AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பார்வைக் குறைபாடு ஏற்படுதவை சொல்லும் 3 அறிகுறிகள்? மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

Eye Health Alert: சமீப காலமாக கண் பார்வை குறைபாடு பிரச்னை அதிகரித்து வருகிறது. குறிப்பாக குழந்தைகளும் இந்த பிரச்னையில் பாதிக்கப்படுகிறார்கள். வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவு ஆகியவை இதன் அடிப்படை காரணங்களாக கூறப்படுகின்றன. பார்வைக் குறைபாடு ஏற்படுவதை ஆரம்பத்தில் பொதுவாக 3 அறிகுறிகள் தோன்றும். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

பார்வைக் குறைபாடு ஏற்படுதவை சொல்லும் 3 அறிகுறிகள்? மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 18 Jun 2025 23:41 PM IST

பார்வைக் குறைபாடு பிரச்னை யாருக்கும் எந்த வயதிலும் ஏற்படலாம். இருப்பினும், கண்களைப் பற்றி அலட்சியமாக இருப்பவர்களுக்கு கூடுதல் பாதிப்பு ஏற்படும். லேப்டாப் (Laptop), ஸ்மார்ட்போன் (Smartphone) ஸ்கிரீனில் அதிக நேரம் செலவிடுபவர்களுக்கு இந்தப் பிரச்சனை ஏற்படும் அபாயம் அதிகம். பார்வைக் குறைபாடு ஏற்படுவதற்கான ஆரம்ப அறிகுறிகள் தோன்றும். அவற்றை அடையாளம் காண்பதன் மூலம், பார்வைக் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கலாம். பார்வை பலவீனமடையும் போது சில அறிகுறிகள் வெளிப்படும், ஆனால் அவை பொதுவாக மக்கள் அதனை எளிதாக எடுத்துக்கொள்கிறார்கள். பிரச்னை மிகவும் தீவிரமடையும் போது, ​​நாம் அதற்கான சிகிச்சையை நோக்கி நகர்கிறோம். ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தால், பிரச்னை மோசமடைவதைத் தடுக்கலாம். பார்வைக் குறைபாட்டின் ஆரம்ப அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்.

பார்வைக் குறைபாடு எந்த வயதிலும் ஏற்படலாம். பார்வைக் குறைபாடு ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக அதிகப்படியான நேரம் மொபைல் மற்றும் லேப்டாப்பில் செலவிடுவது,  கண்கள் மீதான கவனக்குறைவு மற்றும் தொற்றுகள் ஆகியவை கண்களில் பாதிப்பு ஏற்படும். கம்ப்யூட்டரில் அதிகமாக வேலை செய்பவர்கள் அல்லது நீண்ட நேரம் மொபைல் பார்ப்பவர்களுக்கு, கண்கள் பலவீனமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். பார்வையை இயல்பாக்குவதற்கு கண்ணாடிகளும் மிகவும் உதவியாக இருக்கும். இருப்பினும், சில நடவடிக்கைகள் சரியான நேரத்தில் எடுக்கப்பட்டால், கண்ணாடி அணிவதைத் தவிர்க்கலாம்.

பார்வைக் குறைபாடு ஏற்படுபவர்களுக்கு தோன்றும் 3 அறிகுறிகள்

பார்வை பலவீனமடையும் போது மூன்று முக்கிய அறிகுறிகள் வெளிப்படும் என்று மூத்த கண் நிபுணர் டாக்டர் நரேந்திர குமார் கூறுகிறார்.

  1. பார்வை மங்கலாகும்போது, ​​கண்கள் கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படும். இந்த நிலை தற்காலிகமாக இருக்கலாம் அல்லது மிகவும் கடுமையான பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம்.
  2. கண்களில் வலி மற்றும் சோர்வு உணர்வு. இது நீண்ட நேரம் கணினியில் படித்த பிறகு அல்லது வேலை செய்த பிறகு நிகழ்கிறது.
  3. இது தவிர, தலைவலி என்பது பார்வைக் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கும்.

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால், மருத்துவரை அணுகுவது முக்கியம். மருத்துவர் உங்கள் கண்களைப் பரிசோதித்து, தகுந்த ஆலோசனை வழங்குவார். பல சந்தர்ப்பங்களில், இந்தக் குறைபாட்டை மருந்துகளால் குணப்படுத்த முடியும், சில சமயங்களில் கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் ஏற்படும். சிலர் வீட்டு வைத்தியம் மற்றும் ஆயுர்வேத வைத்தியங்களையும் முயற்சிப்பார்கள். இருப்பினும் முதலில் கண் மருத்துவரை அணுகி பிரச்னை என்ன என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு முடிவெடுக்க வேண்டும்.

Follow Us