் அவதிப்படுகின்றனர். தவறான உட்காருதல், உடற்பயிற்சியின்மை, கனமான பொருட்களை தூக்குதல், தவறான தூக்க நிலை ஆகியவை முக்கிய காரணங்கள். நேரான உட்காருதல், உடற்பயிற்சி, சரியான முறையில் எடை தூக்குதல், சரியான தூக்கம் ஆகியவை முதுகு வலியை தடுக்க உதவும். இந்தக் கட்டுரை, முதுகுவலியின் காரணங்களை விளக்கி, தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளை வழங்குகிறது.

Health Tips: இளைஞர்களையும் ஆக்கிரமிக்கும் முதுகுவலி.. வராமல் தடுக்க என்ன செய்யலாம்..?
முதுகுவலி பிரச்சனைImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 19 Jun 2025 15:38 PM IST

இன்றைய நவீன மற்றும் பரபரப்பான வாழ்க்கையில் கிட்டத்தட்ட எல்லா வயதினரும் முதுகு வலியால் அவதிப்பட்டு வருகின்றன. முன்பெல்லாம், பெரியவர்களே முதுமையின் காரணங்களால் முதுகு வலியால் (Back pain) அவதிப்பட்டார்கள். ஆனால், இன்றைய காலத்தில் இளைஞர்கள் (Youngsters) கூட முதுகுவலியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த முதுகு வலிக்கு பின்னால் பல காரணங்கள் உண்டு. நமது அன்றாட வழக்கத்தின் சில தவறான பழக்கங்களால் இதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்கிறோம். பெரும்பாலும் நாம் நமது அன்றாட வாழ்க்கையில் இந்த பழக்கங்களை புறக்கணிக்கிறோம். இவை படிப்படியாக நம் முதுகெலும்பில் மோசமான விளைவை ஏற்படுத்தும். இதன் காரணமாக தாங்க முடியாத முதுகு வலி தொடங்குகிறது. இந்தப் பழக்கங்களைக் கண்டறிந்து சரியான நேரத்தில் சரிசெய்தால், இந்த பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

உட்காரும் நிலை:

சேரில் குனிந்து வேலை செய்தல், சோபாவில் தவறான நிலையில் உட்காருவது, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது முதுகுவலிக்கு முக்கிய காரணமாக அமைந்துவிடுகிறது. பணிநேரத்தின்போது ஆபிஸில் மணிக்கணிக்கில் கணினி முன், அமர்ந்திருப்பவர்கள் பெரும்பாலும் முதுகெலும்பில் அழுத்தம் கொடுக்கிறார்கள். இது முதுகில் விறைப்பு மற்றும் முதுக்கு வலியை கொடுக்கும். இதை தடுக்க, நேராக உட்கார்ந்து, முதுகை தாங்கி வளைந்து கொடுக்கும் புஷ்பேக் சேர்களை பயன்படுத்தவும். அதேநேரத்தில், எவ்வளவு அதிக பணிகள் இருந்தாலும் 30-40 நிமிடங்களுக்கு ஒரு முறை நடைப்பயிற்சி மேற்கொள்வது முதுகு வலி ஏற்படாமல் தடுக்கும்.

உடற்பயிற்சி:

உட்கார்ந்தே வேலை செய்யும் பழக்கம் அல்லது உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது தசைகளை பலவீனப்படுத்துகிறது. இடுப்பின் தசைகள் பலவீனமடையும் போது, ​​அவை முதுகெலும்புக்கு போதுமான ஆதரவை தராது. இது முதுகு வலியை அதிகரிக்கும். தொடர்ந்து யோகா, வாக்கிங் மற்றும் உடற்பயிற்சி போன்ற லேசான பயிற்சிகள் இடுப்பை பலப்படுத்துகின்றன.

எடை தூக்குதல்:

எந்தவொரு உடற்பயிற்சியும் இல்லாமல் திடீரென அதிக பொருட்களை தூக்குவது அல்லது அதிகமாக உடலை வளைத்து கனமான பொருட்களை தூக்குவது போன்றவை முதுகு வலியை ஏற்படுத்தும். உடனடியாக அதிக எடையை தூக்கும்போது முதுகெலும்பில் அழுத்தத்தை ஏற்படுத்தி, தசைப்பிடிப்பை ஏற்படுத்தும். அதன்படி, எந்தவொரு கனமான பொருளையும் ஒருவரின் உதவியுடன் தூக்குவது முதுகு வலி ஏற்படாமல் தடுக்கும்.

தூங்கும் நிலை:

இரவில் தூங்கும்போது தவறான மெத்தையை பயன்படுத்துதல், தவறான முறையில் தூங்குவதும் உங்களுக்கு முதுகுவலியை தரும். மிகவும் மென்மையான அல்லது மிகவும் கடினமான மெத்தை முதுகெலும்பைத் தாங்காது. இது முதுகில் விறைப்பை கொடுத்து, அதிகபடியான வலியை கொடுக்கும். அதன்படி, நல்ல மெத்தையை வாங்குவது மட்டுமின்றி, தரையில் முதுகையை படும்படி தூங்க முயற்சி செய்யுங்கள்.

Follow Us